அதன் தொடர்ச்சியில், இந்த வாரம் 138 வது கூட்டமாக... சனிக்கிழமையன்று (08/06/2024) காலை 10.30 மணியளவில் ஜூம் வழிக் கூட்டத்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.
தலைப்பு : "Chat GPT Training in Tamil "
அறிவியல் : சாட் ஜிபிடி (Chat GPT) என்னவெல்லாம் செய்யப்போகிறது ?
சாட் ஜிபிடியைக் குறித்து உலகம் முழுவதும் பேசுகிறார்கள். அது செயல்படும் தன்மையை, வளர்ந்து வரும் விதத்தைக் கண்டு வியந்து பேசுகிறார்கள்..அதன் சாதக பாதகங்களை நிறைய விவாதிக்கிறார்கள். குறுகிய காலத்தில் இதன் பயனாளர்களின் எண்ணிக்கை 100 மில்லியன்களையும் தாண்டிவிட்டதாக சொல்கிறார்கள். இன்றைய நான்காம் கட்ட தொழிற்புரட்சி காலத்தில் அறிமுகமாகியுள்ள
புதிய தகவல் தொழில்நுட்பம் இந்தளவிற்கு வேகமாக பரவ காரணம் என்ன?
சாட் ஜிபிடியை கடந்த 2022 நவம்பர் 30-ல்தான் அறிமுகப்படுத்தினார்கள். கடந்த இருபது ஆண்டு வரலாற்றில் அறிமுகப்படுத்திய நாள் துவங்கி பரபரவென மக்களிடம் பரவியதில் முதலிடத்தில் உள்ளது. பத்து லட்சம் பயனாளர்களைப்பெற புகழ்பெற்ற பேஸ்புக்கிற்கு பத்து மாதங்கள் தேவைப்பட்டது. அதே அளவில் பயனாளர்களைப் பெற இன்ஸ்டகிராமிற்கு
இரண்டு மாதங்கள் தேவைப்பட்டது. ஆனால் சாட் ஜிபிடிக்கு ஐந்து நாட்கள் தான் தேவைப்பட்டது. இதிலிருந்து
மக்களிடம் பரவும் வேகத்தைப் புரிந்துகொள்ள முடியும்.
சாட் ஜிபிடி ” கூகுள் கில்லரா ”?
பில்கேட்ஸ்-மைக்ரோசாப்ட் குழுமத்தினரால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சாட் ஜிபிடியை செல்லமாக ”கூகுள் கில்லர்” என அழைக்கிறார்கள். கூகுள் சாட் ஜிபிடியின் வளர்ச்சியைப் பார்த்து எரிச்சலில் இருப்பதாக சொல்கிறார்கள். நம் தேவைக்கான ஒரு கேள்வியை கூகுளில் பதிவிட்டால்… அதற்கு பொருத்தமான பதில்கள், பதில் தரும் தளங்களை கூகுள் தேடித் தருகிறது. அதற்குள் உள்ளே போய் நம் பதிலை தேடி அடைந்துகொள்ளவேண்டும். கிடைக்கவில்லை என்றால், நமது கேள்வியை வேறு வகையில் கேட்கவேண்டும். அதற்கு தகுந்ததையும் கூகுள் தேடித்தரும்.
ஆனால் சாட் ஜிபிடி அப்படியல்ல! நாம் கேட்கும் கேள்விகளுக்கு அதுவே பொருத்தமான பதில்களைத் தருகிறது. நம்மை தேடும் வேலையை சுலபமாக்குகிறது. எனவே பலரும் சாட் ஜிபிடியை நாடுகின்றனர். இதன் காரணமாக கூகுளின் வருமானம் பெரிய அளவில் அடிவாங்கும் என கணக்கிட்டு சொல்கிறார்கள். கூகுளும் சாட் ஜிபிடியைப் போல ஒன்றைக் கண்டுபிடிக்க தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. அதற்கு பெயர் பார்ட் (Bard) என பெயர் வைத்திருக்கிறது. இந்த இறுதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கிறார்கள்.
சாட் ஜிபிடி என்பது என்ன?
சாட் ஜிபிடி என்பது ஒரு மெய்நிகர் ரோபோ. செயற்கை நுண்ணறிவுடன்
இது செயல்படுகிறது. “ஜெனரேட்டிவ் ப்ரீ-ட்ரெய்னிங் டிரான்ஸ்ஃபார்மர்” (ஜெனரேட்டிவ் முன் பயிற்சி மின்மாற்றி) என்ற தொழில்நுட்பம்தான் ஜிபிடி. ஏற்கனவே செயற்கை நுண்ணறிவைப்
பயன்படுத்தும் பல்வேறு வகையான சாட்பார்ட்கள் உள்ளன. படம் வரைவது, புகைப்படங்களை
மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு வகையான செயலிகள் உள்ளன. நமது ரயில்வே தளத்தில் ”உங்களுக்கு உதவி தேவையா? என சாட் பாக்ஸ் திரையில் தோன்றுவதை பார்த்திருப்போம். அவற்றில் இது புதிய வரவு.
சாட் ஜிபிடி என்னவெல்லாம் செய்யும்?
இது மனிதர்களின் எல்லாக் கேள்விகளுக்கும் மனிதர்களைப் போன்றே பதிலளிக்கிறது. எழுதிக் கொடுக்கப்பட்ட பணிகளை செய்கிறது. சரளமாக உரையாடுகிறது. தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு ஆலோசனைகளையும் வழங்குகிறது
உதாரணத்திற்கு
ஒரு கதை கேட்டால்… ஒரு கதை தருகிறது. ”நான் இந்தத் துறையில் இருக்கிறேன். எனக்கு ஒரு ராஜினாமா கடிதம் எழுதி தா!” என்றால், உடனே தருகிறது. கவிஞர் நா.முத்துக்குமார் போல ஒரு கவிதையை எழுதிக் கேட்டால் எழுதி தருகிறது. ரோபோ படத்தின் சிட்டியை போல அனைத்தையும் விரல் நுனிக்கு கொண்டு செல்கிறது. கணினி நிரல்களை எழுதுவது, தவறுகளைக் கண்டறிவது போன்றவையும் கூட இந்த மென்பொருள் கருவியால் சாத்தியம். .ஒரு யூடியூப்பர் தான் தயாரிக்கும் ஒரு காணொளிக்கு ஸ்கிரிப்ட் எழுதுவது போல எழுதி தருகிறது. இவை அனைத்தும் சில வினாடிகளுக்குள் தருவது தான் இந்த சிறப்பு.
சாட் ஜிபிடி எப்படிச் செயல்படுகிறது?
முன்னரே கூறியதுபோல இது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் ஒரு மெய்நிகர் ரோபோ. முழுவதும் டெக்ஸ்ட், அதாவது உரை அடிப்படையிலானது. அதனால் பெருமளவிலான தகவல்களைச் சேமித்து வைக்க முடியும். ஏற்கனவே இருக்கும் வாக்கியங்களைப் புரிந்து கொள்வதற்கான அல்காரிதம்களைப் (Algorithm) பயன்படுத்தி கேள்விகளுக்கு விடை அளிக்கின்றன.
இதற்கு பயிற்சியளிக்கும்போது, சில கேள்விகள் கேட்கப்பட்டு, வல்லுநர்கள் தரும் பதில்கள் உள்ளன. வழக்கமான பயனர்கள் கேட்கும் கேள்விகளில் இருந்தும் இது கற்றுக் கொள்கிறது. அந்த பதில் தவறாக இருந்தால், சரியான பதில் உள்ளிடப்படுகின்றன. ஒரு மொழி எப்படிச் செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளும் வகையில் இதற்குப் பயிற்சியளிக்கப்படுகிறது. அதன்மூலம் கேள்விகளைப் புரிந்துகொண்டு விடையளிக்கிறது.
தற்போதைக்கு செப்டம்பர்
2021 வரையிலான தகவல்கள் மட்டுமே உள்ளீடுகளாக கொடுக்கப்பட்டுள்ளன. எனவே
அதற்குள் தான் நாம் கேள்வி கேட்கமுடியும். 2023 பொங்கலுக்கு வெளிவந்த வாரிசு,
துணிவுப் பற்றியெல்லாம் அதற்கு தெரியாது. சாட் ஜிபிடியை இன்னும் இணையத்தில்
இணைக்கவில்லை. வரும் காலங்களில் இணைத்துவிட்டால், நடப்பு நிலவரங்கள்
வரைக்கும் தொகுத்து சொல்லும்.
சாட் ஜிபிடியின் முதலீட்டாளர்கள்
அமெரிக்காவில் 2015-ல் சாம் ஆல்ட்மேன் மற்றும் எலான் மஸ்க் ஆகியோரால் தொடங்கப்பட்ட ஓபன் ஈஐ என்னும் நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது. வேறு சில காரணங்களால், இதிலிருந்து இலான் மாஸ்க் விலகினார். அதன் பிறகு பில்கெட்சின் மைக்ரோசாப்ட்
நிறுவனம் இந்த நிறுவனத்தில் ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. பிப்ரவரி 2023 வரை இதன் பயனாளர்களின் எண்ணிக்கை 100 மில்லியனைத்
தொட்டுவிட்டது. எனவே, விரைவில் பில்கேட்ஸ் இன்னும் பத்து மில்லியன் டாலர் முதலீட்டை தரப்போவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சாட் ஜிபிடியின் மொழி
சாட் ஜிபிடியில் இப்பொழுது ஆங்கிலம் மட்டும் பயன்படுத்தப்படுகிறது. இதன் வளர்ச்சியில், உலகின் முதன்மையாக இருக்கும் 20 மொழிகளில் அறிமுகப்படுத்த
வாய்ப்பிருக்கிறது என கணக்கிடுகிறார்கள். எதிர்காலத்தில்
ஒரு மனிதனுக்கு ஒரு மொழி தெளிவாய் தெரிந்திருந்தால் போதும். மற்ற மொழி சாட் ஜிபிடி போன்ற தொழில்நுட்பத்தால் நாம் புரிந்துகொள்ளமுடியும்.
எடுத்துக் காட்டாக கூகுளின் ஜி போர்டு என்ற செயலி தமிழில் நான்கு வகையான உச்சரிப்புகளை
தமிழில் எழுத்தாக மாற்றி தருவதைப் போல சாட் ஜிபிடி அனைத்து மொழிகளில் மட்டுமின்றி பல வகையான பேச்சு வழக்குகளையும்
புரிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்படும்.
சாட் ஜிபிடிக்கு கட்டணம் உண்டா ?
சாட் ஜிபிடி இன்னும் முழுமையாக தயாராகவில்லை. தன்னிடம் உள்ள தரவுகளின் படி, அது பதிலளிக்கிறது. சில பதில்கள் தவறாக உள்ளன என சிலர் சொல்கிறார்கள். எனவே, தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள். எனவே இன்றைய தேதி வரை பயன்படுத்துவதற்கு கட்டணம் விதிக்கப்படவில்லை. இதன் வளர்ச்சியில் கட்டணம் விதிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.
இந்த வார ஜூம் கூட்டம்
இந்த வாரம் சாட் ஜிபிடி குறித்து தான் நாம் ஜூம் கூட்டம் திட்டமிட்டுள்ளோம். ஒரு வரி ஆலோசகராக, கணக்காளராக ஜி.எஸ்.டி நோட்டிசுகளுக்கு கடிதம் எழுதுவதில் இருந்து, பல வேலைகளை சாட் ஜிபிடி கொண்டு எப்படி திறம்பட செயல்படமுடியும் என்பதைத் தான் நமக்கு விளக்க இருக்கிறார் நமது உறுப்பினர் CMA செல்வராஜ் அவர்கள்.
ஆகையால் அனைவரும்
கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி.
பேச்சாளர் :
K. செல்வராஜ், CMA,
உறுப்பினர்,
GSTPS
ஜூம் ஐடி : 6625536356
பாஸ்வேர்ட் : 08062024
வாய்ப்புள்ளவர்கள் கலந்துகொள்ளுங்கள். நண்பர்களுக்கும் தெரிவியுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்.
நன்றி.
- GSTPS
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
No comments:
Post a Comment