Sunday, June 9, 2024

GSTPS : "Chat GPT Training in Tamil" - K. Selvaraj, CMA, GSTPS, Member - PPT

 

கடந்த  சனிக்கிழமையன்று (08/06/2024) நமது GSTPS சார்பாக நடத்த்டிய இணைய வழிக் (Zoom) கூட்டம்  சிறப்பாக நடைபெற்றது.  நமது உறுப்பினர் கே. செல்வராஜ்  CMA அவர்கள் சாட் ஜிபிடி குறித்து சிறப்பாக உரையாற்றினார். மற்ற மாவட்டங்களில் இருந்தும் திரளாக கலந்துகொண்டார்கள்.

 

“சாட் ஜிபிடி” பேசவேண்டும் என நினைத்ததே சிறப்பு தான். வரி ஆலோசகர்கள் தங்களுடைய துறை வாரியான செய்திகளை புதுப்பித்து கொள்வதற்கே, பெரும் முயற்சிகள் செய்துகொண்டிருக்கும் பொழுது,  நவீன தொழில்நுட்பம் குறித்த விசயங்களை கற்றுக்கொள்வது சவாலாக தான் இருக்கிறது.  வெகு சிலரே தங்கள் தேவையில் இருந்து தேடித்தேடி கற்றுக்கொள்கிறார்கள் என்பதை அனுபவத்தில் பார்க்க முடிகிறது. ஆனால் அப்படி கற்றுக்கொள்ளும் பொழுது தங்கள் அன்றாட வேலைகளை செய்வதற்கு பேருதவியாக இருக்கும்.

 

ஒரு தனிநபரால் 360 டிகிரியில் யோசிப்பதும், சாத்தியமில்லாத நிலை தான். ஆனால் சொசைட்டி என்பது பலருடைய திறனும், ஆலோசனைகளும் ஒன்றாய் இணையும் பொழுது அதனுடைய ஆற்றல் பல மடங்காகிவிடுகிறது.

 

*சாட் ஜிபிடி* என்பது  ஒரு மெய்நிகர் ரோபோ.  மனிதனின்  பல்துறை சார்ந்த ஆற்றல்களை தகவல்களை அதற்கு கொடுத்துவிடும் பொழுது, ஒரு மனிதனைப் போல நாம் கேட்கும் செய்திகளை அழகாக, கோர்வையாக தொகுத்து தந்துவிடுகிறது.


சாட் ஜிபிடியை  இப்பொழுது உலகம் முழுவதும் பல்துறை சார்ந்தவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். போட்டியாக வேறு சில நிறுவனங்களும் அதற்கு இணையாக  கண்டுபிடித்து, அவற்றையும் மக்கள் பரவலாக பயன்படுத்தியும் வருகிறார்கள்.

 

அதை வரி ஆலோகர்களாக இருக்கும் நமக்கு எவ்வளவு பயன்படும் என்பதைத் தான் செல்வராஜ் அவர்கள் தொகுப்பாக விளக்கினார்.    ஒரு ஆற்றல் உள்ள மனிதரை, வேலை வாங்குவதும் சவால் தான். அந்த நுட்பத்தைத் தான் நேற்று அருமையாக கற்றுத் தந்தார்.

 

செல்வராஜ் அவர்களிடம் பிடித்த அம்சம்.  சொல்லித்தருவது மட்டும் தன் கடமையாக கருதாமல்,  அதை உடனடியாக செய்ய வைத்து, அதில் வரும் சந்தேகங்களையும் தீர்த்து வைப்பது அவரது சிறப்பு. நேற்று அதையும் செய்தார்.

 

ஜிஎஸ்டி குறித்த  சட்ட அறிவையும்  சாட் ஜிபிடிக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார்கள்.  ஆகையால், நமக்கு ஒரு செக்சன் குறித்து கேட்டாலும் பதில் தருகிறது.  ஆகையால் நேற்று எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதும், பங்கேற்பாளர்கள் கேள்வி எழுப்பியதில் இருந்தும், செல்வராஜ் அவர்கள் பதில் சொல்வதில் இருந்தும் கற்றுக்கொள்ள முடிந்தது.

 

இன்று செல்வராஜ் அவர்கள் விளக்கிய பிபிடியை குழுவில் இங்கு பகிர்கிறோம்.  அதை பார்ப்பதன் மூலம் கற்றுக்கொள்ள முடியும்.  செல்வராஜ் அவர்கள் விளக்கும் பொழுதே, இது குறிப்பிட்ட சதவிகிதம். இன்னும் 75% க்கு மேல் இருக்கிறது என்றார். ஆகையால், விரைவில் சாட் ஜிபிடி  பாகம் 2 என எடுக்க முன்வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

 

நன்றி.

 

 - GSTPS

 


































தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety




No comments:

Post a Comment