Wednesday, November 22, 2023

EPF : தொழிலாளிகளுக்கான பிரத்யேகமான தளத்தை ஒரு தொழிலாளி எவ்வாறு பயன்படுத்துவது? – அத்தியாயம் 2


தொழிலாளிக்கான பிரத்யேகமான பி.எப் தளத்தின் முகவரி


https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/


முதல் அத்தியாயத்தை நமது GSTPS தளத்தில் கீழ்க்கண்ட முகவரியில் பார்க்கலாம்.

https://gstprofessionalssociety.blogspot.com/2023/10/gstps-how-to-use-employee-pf-site.html

 

இரண்டாவது வரிசையில்….

Basic Details

Contact Details

KYC

E Nomination

Mark Exit

 என ஐந்து வகைகள் வரிசையாக இருக்கும்.


இதில் முதலாவது Basic details என்பது பி.எப் தளத்தில் நிறுவனம் ஒரு  தொழிலாளியை இணைக்கும் பொழுது தொழிலாளியின் தனிப்பட்ட விவரங்களை ஆதார் அடிப்படையில் பதிவேற்றம் செய்திருக்கும்.  அதற்கு பிறகு வேறு வேறு காரணங்களினால் அடிப்படையான தகவல்களை ஆதாரில்  மாற்றம் செய்யும் பொழுது, (உதாரணமாய் : பிறந்த தேதி, மாதம், வருடம், பெயரிலேயே திருத்தம்) அதை பி.எப் தளத்திலும் சரி செய்துகொள்ளவேண்டும்.  இல்லையெனில் பி.எப் பணத்தை எடுக்கும் பொழுது இதை சரி செய்த பிறகு தான் பணம் எடுக்க முடியும் என்ற நிலை ஏற்படும்.

 


இதை நாம் விண்ணப்பிக்கும் பொழுது, முதல் நிலையில் நாம் இப்பொழுது பணிபுரியும் நிறுவனத்தின் பார்வைக்கு போகும்.  நிறுவனம் அந்த தகவலை ஆதாரை பெற்று சரிப் பார்த்து, அதை DSC/E Sign கொண்டு ஏற்றுக்கொள்ளும். அதற்கு பிறகு  சம்பந்தப்பட்ட பி.எப். அலுவலகத்தின் பார்வைக்கு செல்லும். அவர்களும் அதை சரிப்பார்த்து… ஏற்றுக்கொண்ட பிறகு, பி.எப்.பில் அடிப்படை தகவல் மாறுபாடுக்குள்ளாகும்.


Contact Details


இதில் தொழிலாளிக்குரிய தொடர்பு மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி கொடுக்கப்பட்டிருந்தால், இந்த இடத்தில் படத்தில் உள்ளது போல தெரியும்.  பி.எப் தொழிலாளியின் ஆதாரோடு இணைக்கப்பட்ட மொபைல் எண்ணையே இங்கும் தருவதற்கு இப்பொழுது வலியுறுத்துகிறது.  சரிபார் (Verify) என அங்கு தெரியும்.  அதை கிளிக் செய்தால், அந்த மொபைல் எண்ணுக்கு ஒரு கடவுச்சொல் வரும். அதை இடும் பொழுது, சரிபார்க்கப்பட்டது (Verified) என்ற நிலைக்கு வரும்.  அதே போல மின்னஞ்சலை சரிபார்ப்பதற்கும் இதையே செய்யவேண்டும்.

 

KYC  Details

பான் கார்டு எண், ஆதார் அட்டை எண் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் அனைத்தும் தேவையான KYC  (Know Your Customer) விவரங்கள். இந்த விவரங்களை பதிவேற்றும் பொழுது (Upload) வேலை செய்யும் நிறுவனத்தின் தளத்திற்கு ஒப்புதலுக்கு செல்லும் (to approve by DSC/Esign).  நிறுவனம் ஏற்றுக்கொண்ட பிறகு, ஏற்றுக்கொள்ளப்பட்டது (Approved) என காட்டும்.

 

ஏன் KYC விவரங்கள் அவசியம்?

ஒரு தொழிலாளிக்குரிய பி.எப் பணம் உரியவர்களிடம் கொடுப்பதில் பி.எப் மிகவும் கறாராக நடந்துகொள்கிறது. அதனால், எல்லா விவரங்களும் சரியாக இருக்கவேண்டும் என்பது  மிக அவசியமானது. பி.எப்பில் உள்ள தரவுகளும் ஆதார், பான் கார்டு, வங்கி விவரங்கள் எல்லாமும் ஒரே சீராக இருக்கவேண்டியது அவசியமாகிறது.  நடைமுறையில், பல தொழிலாளர்களின் ஆதாரில் உள்ள விவரங்கள், பான் கார்டில் உள்ள விவரங்கள், வங்கிப் புத்தகத்தில் உள்ள விவரங்கள் என மூன்றிலுமே நிறைய சின்ன சின்ன வித்தியாசங்கள் இருப்பது சகஜமாக இருக்கிறது. பொதுவாக கவனம் செலுத்துவதில்லை.  அந்த மாற்றங்களை தொழிலாளர்கள் நேரம் ஒதுக்கி, உரிய இடங்களில் விண்ணப்பித்து சரி செய்து சீராக வைத்துக்கொள்ளவேண்டியது அவசியம். இல்லையெனில், பணம் எடுக்கும் பொழுது, இவற்றை எல்லாம் சரி செய்த பிறகு தான் பணம் எடுக்கமுடியும் என்ற நிலை ஏற்படும்.

 



E Nomination


தொழிலாளர்களீன் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கு வைத்திருப்பவர்களின் பலன்களை, கணக்கு வைத்திருப்பவர் திடீரென மரணம்அடைந்தால், அவர்களைச் சார்ந்தவர்களுக்கு மாற்றுவதற்கு -நாமினேஷன் உதவுகிறது.


ஆகையால்,  தொழிலாளியின் துணைவியார்/கணவர்/பிற உறவுகள் குறித்த பெயர், வயது, முகவரி என அடிப்படை விவரங்களையும், புகைப்படத்தையும் பதிவேற்றவேண்டும்.  தளம் கேட்கிற விவரங்களை கொடுத்த பிறகு,  ஆதார் ஓடிபி மூலமாக  E sign யையும் பூர்த்தி செய்யவேண்டும்.

 

நன்றி.

 

- இரா. முனியசாமி,

உறுப்பினர்,

GSTPS

No comments:

Post a Comment