Thursday, December 21, 2023

EPF : தொழிலாளிகளுக்கான பிரத்யேகமான தளத்தை ஒரு தொழிலாளி எவ்வாறு பயன்படுத்துவது? – அத்தியாயம் 3


தொழிலாளிக்கான பிரத்யேகமான பி.எப் தளத்தின் முகவரி


https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/

 

முதல், இரண்டாவது அத்தியாயங்களை நமது GSTPS தளத்தில் கீழ்க்கண்ட முகவரியில் பார்க்கலாம்.

https://gstprofessionalssociety.blogspot.com/2023/10/gstps-how-to-use-employee-pf-site.html

https://gstprofessionalssociety.blogspot.com/2023/11/epf-2.html

 

இரண்டாவது வரிசையில்….

Basic Details

Contact Details

KYC

E Nomination

Mark Exit

 என ஐந்து வகைகள் வரிசையாக இருக்கும்.


கடந்த மாத கட்டுரையில் E Nomination வரைப் பார்த்தோம்.  அந்த வரிசையில் கடைசியில் இருப்பது Mark Exit.

Mark Exit
ஒரு தொழிலாளி  ஒரு நிறுவனத்திலிருந்து விலகும் பொழுது விலகும் 
தேதியை பதிவு செய்வது அவசியம். முன்பு நிறுவனம் மட்டுமே 
தொழிலாளி விலகும் தேதியை பதிவேற்றும் வசதி இருந்தது.  சில 
சமயங்களில் நிறுவனம் மூடிவிடும் பொழுதோ,  தொலைபேசியில்  
விலகும் தேதியை பிஎப் தளத்தில் பதியுங்கள் என தெரிவிக்கும் 
பொழுதோ, நிறுவனத்தில் வேலை செய்பவர்கள்  வேறு வேறு 
காரணங்களினால்  பதிவேற்ற தாமதம் செய்கிறார்கள். 
 
தொழிலாளி வேலையில் இருந்து விலகும் தேதியை தளத்தில் 
பதிவு செய்யவில்லை என்றால், தொழிலாளியால், அடுத்த 
இரண்டு மாதத்திற்கு பிறகு  பி.எப். பணத்தைப் பெற விண்ணப்பிக்க 
முடியாது. ஆகையால், நிறுவனம் செய்கிற தாமதத்தால் பணத்தை 
பெற முடியாத சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இதில் உள்ள 
சிக்கல்களை புரிந்துகொண்டு,  சமீப காலத்தில் தொழிலாளியே 
விலகும் தேதியை கொடுக்கும் வசதியை ஏற்படுத்தியிருக்கிறார்கள். 
 
விலகும் தேதியை நினைவில் இருந்து அதை பதிவேற்றாமல், 
விலகிய தேதியை பி.எப் பாஸ் புத்தகம் கொண்டு சரிப்பார்த்து, 
சரியாக பதிவேற்றவேண்டும். தவறான தேதியை குறிப்பிட்டோம் 
என்றால், அதைத் திருத்துவதற்கு உரிய விண்ணப்பத்தில் 
நிறுவனத்தின் அனுமதி வாங்கி, உரிய ஆவணங்களுடன் 
விண்ணப்பம் கொடுத்து தான் சரி செய்ய முடியும்.  நிறைய 
அலைச்சலாகிவிடும். ஆகையால் கூடுதல் கவனத்துடன் பதிவு 
செய்யவேண்டும்.

Change Password

தளத்தில் அடுத்து உள்ளது கடவுச்சொல்லை மாற்றுவதற்கான வசதி.  முன்பெல்லாம் ஒரே UAN, ஒரே கடவுச்சொல் இருந்தால் நீண்ட காலத்திற்கு போதுமானதாக இருந்தது.  இப்பொழுது பி.எப் தளம் என்பது பணம் சம்பந்தப்பட்டது என்பதால், கடவுச்சொல் என்பது மிகவும் முக்கியமானதாக மாறிவிட்டது. ஆகையால் அடிக்கடி மாற்றிக்கொள்ளுங்கள் என பி.எப் தொழிலாளர்களை வலியுறுத்துகிறது.

 

மாற்றுவதற்கு, பழைய கடவுச்சொல்லை இட்டு, மேலே குறிப்பிட்டதுள்ளது போல அதற்குரிய விதிகளுடன் புதிய கடவுச்சொல்லை இரண்டுமுறை முறை பதிவு செய்து, ஆதார் ஓடிபி பெற்று பதிந்தால், புதிய கடவுச்சொல்லை தளம் ஏற்றுக்கொண்டுவிடும்.

 

அடுத்து தளத்தில் வருவது.


Online Services

1.       Claim form 31, 19, 10C & 10D

2.       One member – One EPF account (Transfer Request)

3.       Track Claim Status

4.       Download Annexure K

 

முன்பு நமது பி.எப் பணம், பென்சன் பணம், கடன் என பி.எப்.லிருந்து பணம் பெறுவதற்கு எல்லாம் விண்ணப்பங்கள் தான் இருந்தன.  தொழிலாளி சம்பந்தப்பட்ட  அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, நிறுவனத்தின் சார்பாக அதிகாரம் பெற்ற நபர் கையெழுத்திட்டு, சீல் வைத்து நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை கையாளும் குறிப்பிட்ட பி.எப் அலுவலகத்தில் ஒப்படைத்தால் ஒரு மாதமும் ஆகும். சில சமயங்களில் கூடுதலாகவும் ஆகும். ஒவ்வொரு முறையும் நேரில் போய் கேட்கவேண்டிய நிலைமை ஏற்படும். நிறைய அலைச்சல் இருந்தது. 

 

சமீபத்திய சில வருடங்களில் பல அம்சங்கள் டிஜிட்டலாகிவிட்டன. ஆகையால், நாம் எங்கிருந்தாலும் ஆண்ட்ராய்டு போனிலோ, கணிப்பொறியிலோ இணையத்தின் உதவியுடன் இப்பொழுது நாம் விண்ணப்பித்துவிடமுடியும்.

 

1.  Form 31  - முன்பணம் மற்றும் கடன் படிவம் (PF Part Withdrawal)

 


நாம் செலுத்திய பி.எப். பணத்தில் இருந்து நெருக்கடியான காலக்கட்டங்களில் முன்பணம், கடன் பெறுவதற்கு பி.எப்பில் வசதிகள் இருக்கின்றன.  அதற்கான நிர்ணயிக்கப்பட்ட அளவு கோல்களை பி.எப் விதிகளை விதித்திருக்கிறது.

 

கீழே ஒரு பட்டியலை உதாரணத்திற்கு தந்துள்ளேன். பாருங்கள்.  இந்த நிபந்தனைகள் அவசியமானவை. அதற்குரிய ஆவணங்களையும் கொடுப்பது அவசியம். 


கொரானா காலத்தில் அரசு  ஊரடங்கு அறிவித்த பொழுது பலருக்கும் வேலை இல்லை. சம்பளம் இல்லை. யாரிடமும் கடனும் பெற முடியாத நிலை என்னும் பொழுது, நாடு முழுவதும் கோரிக்கைகள் எழுந்த பிறகு, பி.எப்.  எந்தவித ஆவணமும் நிர்பந்தம் செய்யாமல் கடன் வழங்கியது. மூன்று மாத சம்பளம் (Basic + DA) அல்லது தொழிலாளி செலுத்திய பி.எப் பணத்தில் 75% இதில் எது குறைவோ அவ்வளவு பெற்றுக்கொள்ளலாம் என்ற நிபந்தனையுடன் அடிப்படையில் கடன் வழங்கியது. இந்தப் பணத்தை திரும்ப செலுத்த தேவையில்லை. நாம் கட்டிய மொத்தப் பணத்தில் இருந்து கழித்துக்கொண்டார்கள்.

 

தளத்தில் இன்னும் சில விவரங்கள் உள்ளன.  அதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

நன்றி.

 

இரா. முனியசாமி,

உறுப்பினர்,

GSTPS


* இந்த கட்டுரை GSTPS வெளியிட்டுள்ள நவம்பர் 2023 மாத மின்னிதழில் வெளிவந்துள்ளது.


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety/

 

No comments:

Post a Comment