கடந்த சனிக்கிழமையன்று (15/06/2024) காலை 10.30 மணியளவில் இணையவழிக்கூட்டம் சிறப்பாக நிறைவேறியது. நமது உறுப்பினர்களும், பிற மாவட்டங்களில் இருந்தும் பலர் கலந்துகொண்டனர்.
2023-24 கணக்காண்டு முடிந்து, TDS தாக்கல் செய்யும் கடைசி தேதியையும் கடந்துவந்துவிட்டோம். இப்பொழுது சுறுசுறுப்பாக வருமான வரித்தாக்கல் செய்யும்
நேரமிது!
இந்த சமயத்தில் ITR 2 தனிநபர் கணக்கை தாக்கல் செய்வது எப்படி?
என்ற கூட்டம் முக்கியமான கூட்டம். ஒரு தனிநபருக்கு பொருந்தக்கூடிய பல அம்சங்களும்
கலந்து வருகிற ஒரு கணக்கை எடுத்துக்கொண்டு, வருமான வரி தளத்திலேயே திறந்து விரிவாக விளக்கினார் நமது இணைச்செயலர் செண்பகம்
அவர்கள்.
அவருடைய விரிவான உரை முடிந்ததும் கலந்து கொண்டவர்களிடமிருந்து நிறைய கேள்விகளும் வந்தன. எல்லாவற்றிக்கும் செண்பகம் அவர்களும், மற்ற நிர்வாகிகளும், பங்கேற்பாளர்களும் பதில் தந்தார்கள்.
கூட்டத்தின் இறுதியில் நமது உறுப்பினர் கருப்பையா அவர்கள் சொன்னது, “அக்கு வேறாக ஆணி வேறாக” செண்பகம் அவர்கள் விரிவாக விளக்கிவிட்டார் என பாராட்டினார். அது உண்மை. மிகையல்ல!
கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி சொல்லியதுடன், கூட்டம்
இனிதே நிறையுற்றது.
நன்றி.
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety
No comments:
Post a Comment