Monday, January 29, 2024

GSTPS : நேரடிக்கூட்டம் சிறப்பாக நடந்தேறியது!


வணக்கம். மாதத்தின் இறுதி சனிக்கிழமையன்று (27/01/2024) சொசைட்டி சார்பாக நடத்தப்படும் நேரடிக் கூட்டம் சிறப்பாக நடந்தேறியது.

 

தலைவர் செந்தமிழ்ச்செல்வன் அரங்குகிற்குள் வந்து அமர்ந்ததும், ”காலையில் இருந்தும், வரும் பொழுதும், வெளியூர் செல்வது, நெருக்கடியான வேலை, சொந்தத்தில் ஒரு இறப்பு என பல்வேறு காரணங்களால் வரமுடியவில்லை என பல உறுப்பினர்களிடம் இருந்து அழைப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது” என்றார்.

 


ஜி.எஸ்.டி தொடர்பான மூன்றாவது வகுப்பை தலைவர் செந்தமிழ்செல்வன் அவர்களும்,, ITC4 குறித்து போருளாளர் செல்வராஜ் அவர்களும் விளக்குவதாகவும் இருந்தது.

 

வில்லியப்பன் அவர்கள் ”வழக்கமாக கலந்து கொள்ளும் சிலர் நெருக்கடிகளில் இன்று கலந்துகொள்ளாததால் மூன்றாவது ஜி.எஸ்.டி வகுப்பின் தொடர்ச்சி அவர்களுக்கு விட்டுப்போகும். ஆகையால், அடுத்தமாதம் வகுப்பை எடுங்கள்” என கேட்டுக்கொண்டார். அவரது கோரிக்கையை மற்ற உறுப்பினர்களும், நிர்வாகிகளும் ஏற்றுக்கொண்டனர்.

 


மாற்று ஏற்பாடாக,  வரி ஆலோசகர்களாக நம் தொழிலில் எதிர்கொள்ளும் நடைமுறை பிரச்சனைகள் குறித்து விவாதிக்கலாம் என முடிவு செய்யப்பட்டு கூட்டம் துவங்கியது.

 

”சந்தை மதிப்பு” என எதைச் சொல்கிறோம்? ஒரு வண்டியில் 5 லட்சத்திற்கான பொருட்களை இவே பில்லுடன் கொண்டு போகிறோம். ஒரு அதிகாரி இடையில் பிடித்துக்கொண்டு, 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் இருக்கின்றன என சிக்கல் செய்தால், அதை எப்படி எதிர்கொள்வது என துவங்கிவைத்தார்.

 


இவே பில் சம்பந்தமாக  கடந்த காலத்திலும், இப்பொழுதும் என்னென்ன பிரச்சனைகள் வருகின்றன? இவே பில் குறித்து ஜி.எஸ்.டி தரும் நோட்டீஸ்கள்,   அவற்றை எப்படி எதிர்கொண்டோம்? அதை எப்படி அவர்கள் ஏற்றுக்கொண்டு, நோட்டிசுகளை திரும்ப பெற்றார்கள் என பல்வேறு அனுபவங்கள், வழக்குகள் மூலம்  விரிவாக விவாதிக்கப்பட்டது.

 


ஜி.எஸ்.டி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இரவு செல்லும் வண்டியைப் பிடித்துக்கொண்டு, இன்னும் இரண்டு நாட்களுக்கு விடமாட்டோம் என ஜி.எஸ்.டி சட்டத்தில் இல்லாத விசயங்களை எல்லாம் சொல்லி,  எப்படி ஆதாயம் அடைகிறார்கள்? அதை  ஒவ்வொருவரும் எப்படி எதிர்கொள்கிறோம்? சட்டத்தை தெரிந்துகொண்டு நாம் எதிர்கொள்ளும் பொழுது அதிகாரிகள் எப்படி அதை அணுகுகிறார்கள்? என்பது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

 

இப்படி ஒருவரும் தாங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு விசயங்கள் குறித்தும் கேள்வி எழுப்பினார்கள். விவாதம் நீண்டது. நேரம் போனதே தெரியவில்லை. இன்றைய விவாதம் அருமையாக அமைந்தது. பலருடைய அனுபவங்களை எல்லோரும் தொகுப்பாக கற்றுக்கொண்டோம் என உறுப்பினர்கள் கூறினார்கள்.

 

ஒவ்வொரு நேரடிக் கூட்டத்தின் பொழுதும், இப்படி நடைமுறை சிக்கல்கள் குறித்து விவாதிப்பது அவசியம் என உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தார்கள். முதலில் ஒரு தலைப்பை விவாதித்துவிட்டு, இரண்டாவது தலைப்பாக இதை எடுத்துக்கொள்வோம் என முடிவு செய்யப்பட்டது.

 

இடையே, சுவையான இனிப்பு, காரத்தோடு, சூடான காபியும் வழங்கப்பட்டது.

 


பிப்ரவரி மாதத்தில் என்னென்ன தலைப்புகளில் விவாதிக்க இருக்கிறோம். அதில் உறுப்பினர்கள் என்னென்ன தலைப்புகளில் எடுக்கலாம் எனவும் விவாதித்து முடிவெடுக்கப்பட்டது.  விரைவில் குழுவில் பகிர்வோம்.

 

நம் சொசைட்டியில் புதிதாய் இணைந்த மூன்று உறுப்பினர்கள் - சிவசண்முகம் அவர்கள், இந்திரா பிரியதர்சினி அவர்கள், சண்முகவேல் அவர்கள்  தங்களைப் பற்றிய சுய அறிமுகம் செய்துகொண்டார்கள்.  

 

இந்திரா அவர்கள் CA இறுதி (Final) தேர்வுகளின் தயாரிப்பில் இருக்கிறார். நடைமுறை அனுபவம் வேண்டும் என நம்மோடு இணைந்திருக்கிறார். 

 


சண்முகவேல் அவர்கள் Tally மென்பொருள் நிறுவனத்தில் விற்பனை பிரிவில் இருக்கிறார்.  குழுவில் இன்றோ, நாளையோ இணைந்துவிடுவார்.  உறுப்பினர்கள் Tally குறித்து கேள்விகளை குழுவில் கேட்கலாம். அவர் உரிய பதிலளிப்பார்.

 


இதில் சிவசண்முகம் நம்முடைய மின்னிதழைப் பார்த்து நம்மை தொடர்புகொண்டார் என செயலர் தெரிவித்தார்.   மின்னிதழ் மூலம் இணையும் இரண்டாவது உறுப்பினர் இவர். நாம் முன்னெடுக்கும் செயல்பாடுகளை தொடர்ந்து மற்றவர்களுக்கு தெரிவிப்பதன் மூலம் நம்மோடு இணைகிறார்கள்.  உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் நாம் மாதம் தோறும் கொண்டுவரும் மின்னிதழை தொழில்முறை நண்பர்களுக்கு அனுப்பினால், இன்னும் நமது உறுப்பினர் வட்டம் பெருகும். அதை கவனத்துடன் செய்ய கேட்டுக்கொள்கிறோம்.

 

கூட்டம் நிறைவு பெற்றது.

 

நன்றி.

 

-         - GSTPS


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety/

Sunday, January 28, 2024

75வது குடியரசு தின விழா - பண்பாட்டு விழாவாக சிறப்பாக நிறைவேறியது


வணக்கம்.  நமது சொசைட்டி 75வது குடியரசு தின விழா - பண்பாட்டு விழாவாக  இன்று ஜூம் கூட்டம் வழியாக சிறப்பாக நிறைவேறியது.

 

குடியரசு தினம் என்றால், இந்தியா சுதந்திரம் பெற்று, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிற்கென அரசியலைப்பு சட்டம் ஒன்றை தொகுத்து, அந்த சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாளாகும்.

 


”மூன்றாவது ஆண்டாக இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம்.  வேலை, வேலை என  தொடர்ந்து கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறோம். நாமும், நமது குழந்தைகளும் கொண்டாட்டங்களிலும் ஈடுபடவேண்டும் என்பதற்காக தான் தொடர்ந்து ஏற்பாடு செய்கிறோம். கடந்த ஆண்டை விட, இந்த முறை புதிதாக நிறைய பேர் பங்குபெற்றிருக்கிறார்கள். கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்க இருக்கிறோம். அனைவருக்கும் வாழ்த்துகள்” என கூட்டத்தை  தலைவர் துவங்கிவைத்தார்.

 


நிறைய பாடல்கள், ஒரு ஆடல், சிலம்பாட்டம், யோகா, ஸ்கேட்டிங், கவிதை வாசிப்பு, மாறுவேடம், குறும்படம் என அடுத்தடுத்து நமது உறுப்பினர்களும், பெரும்பாலும் குழந்தைகளும் என அடுத்தடுத்து அசத்தினார்கள். ஒரு செயலை குழந்தைகள் செய்யும் பொழுது, அதன் அழகு பல மடங்கு கூடிவிடுகிறது. பங்குபெற்ற எல்லோருக்கும் வாழ்த்துகள்.

 

துவக்கத்தில் குறைவாக தான் காணொளிகள் வந்தன. ஆனால், நாட்கள் நெருங்க நெருங்க நிறைய காணொளிகள் வரிசையாக வந்து சேர்ந்து இருக்கின்றன.  கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நிகழ்ச்சியாய் இருந்தது. பாலாஜி அருணாச்சலம் அவர்கள் சொன்னது போல அடுத்த வருடம் எல்லாம் மூன்று மணி நேரம், நான்குமணி நேரம் என நீடிக்கவேண்டும் என தன் விருப்பத்தை தெரிவித்தார்.

 


யோகா செய்த குழந்தைகள் எல்லாம் இருப்பதிலேயே சிரமமான ஆசனங்களை எல்லாம் மிக எளிதாய் செய்தார்கள்.   ஆச்சர்யமாக இருந்தது.  யோகா என்பது எல்லா வயதினருக்குமானது.  ஆயிரக்கணக்கான ஆசனங்கள் இருக்கின்றன.  ஆனால் பொது நிகழ்வுகளில் சிரமமான ஆசனங்களை செய்து காட்டுவதால், யோகா என்றாலே பெரியவர்களுக்கானது இல்லை என்று பலர் நினைத்துவிடுகிறார்கள். ஆகையால் உடற்பயிற்சியிலேயே எளிமையானது யோகா தான். அதிக பலன்கள் தருவதும் யோகா தான்.

 

கைலாசமூர்த்தி அவர்கள் மண்ணை நேசித்து அவர்கள் வாசித்தார். முத்து அவர்கள் ஜி.எஸ்.டி படுத்தும் பாடுகளை கவிதையாய் வாசித்த பொழுது, கோவையில் இருந்து கலந்துகொண்ட மூத்த வரி ஆலோசகர் நஜூமுதீன் அய்யா அவர்கள் ஜி.எஸ்.டி குறித்து சொன்ன வரிகள் தான் நினைவுக்கு வந்தன

 


சந்திரசேகர் அவர்கள் தன் பிள்ளைகள் விளையாட்டில் சாதிக்கவேண்டும் என்பதற்காகவே தான் வரி ஆலோசகராக மாறினேன் என சொன்ன பொழுது, அவருடைய அக்கறை புரிந்தது.  தன் பெண்ணை ஒரு பிரபல கல்லூரியில் சேர்க்கும் பொழுது, பெரிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்கள் பயன்படவில்லை.  விளையாட்டு தான் பெரிய உதவி செய்தது என்றார். அதே போல விளையாட்டு, பிள்ளைகளிடம் ஒரு ஒழுங்கை கொண்டு வந்துவிடுகிறது. ஆகையால், விளையாட்டில் ஈடுபட்டால், படிப்பில் டல்லாகிவிடுவார்கள் என்பது கிடையாது. அது சமூகத்தில் நிலவும் ஒரு கற்பிதம் (Myth) என்றார்.

 

ஒரு மாணவரின் குறும்படம் அருமை. அதன் கருவிலும், வடிவத்திலும் செய்நேர்த்தியுடன் இருந்தது.  அவர் இயல்பில் அதிகம் பேசாதவர் என்றார்கள். ஆனால், அவருடைய படைப்பு அவரைப் பற்றி பேச வைத்திருக்கிறது.  குழந்தைகளை புரிந்துகொண்டு, அனுசரணையாக கையாளுங்கள் என்பது தான் சாரமாக இருந்தது.  காலம் மாறுகிறது. பெற்றோர்கள் தங்கள் விரும்பும்படி தங்கள் பிள்ளைகளிடம் மாற்றம் கொண்டுவரவேண்டுமென்றால் கூட தங்களுடைய பழைய அணுகுமுறையை மாற்றியே ஆகவேண்டும்.

 

ஒவ்வொரு குழந்தையையும் அறிமுகப்படுத்தி, சிறப்புகளைப் பாராட்டி, இறுதிவரை நிகழ்ச்சியை தொய்வில்லாமல் கொண்டு சென்றார் பொருளாளர் செல்வராஜ்.

 

இரண்டு மணி நேர நிகழ்ச்சி என்றாலும் இந்த நிகழ்ச்சிக்காக காணொளிகளை வாங்கி, அதன் தொழில்நுட்ப சிக்கல்களை களைந்து, அதை வரிசைப்படுத்தி, தில்லியில் குடியரசு தின விழா நடத்துவதற்கு முன்பு ஒரு சோதனை ஓட்டம் பார்ப்பார்கள். அது போல இரண்டு நாட்கள் நடத்தி சரிப்பார்த்தது என நிர்வாகிகள் இதற்காக நிறைய நிறைய உழைத்திருக்கிறார்கள்.

 

கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி.

 

-     -   GSTPS

 

 தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety/

 

 

 

Wednesday, January 24, 2024

குடியரசு தின பண்பாட்டு விழா! அன்புடன் அழைக்கிறோம்! கலந்துகொள்ளுங்கள்!


வணக்கம்.  கடந்த இரண்டு ஆண்டுகளாக குடியரசு தினத்தை ஒட்டி, பண்பாட்டு விழாவாக நமது சொசைட்டி சார்பாக சிறப்பாக நடத்திவருகிறோம்

 

அதன் தொடர்ச்சியில், இந்த ஆண்டும் நமது உறுப்பினர்கள், அவர்களின் குடும்பத்தினர்,  குறிப்பாக குழந்தைகள் உற்சாகமாக தங்கள் நுட்பமான திறமைகளை காட்ட இருக்கிறார்கள்.

 

ஆடுகிறார்கள். பாடுகிறார்கள். யோகா செய்கிறார்கள்.  குறும்படம் காட்டுகிறார்கள் என பல விதங்களிலும் தங்களின் ஆற்றலை  உற்சாகமாக அரங்கேற்றுகிறார்கள்.

 

விழாவில் கலந்துகொள்ளுங்கள்! குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள்.

 

நன்றி.


- GSTPS


GST PROFESSIONALS SOCIETY is inviting you to a scheduled Zoom meeting.


Topic: "GSTPS 3rd REPUBLIC DAY CULTURAL PROGRAM" 

Time: Jan 26, 2024 10:30 AM Mumbai, Kolkata, New Delhi


Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/6625536356?pwd=QnpvVWdYZERXVHAvRDkveXpMM3NyZz09&omn=85627501208


Meeting ID: 662 553 6356

Passcode: REP26124


---


One tap mobile

+16469313860,,6625536356#,,,,*69432350# US

+19294362866,,6625536356#,,,,*69432350# US (New York)


---


Dial by your location

• +1 646 931 3860 US

• +1 929 436 2866 US (New York)

• +1 301 715 8592 US (Washington DC)

• +1 305 224 1968 US

• +1 309 205 3325 US

• +1 312 626 6799 US (Chicago)

• +1 253 215 8782 US (Tacoma)

• +1 346 248 7799 US (Houston)

• +1 360 209 5623 US

• +1 386 347 5053 US

• +1 507 473 4847 US

• +1 564 217 2000 US

• +1 669 444 9171 US

• +1 669 900 6833 US (San Jose)

• +1 689 278 1000 US

• +1 719 359 4580 US

• +1 253 205 0468 US


Meeting ID: 662 553 6356

Passcode: 69432350


Find your local number: https://us02web.zoom.us/u/kDtyqOinI


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety/

Monday, January 22, 2024

நமது GSTPS தளம் வெற்றிகரமாக 5000 பார்வைகளை தொட்டிருக்கிறோம்!


GSTPS துவங்கி ஐந்தாம் ஆண்டு துவக்க விழாவின் பொழுது சொசைட்டிக்கென ஒரு தளத்தை கடந்த ஜூன் 2023 மாதம் துவங்கினோம். அதற்குள் 5000 பார்வையாளர்களை சென்றடைந்திருக்கிறோம்.  சராசரியாக மாதம் 625 என கணக்கில் கொண்டால், தினமும் 20க்கும் மேற்பட்டவர்கள் பார்க்கிறார்கள் என புரிந்துகொள்ளலாம்.

 

இந்தத் தளம்  நிர்வாகிகள், பேச்சாளர்கள், உறுப்பினர்கள், பொதுப்பார்வையாளர்கள் என அனைவரின் பங்களிப்பில் தான் உற்சாகமாக பயணிக்கிறது.

 

வாராந்திர கூட்டங்கள் குறித்த அறிவிப்பு, கூட்ட அனுபவங்களையும், பேச்சாளர்கள் தயாரித்து விளக்கும் பிபிடிகளையும், GSTPS தலைவர் செந்தமிழ்செல்வன் அவர்கள் பிற அமைப்புகள் நடத்தும் கூட்டங்களில் கலந்துகொண்டு பேசும் பொழுது, அதற்கான பிபிடிகளையும்,  கூட்டத்தின் காணொளிகளை யூடியூப்பில் பகிர்ந்த பிறகு அதற்கான சுட்டிகளையும்  தளத்தில் பகிர்கிறோம்.

 

இப்படி மாதம் குறைந்தபட்சம்  சராசரியாக எட்டு பதிவுகளை இடுகிறோம்.  ஜூன் 2023 துவங்கி,  இந்த மாதம் ஜனவரி 2024 வரை என ஆறு மாதங்களில் 76 பதிவுகளை பகிர்ந்திருக்கிறோம்.

 

தளத்தை இதுவரை 17 பேர் பின்தொடர்கிறார்கள்.  இப்படி பின் தொடர்வர்களுக்கு நாம் ஒரு பதிவை வலையேற்றும் பொழுது அவர்களுடைய மின்னஞ்சலுக்கு உடனடியாக ஒரு அறிவிப்பை தளம் அவர்களுக்கு அனுப்பி வைத்துவிடும்.

 

யூடியூப், பேஸ்புக் போன்ற  சமூக வலைத்தளங்களை விட முந்தைய தலைமுறையைச் சார்ந்தது தான் பிளாக் ஸ்பாட் தளம். துவங்கிய காலத்தில் உலகம் முழுவதும்  இருக்கிற பிரபலங்களும், மக்களும் தங்கள் உணர்வுகளை பகிர  இது போன்ற தளங்களைத் தான் பெரும்பாலும் பயன்படுத்தினார்கள்.  பின்னால் தான் யூடியூப், பேஸ்புக் மற்றவைகளும் ஒன்றன் பின் ஒன்றாக வந்தது.  

 

வலைத்தளம்  யூடியூப், பேஸ்புக்கை விட பாதுகாப்பானது என சொல்லலாம். யூடியூப்பும், பேஸ்புக்கும் நன்றாக கல்லாக்கட்டுவதால், முழுக்க முழுக்க அவர்களுடைய கட்டுப்பாட்டுடன் இயங்குகிறது. ஆகையால்  காபி ரைட் பிரச்சனை, பேஸ்புக்கில் யாரேனும் புகார் எழுந்தால், உடனே முழுவதுமாய் தடை செய்துவிடுகிறார்கள். பழைய செய்திகள், நொடிப்பொழுதில் புகைப்படங்கள் எல்லாமும் காணாமல் போய்விடும் அபாயம் இருக்கிறது. வலைத்தளத்தில் அந்த பிரச்சனை காத்திரமாய் இல்லை. ஆகையால்,  நமது சொசைட்டியின் செயல்பாடுகள் குறித்த ஆவணக் காப்பகமாக எப்பொழுதும் செயல்படும்.

 

நமக்கென ஒரு தளத்தை உருவாக்கினால், நம் வசதிக்கேற்ப இன்னும் வண்ணமயமாய் உருவாக்கலாம்.  இன்னும்  தேவைக்கேற்ப பல வசதிகளை அதில் கொண்டு வரலாம். நம் சொசைட்டியின் வளர்ச்சியில் பல நூறு உறுப்பினர்கள் இணையும் பொழுது அப்படி ஒரு தளத்தின் தேவை எதிர்காலத்தில் தேவைப்படும். அது வரை  இந்த வலைத்தளம் நமக்கு போதுமான வசதிகளை இலவசமாக தருவதால், இதுவே நமது பொருளாதார ஆரோக்கியத்திற்கு நல்லது.

 

நமது வாடிக்கையாளர்கள், தொழில்முறை நண்பர்கள் ஏதேனும்  ஒரு தலைப்பில் சந்தேகம் கேட்டால், சுருக்கமாக பதில் சொல்வதோடு, தளத்தில் அது தொடர்பான பதிவு இருந்தால், அவர்களுக்கு  அந்தச் சுட்டியை அனுப்பி வைத்து படிக்க வைக்கிறோம்.

 

இப்படி இந்தத் தளத்தை நமது உறுப்பினர்களும், பொது வெளியில் உள்ளவர்களும் தங்களது தொழில் தேவைக்கு அடிக்கடி பயன்படுத்தும் பொழுது தான் அதனுடைய உண்மையான வெற்றி இருக்கிறது. ஆகையால் இந்த தளத்தை தொழில்முறை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.  தொழிலில் சுய முனைப்புடன் இருப்பவர்கள் இப்படி ஒரு தளம் இருப்பது தெரிந்தால், ஆர்வத்துடன் தொடர்ந்து பயன்படுத்திக்கொள்வார்கள்.  நம்மோடு இணைந்து பயணிக்கவும் அவர்கள் நிச்சயம் விரும்புவார்கள்.

 

இந்த தளம் உங்களுக்கு எப்படி பயன்படுகிறது? இன்னும் ஆரோக்கியமாக என்னென்ன செய்யலாம் என ஆலோசனைகள் தந்தால் நல்லது. இன்னும் உற்சாகமாக பயணிக்கலாம்.

 

-        -  GSTPS

        தளம் : https://gstprofessionalssociety.blogspot.com


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856


மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety/


Sunday, January 21, 2024

EPF : தொழிலாளிகளுக்கான பிரத்யேகமான தளத்தை ஒரு தொழிலாளி எவ்வாறு பயன்படுத்துவது? – அத்தியாயம் 4

 


தொழிலாளிக்கான பிரத்யேகமான பி.எப் தளத்தின் முகவரி

https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/

 

இதற்கு முந்தைய மூன்று அத்தியாயங்களை நமது GSTPS தளத்தில் கீழ்க்கண்ட முகவரியில் சென்று படிக்கலாம்.

https://gstprofessionalssociety.blogspot.com/2023/10/gstps-how-to-use-employee-pf-site.html

https://gstprofessionalssociety.blogspot.com/2023/11/epf-2.html

https://gstprofessionalssociety.blogspot.com/2023/12/epf-3.html


கடந்த அத்தியாயத்தில் நாம் Claim form 31 வரை விரிவாக பார்த்தோம்.

 


Online Services

1.       Claim form 31, 19, 10C & 10D

2.       One member – One EPF account (Transfer Request)

3.       Track Claim Status

4.       Download Annexure K


இந்த அத்தியாயத்தில் Claim Form 19 குறித்து விரிவாக பார்க்கலாம்.

 


இந்த விண்ணப்பம் என்பது நாம் நம்முடைய பி.எப் கணக்கில் செலுத்திய மொத்தப் பணத்தையும் திரும்ப பெறுவதற்கான விண்ணப்பம் ஆகும்.

 

முழுமையாக திரும்ப பெறுவது என்பது இரண்டு சமயங்களில் சாத்தியப்படும். 

1. தொழிலாளி தன்னுடைய பணிக்காலம் முழுவதும் வேலை செய்து, ஓய்வு பெறும் காலமான 58 வயது நிறைவு பெற்றதற்கு பிறகு விண்ணப்பித்து வாங்குவது. 

2. ஒரு நிறுவனத்தில் வேலை செய்து, வேலையில் இருந்து நின்ற பிறகு இன்னொரு நிறுவனத்தில் இரண்டு மாதம் வரை இணையாத பொழுது, அதுவரைக்கும் நாம் செலுத்திய பணத்தை முழுவதுமாக திரும்ப பெறுவது.

 

வருங்கால வைப்புநிதி திட்டம் என்பது ஓய்வு பெறும் காலத்தில் தொழிலாளிக்கு பெரிய உறுதுணையாக இருக்கும் என்ற தொலைநோக்கு திட்டத்தில் தான் உருவாக்கப்பட்டது. ஆனால், பல தொழிலாளர்கள் பல்வேறு காரணங்களை முன்வைத்து,  ஒரு குறிப்பிட்ட இடைவெளிகளில் பணத்தை திரும்ப பெறுகிறார்கள்.

 

வருமானம் வரும் பொழுதும், ஆரோக்கியமாக இருக்கும் காலத்திலேயே வருங்கால வைப்பு நிதியை பெற்றோம் என்றால், ஆரோக்கியம் குறைவாக, வருமானம் இல்லாத ஓய்வு பெறும் வயதில் பணத்தேவை என்பது நிறைய இருக்கும். அப்பொழுது என்ன செய்வோம் என தொழிலாளர்கள் நிதானமாக யோசிக்கவேண்டும்.

 

விண்ணப்பிப்பதற்கான தேவையான அம்சங்கள்.

 

1. தொழிலாளியின் ஆதார் இணைக்கப்பட்டிருக்கவேண்டும். அது நிறுவனத்தினரால், டிஜிட்டல் கீ கொண்டு அங்கீகரிக்கப்பட்டு இருக்கவேண்டும்.

 

(ஒரு தொழிலாளிக்கு ஆதார் இல்லையென்றால் என்ன செய்வது? ஆதார் இல்லாமல் இப்பொழுது யாரும் இருக்கமுடியாது. என முடிவெடுத்து, அப்படி இருந்தால், பி.எப் திட்டத்தில் இணைய முடியாத நிலையை கடந்த சில வருடங்களாக உருவாக்கிவிட்டது.)

 

2.       தொழிலாளியின் வங்கி கணக்கு இணைக்கப்பட்டிருக்கவேண்டும்.  அதுவும் நிறுவனத்தினரால்,  டிஜிட்டல் கீ கொண்டு அங்கீகரிக்கப்பட்டு இருக்கவேண்டும்.

 

(அப்பா/கணவர்/மனைவி என இணைப்பு (Joint Account) கணக்காக நிச்சயம் இருக்க கூடாது.  தொழிலாளிக்கு என தனியாக இருக்கவேண்டும். ஆதாரில் உள்ள பெயர், முதல் எழுத்து எல்லாம் வங்கி கணக்கோடு சரியாக ஒத்துப்போகவேண்டும் என்பது முன்நிபந்தனை. அப்படி ஏதாவது வித்தியாசம் இருந்தால் அதனை உரிய முறையில் விண்ணப்பிடித்து சரி செய்துகொள்ளவேண்டும்.

 

3.       நிறுவனத்தில் இருந்து விலகிய தேதியை குறிப்பிட்டு இருக்கவேண்டும்.  இதை நிறுவனமும் செய்யலாம்.  தொழிலாளியும் செய்யலாம். தொழிலாளியே செய்யும் பொழுது சரியான தேதியை குறிப்பிடவேண்டும். தவறாக குறிப்பிடும் பட்சத்தில் அதை சரி செய்வதற்காக அலைய வேண்டியிருக்கும்.

 

4.       ஒரு தொழிலாளி ஒரு நிறுவனத்தில் வேலை செய்தால், இக்கட்டுரையின் படி செய்தால் போதுமானது.  அவரே இரண்டு, மூன்று நிறுவனங்களில் வேலை செய்தவராய் இருந்தால்,  கடைசியாய் வேலை செய்த கணக்கிற்கு முந்தைய கணக்குகளை முறையாக (Transfer) விண்ணப்பித்து ஒரு கணக்காக மாற்றவேண்டும் என்பது மிக அவசியம்.

 

5.       தொழிலாளியின் பான் கணக்கு இணைக்கப்பட்டிருக்கவேண்டும். அதுவும் நிறுவனத்தினரால்,  டிஜிட்டல் கீ கொண்டு அங்கீகரிக்கப்பட்டு இருக்கவேண்டும்.

 

கீழே உள்ளப் படத்தைப் பாருங்கள்.



மேற்கண்ட விவரங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில்,  நாம் பணத்தைப் பெற விண்ணப்பிக்கலாம்.

 

விண்ணப்பத்தை திறந்த பிறகு, அதில் வங்கி விவரத்தை சரி செய்வதற்கு ஒரு ஏற்பாட்டை செய்திருக்கிறார்கள்.  அதை நிரப்பவேண்டும்.

 

அடுத்து, தேவைப்படும், 15G/15H படிவத்தை நிரப்பி, பதிவேற்றவேண்டும்.  இந்த படிவங்கள் இணையத்தில் தேடினால் உடனே கிடைத்துவிடுகிறவை தான்.

 

இறுதியில்  தொழிலாளியினுடைய ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வரும் (One time Password). அதை இட்டு நிரப்பும் பொழுது, விண்ணப்பம் பூர்த்தியடையும்.

 

மேற்சொன்ன எல்லா அம்சங்களும் சரியான பொருந்தும் பட்சத்தில், அதிகப்பட்சம் ஒரு மாதத்திற்குள் பணம் வங்கி வந்துவிடும்.  இல்லையெனில், பி.எப். நிராகரித்துவிடும்.  அதற்குரிய காரணத்தையும் தொழிலாளியுனுடைய பாஸ்புக் தளத்தின் உள்ளே போய பார்த்தால், பி.எப் குறிப்பிடுகிறது.  என்ன காரணம் என்பதை தெரிந்துகொண்டு, சரி செய்து, மீண்டும் விண்ணப்பித்தால், பணம் வந்துவிடும்.

 

இன்னும் வளரும்.

 

இரா. முனியசாமி,
GSTPS உறுப்பினர்
9551291721

 

குறிப்பு : ஏதேனும் சந்தேகம் இருந்தால், அழையுங்கள். தெளிவுப்படுத்துகிறேன். நன்றி.


- GSTPS மாதந்தோறும் கொண்டு வரும் மின்னிதழில் டிசம்பர் மாத இதழில் வெளிவந்தது.

Thursday, January 18, 2024

GSTPS : Our 5th E Magazine - December 2023


அனைவருக்கும் வணக்கம்.   GSTPSயினுடைய ஐந்தாவது மாத மின்னிதழை  வெளியிட்டு உள்ளோம்.  GSTPS உறுப்பினர்களும், பொதுவெளியில் உள்ளவர்களும் பயன்படுத்திக்கொள்ளட்டும் என எங்களது தளத்தில் வெளியிடுகிறோம்.


டிசம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி, வருமான வரியில் நடந்த முக்கிய அறிவிப்புகளையும், வழக்குகளையும் தொகுத்து தந்துள்ளோம். வருங்கால வைப்பு நிதியில் தொழிலாளர்களுக்கான பி.எப். தளத்தில் உள்ள அம்சங்கள் என்னென்ன என்பதை விரிவாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறோம்.


படியுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்.


நன்றி.


-     -   GSTPS
































தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety/