கடந்த சனிக்கிழமையன்று (25/05/2024) நமது நேரடிக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது.
தலைவர் செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் ஜி.எஸ்.டி குறித்த ஐந்தாவது வகுப்பை பிபிடி வழியாக தெளிவாக விளக்கினார். வழக்கமாக, ஒரு கறாரான வாத்தியாராய் கடந்த வகுப்பு குறித்த கேள்விகளை கேட்பார். என்னைப் போல டல் மாணவர்கள் தலையை சொறிவோம். இன்றைக்கு நேரம் கடந்ததினால், நேரடியாக வகுப்புக்கு சென்றுவிட்டார்.
குறிப்பாக அதிகாரிகளின் நியமனம், அவர்களின் அதிகாரம் என்ற அளவில் இருந்தது. அதிகாரிகள் ஜி.எஸ்.டி துவங்கிய காலம் தொட்டு எல்லாம் சட்டத்தை படித்துக்கொண்டிருந்தார்கள். இப்பொழுது தினந்தோறும் நோட்டிசுகளை தொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். வில்லியப்பன் சார் ஒரு நிறுவனத்துக்கு மட்டும் 64 நோட்டிசுகளை பெற்றிருக்கிறார். ஆகையால் காலையில் முழிக்கும் பொழுதே, இன்றைக்கு எந்த அதிகாரியை பார்ப்பது என்ற யோசனையில் எழுகிறோம்.
ஆக, ஒரு சிஸ்டம் என்ன விதிகளோடு இயங்குகிறது என புரிந்துகொண்டால் தான், அவர்களை சரியாக எதிர்கொள்ளமுடியும். நாம் நமது வாடிக்கையாளர்களை துன்பத்திலிருந்து காக்க முடியும். அவரை மீட்டால் தான், நம் பொருளாதாரமும் வளமாக இருக்கும். அந்த அடிப்படையில் இந்த வகுப்பு மிகவும் முக்கியமாய் இருந்தது.
வகுப்பு எடுக்கும் பொழுது, நிறைய அனுபவங்களை அவரும் பகிர்ந்துகொண்டார். பங்கேற்ற உறுப்பினர்களும் உற்சாகமாய் தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். நிறைய நேரம் விவாதித்ததினால், நேரம் கொஞ்சம் கடந்து போனது. தலைவரே தான் எடுக்க நினைத்திருந்த இரண்டாவது அத்தியாத்தை அடுத்த மாதம் தள்ளி வைக்கும்படி ஆகிவிட்டது.
- GSTPS
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
No comments:
Post a Comment