GSTPS : 10வது மின்னிதழாக மே 2024 இதழ் (E magazine)
மே மாத இதழ் வெற்றிகரமாக கொண்டு வந்திருக்கிறோம். நமது நிர்வாகிகளும், உறுப்பினர்களும் பல்வேறு தலைப்புகளில் 40 பக்கங்களில் கட்டுரைகள் எழுதியுள்ளார்கள்.
ஜி.எஸ்.டி, வருமான வரி, பி.எப் என துறை சார்ந்த புதிய தகவல்களையும், வழக்குகள் குறித்தும், நாம், கற்றுக்கொள்ளமுடியும். முன்பு போல நிலைமை இல்லை. ஜி.எஸ்.டி அமுலாக்கம் வந்த பிறகு, அப்டேட்டுகள் வந்த வண்ணமாகத் தான் இருக்கிறது. ஆகையால் அதை எல்லாம் கற்றுக்கொள்ளவது தொழிற் ரீதியாக மிக அவசியமானதாக இருக்கிறது.
ஒரு மனிதன் தனிப்பட்ட முறையில் கற்றுக்கொள்வதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. அதுவே கூட்டு முயற்சியில் அதன் எல்லை இன்னும் விரிவாகிறது.
ஒரு படைப்பு என்பது அது பரவலாக பலராலும் பயன்படுத்தும் பொழுது தான் அதன் நோக்கம் நிறைவடைகிறது. கட்டுரைகளை அவசியம் படியுங்கள். கட்டுரைகள் குறித்த கருத்துகள் தான் எழுதுபவர்களுக்கு உற்சாகம் தரும். படித்துவிட்டு, உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள். இதழ் குறித்த ஆலோசனைகளையும் தெரிவியுங்கள்.
தொழில்முறை நண்பர்களுக்கும், நமது மின்னிதழை அறிமுகப்படுத்தி, நம்மோடு பயணிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த உதவுங்கள்.
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
No comments:
Post a Comment