ஒரு நிறுவனத்திற்கான அனைத்து statutory payments–உதாரணமாக GST, TDS, PF, ESI, ROC fees, Professional Tax, penalties ஆகியவை எல்லாமும் அந்த நிறுவனத்தின் சொந்த வங்கி கணக்கிலிருந்து மட்டுமே செலுத்தப்பட வேண்டும்.
இதற்கு
காரணம்:
சட்டம் நிறுவன நிதி மற்றும் தனிநபர் நிதியை தனித்தனியாக வைத்திருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது.
கீழே
ஒவ்வொரு துறை சார்ந்த சட்டப்பிரிவு மற்றும் காரணம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
GST சட்டம்
சட்ட அடிப்படை: GST Rules – Rule 87 (Electronic Cash Ledger)
- Rule 87 படி, GSTக்கு செலுத்தப்படும் தொகை traceability-க்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
- “Paid by the taxable person” என்பதால், GSTIN-க்கு உரிய நிறுவனம்/LLP/firm வங்கி கணக்கிலிருந்து பணப்பரிமாற்றம் வர வேண்டும்.
பிற
தனிநபர்கள் கணக்கில் இருந்து செலுத்தும் பொழுது என்ன பிரச்சனை வரும்?
- Proprietor / Director personal account-லிருந்து
செலுத்தினால்,
- ITC reconciliation
- Books mismatch
- SCRutiny/ audit (தணிக்கை) நேரத்தில் விளக்கம் தர முடியாத நிலை
ஏற்படும்.
2.
Income Tax – TDS/TCS
சட்ட அடிப்படை: Income Tax Act – Section 200 & Rule 30
- Tax deductor (company/LLP/firm) தான் TDS
remittance செய்ய வேண்டும்.
- Personal account-லிருந்து remittance செய்தால், deduction process தவறானதாக மதிக்கப்படும்.
Expense
Deduction Related Sections
- Section 40A(3)
– அனுமதிக்கப்படாத முறையில் செலுத்தப்பட்ட payments disallow ஆகும்.
- Section 43B
– statutory dues actual payment base-ல் deduction கிடைக்கும்; payment source mismatch ஆகக் கூடாது.
PF
/ ESI (Labour Laws)
சட்ட அடிப்படை:
- EPF Act – Para 38 of EPF Scheme
- ESI Act – Regulation 31
இரண்டும் employer contribution மற்றும் employee deduction employer (அதாவது
நிறுவனம்) account-லிருந்து செலுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது.
ஏன் முக்கியம்?
- Employer statutory accountability personal fund-களுடன் கலக்க முடியாது.
- Employee contributions மற்றொரு account-லிருந்து செலுத்தப்படும் பட்சத்தில் “misutilisation of funds” என கருதப்படும்.
Companies
Act / LLP Act
சட்ட அடிப்படை: Separate Legal Entity Concept
Company & LLP தனி சட்டபிரிவு.
- Companies Act – Section 128 (Books of Accounts)
- நிதி பரிவர்த்தனைகள்
“true and fair view” காண்பிக்க வேண்டும்.
- Section 129
– Financial Statements ஒழுங்காக இருக்கவேண்டும்; fund mixing செய்யக்கூடாது.
என்ன பிழை நடக்கும்?
- Company account-க்கு பதிலாக director account-லிருந்து payments வந்தால் இது “mixing of funds” எனக் கருதப்படும்.
- ROC scrutiny-யில் non-compliance note செய்யப்படும்.
*
Professional Tax (State Laws)*
இதற்கான சட்டமாக TNPT Act – Section 10 & 11 employer remittance employer
account-லிருந்து வர
வேண்டும் என்று
குறிப்பிடுகிறது.
*ஏன் நிறுவன கணக்கிலிருந்து மட்டுமே செலுத்த வேண்டும்?*
- Audit / தணிக்கை நேரத்தில் தெளிவான பதிவுகள்
- Statutory traceability – ஒவ்வொரு ரூபாயின் source தெளிவாகத் தெரியும்
- Fund mixing சட்டவிரோதம் (company ≠ owner)
- ITC/TDS/PF reconciliation எளிதானது
- எதிர்கால
assessment / scrutiny பிரச்சனைகள் தவிர்க்கப்படும்
நிறுவனங்களுக்கான சுருக்கமான வழிகாட்டல்
- GST / TDS / PF / ESI / Professional Tax / ROC fees —
எதையும் யாருடைய personal account-லிருந்து செலுத்த வேண்டாம். - Company/LLP/firm account-ல் fund இல்லையென்றால் →
owner loan to company (proper entry) செய்து, அதை நிறுவனம் செலுத்த வேண்டும். - அனைத்து
statutory payments–க்கும் proper narration மற்றும் voucher வைத்திருக்கவும்.
-
இரா. முனியசாமி
-
GSTPS உறுப்பினர்,
-
9551291721
No comments:
Post a Comment