Emotional Intelligence (உணர்ச்சி நுண்ணறிவு) என்பது தன் உணர்ச்சிகளையும், பிறரின் உணர்ச்சிகளையும் அறிந்து, புரிந்து, சரியாக சமாளிக்கும் திறன் ஆகும்.
அமெரிக்க உளவியலாளர் Daniel Goleman இதை நான்கு
முக்கிய கூறுகளாக பிரிக்கிறார்:
- Self-awareness
– தன் உணர்ச்சியை அறிதல்
- Self-management
– அதை கட்டுப்படுத்தி கையாளுதல்
- Social awareness
– பிறர் உணர்ச்சியை உணர்தல் (Empathy)
- Relationship management – மனித உறவுகளை திறமையாக கையாள்தல்
ஒரு வரி ஆலோசகருக்கு ஏன் தேவை?
வரி
ஆலோசகர் தினமும் வாடிக்கையாளர்களுடன், துறை
அதிகாரிகளுடன், தனது
பணியாளர் குழுவுடன் தொடர்பு கொள்கிறார். அங்கு
உணர்ச்சிகள் முக்கிய பங்கு
வகிக்கின்றன.
உணர்ச்சி நுண்ணறிவு கொண்ட வரி ஆலோசகர்:
- நெருக்கடியான சூழலில்
வாடிக்கையாளரின் கோபத்தையும் அமைதியாக சமாளிக்கிறார்.
- வாடிக்கையாளரின்
உணர்வுகளைப் புரிந்து, நம்பிக்கையையும் நெருக்கத்தையும் உருவாக்குகிறார்.
- பணியாளர் குழுவில்
நேர்மறை (positive) சூழலை உருவாக்குகிறார்.
இது
வெறும்
தொழில்நுட்ப அறிவு
அல்ல
— மனித மனதைப் புரியும் திறன் தான்
வாடிக்கையாளரின் நம்பிக்கையைப் பெருக்குகிறது.
எப்படி வளர்த்துக்கொள்வது?
'
- Self-reflection: தினமும் நமது உணர்ச்சிகளைப் பற்றி கொஞ்சம் அசைபோடுங்கள் — “எனக்கு ஏன் கோபம் வந்தது?” என்று.
· Active listening: வாடிக்கையாளர் பேசும்போது கவனமாக கேளுங்கள், அவர்களைப் புரிந்துகொண்டு, பதிலளியுங்கள். அவசரம் தவிருங்கள். சமகாலத்தில் குறைந்து கொண்டு வருகிற பழக்கம்.
· Empathy பயிற்சி: பிறரின் நிலையை நிதானமாய் உணர்ந்து பார்க்க பழகுங்கள். (Sympathy தான் பலருக்கும் பழக்கம் இருக்கும். Empathy நாம் பழகவேண்டும்.)
· Stress management: யோகா, நடைபயிற்சி, deep breathing — மனதை அமைதியாக வைக்கும் பழக்கங்கள்.
· Feedback கேளுங்கள்: நம்பகமான நண்பர் அல்லது சக ஊழியர் நம்மை எப்படி பார்க்கிறார் என்பதை கேளுங்கள்.
வரி ஆலோசகர் ஒருவர்
உணர்ச்சிகளை சரியாக
கையாளத் தெரிந்தால் — நம்பிக்கை, வாடிக்கையாளர் உறவு,
பணியாளர் குழு ஒத்துழைப்பு ஆகியவை
தானாகவே வளர்ந்துவிடும். நாம் அடுத்த கட்டத்திற்கு
நகர்ந்துவிடுவோம்.
-
இரா. முனியசாமி,
ஜி.எஸ்.டி, வருமானவரி, பி.எப், இ.எஸ்.ஐ, ஆலோசகர்,
9551291721

No comments:
Post a Comment