Thursday, June 27, 2024

GSTPS : கடந்த ஓராண்டு காலத்தில் நாம் நடத்திய கூட்டங்களின் தொகுப்பு


ஐந்தாம் ஆண்டு கொண்டாட்டத்திற்காக 26/06/2024 அன்று ஒரு நாள் பயணம் மேற்கொண்டோம்.



அங்கு GSTPS தலைவர் செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் கடந்த ஓராண்டு கூட்டங்கள் குறித்து பேசியதின் சுருக்கதை இங்கு பகிர்கிறோம்.


கடந்த ஓராண்டில் 11 நேரடிக்கூட்டங்களும், 26 இணைய வழிக்கூட்டங்களும், ஒரு மருத்துவமுகாமும் நடத்தியிருக்கிறோம்.  ஆக ஒவ்வொரு மாதக்கூட்டத்தையும் நாலாவது வாரத்தில் சரியாக கூட்டியிருக்கிறோம்.  


ஒரு வருடத்தின் 52 வாரங்களில் 26 கூட்டங்கள், அதாவது மாதம் இரண்டு கூட்டங்கள் என சராசரியாக நடத்தியிருக்கிறோம்.  10 தேதி, 20 தேதிகளில்  GSTR1, GSTR3B தாக்கல் செய்யும் இறுதி நாட்களில் மட்டும் கூட்டங்களை தவிர்க்கமுடியாதவாறு தவர்த்திருக்கிறோம். 

 

நாம் நடத்திய 37 கூட்டங்களில் பேசிய பேச்சாளர்கள் மொத்தம் 17 பேர், இதில் 11 பேர் நம்முடைய நிர்வாகிகளும், உறுப்பினர்களுமே என்பது முக்கியமானது. டாலி, டிரேட் மார்க் என சில தலைப்புகளுக்கு மட்டும் வெளியில் இருந்து சிறப்பு பேச்சாளர்கள் பேசியிருக்கிறார்கள். இது தவிர்க்கமுடியாதது தான்.

 

இதில் தலைவர் SS -  9 கூட்டங்களிலும், இணைச்செயலர் செண்பகம் 6 கூட்டங்களிலும், துணைத்தலைவர் பாலாஜி அருணாச்சலம் 4 கூட்டங்களிலும் , Dr. வில்லியப்பன் 4 கூட்டங்களிலும்  என முன்னிலையில் இருக்கிறார்கள்.  


நம்முடைய உறுப்பினர்களையே பேசச்சொல்லி உற்சாகப்படுத்தி, தேவையான உதவிகளை செய்து, பேசியதில்  உறுப்பினர்களில் திருநாவுக்கரசு அவர்களும், முனியசாமி அவர்களும் என இருவர் உருவாகியிருப்பது சிறப்பு.

 

நம்மைப் போல மற்ற சொசைட்டி, அமைப்புகள் நாம் இப்படி நமது உறுப்பினர்களையே பேச வைக்கிறோம் என அறிந்து நம் செயலை வியந்து பாராட்டுகிறார்கள். அவர்களும் அவர்களுடைய அமைப்பில் இதை அமுல்படுத்த முனைகிறார்கள். ” 


ஆகையால் புதிய உறுப்பினர்கள் புதிய தலைப்புகளில் பேச முன்வாருங்கள்”  என பேசினார்.


- GSTPS










































தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety

No comments:

Post a Comment