அதன் தொடர்ச்சியில், இந்த வாரம் 124வது கூட்டமாக.... சனிக்கிழமையன்று (21/10/2023) காலை 10.30 மணியளவில் ஜூம் வழிக் கூட்டத்தை நடத்தினோம்.
"Declaration Forms ITC 01 & ITC 02 under GST" தலைப்பில் நமது GSTPS சொசைட்டியின் பொருளாளர் எஸ். செல்வராஜ் அவர்கள் உரையாற்றினார்.
புதிதாக ஒருவர் ஜி.எஸ்.டியில் பதிவு பெறும் பொழுது, அவர் ஏற்கனவே வைத்திருந்த இருப்புக்கு நாம் கிரெட்டி இன்புட்டை எவ்வாறு பதிவு செய்வது? அதற்கான விண்ணப்பம் தான் ITC 01.
ஏற்கனவே தனிநபர் தொழிலுக்கு ஜி.எஸ்.டி பதிவு பெற்று செய்யும் பொழுது, புதிதாக ஒரு பார்ட்னரை இணைக்கும் பொழுது, நிறுவனத்திற்கான பான் எண்ணை வைத்து புதிய ஜி.எஸ்.டி எண் பெறுவோம். அந்த சமயத்தில் ஏற்கனவே இருக்கும் இருப்புக்கான (Stock) இன்புட்டை (Credit Input) புதிய நிறுவனத்திற்கு பெறுவதற்கு ITC 02.
என எப்படி பதிவு செய்வது? என்பதையும் பிபிடிகள் மூலம் விளக்கினார். ITC 03, ITC 04 விண்ணப்பங்களும் இருக்கின்றன. அதை அடுத்து வருங்காலத்தில் விளக்குவோம் என சொல்லி உரையை முடித்தார்.
நமது உறுப்பினர்களோடு, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும் கலந்துகொண்டார்கள். அவர்கள் எழுப்பிய சந்தேகங்களுகும் தெளிவாக பதிலளித்தார்.
பிபிடியை இங்கு பகிர்கிறோம். பயன்படுத்திக்கொள்ளுங்கள். தங்கள் கருத்துகளையும் தெரிவியுங்கள்.
நன்றி.
- GSTPS
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
No comments:
Post a Comment