Sunday, June 30, 2024

GSTPS : Our 11th E Magazine - June 2024

 


வணக்கம்.   ஜூன் (2024)  மாத மின்னிதழை கொண்டு வெற்றிகரமாக வந்துள்ளோம்.

 

இந்த இதழில் ஆறு கட்டுரைகள் கொண்டு வந்துள்ளோம்.

 

    1.   Notifications -  Mr. Balahji Arunachalam   Page 11

    2.   GST & Income Tax Case Laws - Mr. S. Senthamil Selvan Page 14

    3.   Section -  Mr. S. Selvaraj - Page 25

    4.   EPF Site – Part IX - Mr. R. Muniasamy – Page 26

    5.   Carried Forward & Set-off Loss - Mr. S Chandramouli, B.Com. A.C.A., Page 33

       6..       Nayak Committee for Working Capital  - Mr. Sunder Ram Kalyaan – Page 39

 

படியுங்கள். உங்கள் கருத்துகளை பகிருங்கள். தொழில்முறை நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.

 

-         GSTPS














































தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety


Friday, June 28, 2024

நமது GSTPS ஐந்தாம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட ஒருநாள் பயணம் மிகச்சிறப்பாக அமைந்தது!


வர்மா ரிசார்ட்ஸ், ஏகாட்டூர் பயணம்

 

வணக்கம்.   கடந்த புதன்கிழமை (26/06/2024) காலையில் எழும்பூரிலும், கோயம்பேட்டிலும் நமது உறுப்பினர்கள் அனைவரும் சரியாக நேரத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.  அனைவரும் உற்சாகமாக வர்மா ரிசார்ட்டிற்கு பயணத்தைத் துவங்கினோம்.  ஒரு இனிப்பும், மிக்சர், (பொருளாளர் செல்வராஜினுடைய அன்பு), பிஸ்கட் பாக்கெட் , கடலைமிட்டாய் நிர்வாகிகள் கொடுத்து வரவேற்றார்கள்.

 


இந்த பயணம் குறித்து பலரிடமும் பேசிய பொழுது பெரும்பாலோர் ஆர்வத்துடன் கலந்துகொள்ள விரும்பினார்கள். தங்கள் சொந்த, அலுவல் நெருக்கடியில் தான் சிலர் வர இயலவில்லை என தெரிவித்தார்கள்.  வருகிறேன் என பணம் செலுத்தியவர்களில் கூட, உடல்நிலை பிரச்சனை, வேறு வேறு காரணங்களினால் சிலர் வர இயலவில்லை என்பது வருத்தம் தான்.

 

நமது ஆசிரியர்களும், புதிய பேச்சாளர்களும்

 

திருவள்ளூர் அருகே இருந்த அந்த ரிசார்ட்ஸை சரியான நேரத்தில் சென்றடைந்தோம்.  அங்கே காலை உணவு அனைவருக்கும் தயாராக காத்திருந்தது.  எல்லோரும் சாப்பிட்டதும்.  நமது கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே துவங்கியது.

 

எல்லோரையும் செயலர் பாலாஜி வரவேற்றார்.  இப்படி ஒரு பயணம் செல்லவேண்டும் என சொன்னதும், இவ்வளவு பேர் கலந்துகொண்டிருக்கிறீர்கள். நன்றி தெரிவித்தார்.

 

கடந்த ஓராண்டில் நாம் நடத்திய கூட்டங்கள் குறித்து,  தலைவர் செந்தமிழ்ச்செல்வன் பேசினார்.  11 நேரடிக்கூட்டங்களும், ஒரு அக்குபஞ்சர் மருத்துவமுகாமும், 26 இணைய வழிக்கூட்டங்களும், உற்சாகமாக நடத்தியிருக்கிறோம். 

 

ஒவ்வொரு மாதக்கூட்டத்தை சரியாக கூட்டியிருக்கிறோம்.  ஒரு வருடத்தின் 52 வாரங்களில் 26 கூட்டங்கள், மாதம் இரண்டு கூட்டங்கள் என சராசரியாக நடத்தியிருக்கிறோம்.  GSTR1, GSTR3B என இறுதி தேதிகளில் மட்டும் கூட்டங்களை தவர்த்திருக்கிறோம். 

 

37 கூட்டங்களில் பேசியவர்கள் மொத்தம் 17 பேர், இதில் 11 பேர் நம்முடைய நிர்வாகிகளும், உறுப்பினர்களுமே என்பது முக்கியமானது. டாலி, டிரேட் மார்க் என சில தலைப்புகளுக்கு மட்டும் வெளியில் இருந்து பேச்சாளர்கள் பேசியிருக்கிறார்கள். இது தவிர்க்கமுடியாதது தான்.

 

இதில் தலைவர் செந்தமிழ்ச்செல்வன் 9 கூட்டங்களிலும், இணைச்செயலர் செண்பகம் 6 கூட்டங்களிலும், துணைத்தலைவர் பாலாஜி அருணாச்சலம் 4 கூட்டங்களிலும், Dr. வில்லியப்பன் 4 கூட்டங்களிலும் பேசி, முன்னிலையில் இருக்கிறார்கள்.  நம்முடைய உறுப்பினர்களையே பேசச்சொல்லி உற்சாகப்படுத்தி, தேவையான உதவிகளை செய்து, பேசியதில்  திருநாவுக்கரசு அவர்களும், முனியசாமி அவர்களும் என இருவர் உருவாகியிருப்பது சிறப்பு.

 

நம்மைப் போல மற்ற சொசைட்டி, அமைப்புகள் நாம் இப்படி நமது உறுப்பினர்களையே பேச வைக்கிறோம் என அறிந்து நம் செயலை வியந்து பாராட்டுகிறார்கள். அவர்களும் அதை அமுல்படுத்த முனைகிறார்கள். தொடர்ந்து செயல்படுவோம்.  

 

உறுப்பினர்கள் தங்களுக்கு தொழில்முறையில் அறிமுகமான இருவரை அறிமுகப்படுத்துங்கள். நாம் இன்னும் உற்சாகமாக செயல்படுவோம் ” என தன் உரையை முடித்தார்.

 

கூட்டங்களை வகைப்படுத்தி, நிர்வாகிகள்  விளக்கி பேசினார்கள்.

 

உறுப்பினர்களின் சுய அறிமுகம்

 


உறுப்பினர்கள் தங்களைப் பற்றி சில வார்த்தைகளில் அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள் என கேட்டுகொண்டதில்… தங்களைப் பற்றியும், சொசைட்டியோடு தங்கள் உறவையும் மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டார்கள்.

 


·         உறுப்பினர் சுபா பேசும் பொழுது, ”நான் ஒரு மருந்து நிறுவனத்தை நடத்தி வருகிறேன். முதலில் ஒருவர் ஜி.எஸ்.டி பார்த்துகொண்டிருந்தார். அப்பொழுது எனக்கு ஜி.எஸ்.டி குறித்து தெரியாது. இந்த சொசைட்டியில் என்னையும் உறுப்பினராக முனியசாமி இணைத்தார். தொடர்ந்து ஜூம் கூட்டங்களில் கலந்துகொண்டதில், இப்பொழுது ஜி.எஸ்.டி குறித்த அடிப்படை அறிவில் ஒரு தெளிவு கிடைத்திருக்கிறது” என்றார்.


·         நம் கூட்டம் இல்லாமல் எல்லா கூட்டங்களிலும் கலந்துகொண்டு கேள்விகள் எழுப்புகிறார். ஒரு நிறுவனத்தில் வேலை செய்துகொண்டு எப்படி இது சாத்தியம்? என அந்த ரகசியத்தைச் சொல்லுங்கள் என கேட்டுகொண்டதில்… கோபாலகிருஷ்ணன் அவர்கள் “தான் ஒரு ஷிப்பிங் நிறுவனத்தில் வேலை செய்கிறேன்.  அன்றைக்கு வேலைகளை அன்றே முடித்துவிட்டு தான் வீட்டுக்கு கிளம்புகிறேன். கூட்டம் என்றால், நிர்வாகத்தில் தெரியப்படுத்திவிடுவேன்.  தொந்தரவு செய்யமாட்டார்கள்.  சில நிறுவனங்களுக்கு  தனிப்பட்ட முறையில் ஜி.எஸ்.டி ஆலோசகராக இருக்கிறேன். அதை வேலை நேரத்தில் செய்யமாட்டேன்.” என தெரிவித்தார்.

 

·    தணிக்கையாளர் சந்திரமெளலி பேசும் பொழுது, “பாலாஜி அருணாச்சலம் என்னுடைய பள்ளிக்கால நண்பர்.  98ல் தணிக்கையாளராக தேறினேன். அதற்கு பிறகு நிறுவனங்களில் பணி செய்தேன்.  இந்த ஆண்டில் தான்  தனியாக தொழில் துவங்கியிருக்கிறேன்.  பலருடைய அறிவும், அனுபவ ஆற்றலும் இணையும் இந்த  சொசைட்டி சிறப்பான செயல்களை செய்கிறது. அதில் நானும் இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி”.

 


·         இன்னும் பலரும் தங்களது அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்கள்.

 

·         நமது கவிஞர் கைலாசமூர்த்தி எப்பொழுதும் கவிதையோடு வருபவர், இந்தமுறை தனது மூத்தமகள் திருமண அழைப்பிதழை கொண்டு வந்து அனைவருக்கும் தந்து, நிச்சயம் கலந்துகொண்டு வாழ்த்துங்கள் என கேட்டுக்கொண்டார்.  சொசைட்டி உறுப்பினர்களை, தங்கள் நெருக்கமன உறவாக,  நண்பர்களாக பார்க்கிறார்கள் என்பதை உணரமுடிகிறது.

 

மதிய உணவும் விளையாட்டுகளும்

 


நேற்று வெயில் ஒன்றும் நம்மை தொந்தரவு செய்யவில்லை.  வானிலையும் நமக்கு சாதகமாக இருந்தது.

 

·         ஒரு சின்ன குதிரை சாரட்டில் இருவர் இருவராக ஜாலியாக பயணம் செய்தோம். சிலர் பேட்மிண்டன்  விளையாடினார்கள். எங்களைப் போன்றவர்கள் வேடிக்கைப் பார்த்தோம். வேடிக்கைப் பார்ப்பது ஒரு சுகம்.

 

·         வழக்கம் போல இரண்டு குழுவாக பிரிந்து பரபரவென கிரிக்கெட் விளையாடினார்கள். ”நாங்க தான் ஜெயிக்கிற குழு. எங்களோடு யார் வருகிறீர்கள்? என சந்திரசேகர் ஜாலியாக துவங்கிவைத்தார்.   முதல் விளையாட்டில், பாலாஜி அருணாச்சலம் ஒரு குழுத் தலைவராகவும், பாலாஜி இன்னொரு குழுத் தலைவராகவும் இருந்தார்கள்.   ஜாலியாக துவங்கிய விளையாட்டு, விளையாட்டாய் இல்லாமல் வடிவேல் சொல்வது போல உக்கிரமாய் விளையாடினார்கள்.  இதில் பாலாஜி அருணாச்சலம் அவர்களுடைய குழு வென்றது. 

 


·         இரண்டாவது விளையாட்டில், குழு தலைவர்களாக விக்கியும், ஜெயப்பிரகாசும் தேர்வானார்கள்.  இந்த குழுவில் விக்கி குழு வென்றது.

 

·         தணிக்கையாளர் தீபக் அவர்கள் காணொளி எடுப்பதில் உதவியாக இருந்தாலும், அவர் நினைப்பெல்லாம் கிரிக்கெட்டில் தான் இருந்தது. .  நமது உறுப்பினர்களில் ரசனையோடும், ஆற்றலோடும்  கிரிக்கெட் விளையாடுபவர்கள் நிறைய இருக்கிறார்கள். இவர்களை வைத்து ஒரு கிரிக்கெட் குழுவே நிச்சயம் உருவாக்கலாம்.

 


மதிய உணவு நிறைய வகைகளுடன் சிறப்பாக இருந்தது. அனைவரும் உணவருந்தினோம். செண்பகம் சொந்த செலவில் சுவையான மாம்பழ துண்டுகள் அனைவருக்கும் வழங்கினார்.

 

அரங்கிற்குள்ளேயே விளையாட்டுகள் துவங்கியது.  எல்லோரையும் வரிசையாக உட்காரவைத்து பந்து விளையாட்டில்,  “தோலில் வாட்ச் ஸ்ட்ராப் வெளியேறுங்கள். (வாட்ச் கட்டுறதெல்லாம் ஒரு தப்பா சார்!) பக்கத்தில் உள்ளவர்கள் வெளியேறுங்கள். பெல்ட் போட்டவர்கள் வெளியேறுங்கள். (சீனிவாசன் விளையாட்டு துவக்கத்திலேயே பெல்டை கழட்டி கீழே வைத்துவிட்டார். அடுத்தமுறை மோதிரம் போடமாட்டேன் என அறிவித்தார்.)  இதில் சாதிக்பாட்சா முதல்பரிசை தட்டிச்சென்றார். இரண்டாவது இரண்டு பரிசுகளை சந்திரசேகர், விக்கி பெற்றனர்.

 


அடுத்த விளையாட்டில் சொன்னதற்கு மாறாக செயல்படவேண்டும்.  கோபாலகிருஷ்ணன் எப்பொழுதும் மாற்று வழியில் வித்தியாசமாக செல்பவர் என்பதால், இந்த விளையாட்டில் முதல் பரிசை திறமையாக தட்டிச்சென்றார்.

 

அங்கிருந்த நீச்சல் குளம் வழக்கமானது அல்ல!  குளோரின் கலக்காதது. (பூண்டி ஏரி உபயம்?)  ஆகையால், பலரும் தவ்வி குதித்தும், கிண்டல் செய்துகொண்டு நிறைய நேரம் விளையாடினார்கள். அருகிலேயே (மோட்டார் இயக்கினால் இயங்கும்) ஒரு செயற்கை அருவியில் குளித்து மகிழ்ந்தோம்.

 


அடுத்து உறியடி விளையாட்டில் சிலர் கலந்துகொண்டதில், கோபாலகிருஷ்ணன், விக்கி இருவரும் கண்ணை இறுக்கமாக கட்டிய பிறகும், சாதுரியமாக விளையாடி வென்றனர்.

 

நமது யூடியூப் சானலுக்கான காணொளிகள்

 

இரண்டு நாள்களுக்கு முன்பாக நமது சானலுக்கு உறுப்பினர்களுடைய சிறிய காணொளிகள் எடுத்து வெளியிடலாமே என தோன்றியது.  ஒரு செல்போன் ஸ்டாண்டை மட்டும் வாங்க சொன்னதில்  விக்கி பொறுப்பாக வாங்கிவந்துவிட்டார்.  காணொளிகள் எடுக்க உதவியும் செய்தார்.

 

நேற்று நமது உறுப்பினர்களிடம் இது குறித்து தெரிவித்த பொழுது, பலரும் உற்சாகமாக முன்வந்து பேசினார்கள்.  யாருடைய உரையும் எடிட் செய்ய தேவையில்லாமல், எதார்த்தமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் பேசினார்கள்.

 

நேற்று எடுக்கும் பொழுது தான்  சில விசயங்களை கற்றுக்கொண்டோம்.  ஒரு நல்ல மைக் வேண்டும். பேசும் பொழுது தேவையில்லாத சத்தங்களை வடிகட்டும் ஒரு ஆப் வேண்டும்.   ஆகையால், யாருடைய உரை சரியாக பதிந்துள்ளதோ அவற்றை ஒவ்வொன்றாக நமது சானலில் வரும் நாட்களில் வெளியிடுவோம். மற்றவர்களுடைய உரையை உரிய ஏற்பாடுகள் செய்து, மீண்டும் நேரடி கூட்டத்தில் சந்திக்கும் பொழுது பதிந்து வெளியிடலாம். ஆகையால் அதுவரை பொறுத்துக்கொள்ளுங்கள்.  தணிக்கையாளர் தீபக் குமார் தானாக முன்வந்து உதவி செய்தார். சில விசயங்களை கற்றும் கொடுத்தார்.  அவருக்கு நன்றி.

 

அழகான குடை

 


கடந்த முறை சொசைட்டி சார்பாக கீசெயின் ஸ்டாண்ட் வழங்கினோம். இந்த முறை பரிசாக *சொசைட்டி பெயர் பொறித்த அழகான குடையை  கலந்துகொண்ட அனைவருக்கும் வழங்கினோம்.  மற்ற உறுப்பினர்கள் பொருளாளர் செல்வராஜ் அவர்களை தொடர்புகொண்டால் பெற்றுக்கொள்ளலாம்.

 

இனிய பயணம்

 


பயணம் குறித்த கருத்துக்களை கேட்ட பொழுது,  ”பேருந்து ஏற்பாடு சிறப்பு. பயணம் இனிமையாக இருந்தது. இந்த இடத்தை நடத்துபவர்கள்நன்றாக வரவேற்றார்கள்.   உணவு நன்றாக இருந்தது.  இந்த இடமும் நன்றாக இருந்தது.” என பாராட்டினார்கள்.

 

”அடுத்த பயணம் எங்கே போகலாம்?” என கேட்டதற்கு, இரண்டு நாள் பயணமாக போகலாம்.   ஏலகிரியா, ஏற்காடா என கேட்டதில், ஏற்காடு என்பதற்கு நிறைய பேர் வாக்களித்தனர். குடும்பத்தோடு போகலாமா? உறுப்பினர்கள் மட்டுமா? என்பதற்கு சில கருத்துகளை தெரிவித்தார்கள்.   சனி, ஞாயிறு போகலாமா? வார நாட்களில் போனால் கூட்டம் குறைவாக இருக்கும் என சொன்னதற்கும், கருத்து தெரிவித்தார்கள்.

 

நமக்கு விருப்பங்கள் நிறைய இருந்தாலும், குடும்ப உறுப்பினர்களின் விருப்பம், விடுமுறை, விடுப்பு, நிதி, மெனக்கெடல் என பல அம்சங்கள் இதில் இருக்கின்றன.     முயன்றால் பெரும்பாலோரால் கலந்துகொள்ளமுடியும். ஆகையால் அடுத்த ஜூனில் ஏற்காடு போவதற்கான விடுப்பு, விடுமுறை, நிதி எல்லாவற்றிலும் கவனம் கொள்ளுங்கள்.

 

Dr, வில்லியப்பன் *“தங்களுடைய  சொந்த வீட்டு விசேசம் போல, இந்த ஒரு நாள் பயணத்திற்காக, பல நாட்கள் நமது நிர்வாகிகள் அனைத்து வேலைகளையும், திட்டமிட்டு செய்திருக்கிறார்கள். உறுப்பினர்கள் சார்பாக நன்றி” தெரிவித்தார்.

 

நம்மோடு பயணம் செய்வதில் விடுபட்டு போனவர்களில் சண்முகப்பிரியா, செல்வராணி, நீலகண்டன், இலட்சுமி இராமலிங்கம், சண்முகம், வர இயலாத காரணங்களைச் சொல்லி, நிறைய வருத்தம் கொண்டார்கள்.  அடுத்தமுறை நிச்சயம் நம்மோடு கலந்துகொள்வார்கள்.

 

செல்போன், கணினி, நவீன வசதிகள் எல்லாம்  மனிதனுக்கு தினசரி வாழ்வில் நிறைய பயன்பட்டாலும், அதன் இன்னொரு  பக்கம் மனிதர்களுக்குள் இடைவெளியை உருவாக்குவதில் பெரிய பங்கு வகிக்கின்றன. ஒரு வீட்டிற்குள் வாழ்ந்தாலும், தனித்தனியே செல்போன் வழியாக மெய்நிகர் உலகத்துடன் தொடர்புகொண்டு வாழ்கிறோம்.

 


நேரடிக் கூட்டங்கள், இந்த மாதிரி பயணங்கள் நம்மிடையே ஒரு நல்ல பிணைப்பை உருவாக்குகின்றன.  ஆகையால் இந்த மாதிரி கூடுதல்களில் கவனம் கொள்வோம். சொசைட்டியின் உதவியுடன் தொழிற் வாழ்க்கையை ஆற்றலுடன் செய்வதின் மூலம், நமது வாழ்வை மகிழ்வுடன் கொண்டு செல்வோம்.

 

நன்றி.

 

-  GSTPS

 

குறிப்பு :  நேற்று அருண்மொழி,  ”நான் சில கூட்டங்களாக கலந்துகொள்ளமுடியாத நிலை.  நமது கூட்டங்கள் நடந்து முடிந்ததும் அதை தொகுத்து எழுதுவது ஆரோக்கியமாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்” என உற்சாகமூட்டினார்.  ஆகையால் தொடர்ந்து எழுதுவோம். 


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety