Friday, November 7, 2025

வரி ஆலோசகர் தனது வாடிக்கையாளர்களுக்கு சட்டம் குறித்த அடிப்படையான அம்சங்களை பயிற்றுவிப்பது அவசியமா?


”சட்ட விழிப்புணர்வுள்ள கிளையண்ட் இருப்பதால், ஆலோசகர் தீயை அணைக்கும் வேலையிலிருந்து விலகி, வளர்ச்சி ஆலோசனையில் ஈடுபட முடிகிறது.”

-          - புகழ்பெற்ற வரி நிபுணர் சந்தீப் ஷா

 

ஒரு வரி ஆலோசகரின் முக்கியப் பணிகணக்குகள் பார்த்தல் அல்லது ரிட்டர்ன் தாக்கல் செய்வது மட்டுமல்ல. அவருடைய வாடிக்கையாளர்கள் சட்டத்தை அடிப்படையாகப் புரிந்துகொள்ளச் செய்வதும் சம அளவு முக்கியம்.

வாடிக்கையாளர் தன் கடமைகள், அவ்வப்போது வரும் சட்டமாற்றங்கள், கடைபிடிக்க வேண்டிய காலக்கெடுகள் குறித்து விழிப்புணர்வுடன் வைத்திருப்பதும் அவசியம்.

 

ஏன் போதிக்க வேண்டும்?


வரி சட்டம், குறிப்பாக ஜி.எஸ்.டி மற்றும் வருமான வரி விதிகள், அடிக்கடி மாற்றம் காண்பவை. இதை கிளையண்ட் அறியாமல் இருந்தால், தவறான பில்லிங், தவறான ITC கிளைம், அல்லது தவறான வருமான அறிவிப்பு போன்ற பிரச்சனைகள் எழும். ஆலோசகர் இதனை முன்கூட்டியே விளக்கினால், “non-compliance” குறையும்; அபராதம், நோட்டீஸ், விசாரணை போன்ற சிக்கல்களைத் தவிர்க்கலாம்.

 

”சட்டம் புரிந்திருக்கும் வாடிக்கையாளர், ஆலோசகரின் நேரத்தையும் கௌரவத்தையும் பாதுகாக்கிறார்.”  - புகழ்பெற்ற வரி நிபுணர் டாக்டர் பி.ஜி.கன்னா

 

கற்றுக்கொடுக்கும் பொழுது நன்மைகள்:

 

  • வாடிக்கையாளர் தன் ஆவணங்கள், ரசீதுகள் அனைத்தையும் ஒழுங்காக பாதுகாத்து வைத்திருப்பார்.

 

  • வரித்துறை கேள்விகளுக்கு விரைவாக பதிலளிக்க முடியும்.
  • ஆலோசகருக்கும் நம்பிக்கை, நேரச் சிக்கனம், நிதானமான செயல்பாடு உருவாகும்.

 

  • நீண்டகால வணிக உறவு உறுதியாகும்.

 

கற்றுக்கொடுக்காவிட்டால் வரும் பிரச்சனைகள்:

  • வாடிக்க்கையாளர்  சட்டத்தைப் புரிந்துகொள்ளாமல் தவறு செய்வார்; பின்னர் ஆலோசகரை குற்றம் கூறுவார்.

 

  • வரி துறையின் அபராதம், விசாரணை, மதிப்பீட்டு ஆபத்துகள் அதிகரிக்கும்.

 

  • ஆலோசகரின் நற்பெயர் பாதிக்கப்படும்; சில நேரங்களில் தொழில் நம்பகத்தன்மையும் கேள்விக்குறியாகும்.

 

செயல்பாட்டு வழிமுறைகள்எப்படி போதிப்பது?

 

  • மின்னஞ்சல்: ஜி.எஸ்.டி / வருமானவரி புதிய அறிவிப்புகளைச் சுருக்கமாக வாடிக்கையாளர்களுக்கு அனுப்பலாம்.

 

  • வீடியோ / WhatsApp தகவல்: குறுகிய விளக்க வீடியோக்கள் அல்லது நோட்டீஸ் தவிர்க்கும் குறிப்புகளைப் பகிரலாம்.

 

  • கேள்விபதில்: வாடிக்கையாளர்கள் எப்பொழுது சந்தேகங்களை கேட்டாலும், பொறுமையாக விளக்குவது அவசியம்.

 

இறுதியாக…


வரி ஆலோசகர் தன் வாடிக்கையாளரை ஒருபயிற்சி பெற்ற வரிப்பயனாளராகஉருவாக்க வேண்டும். இது ஒரு சமூகப் பொறுப்பு. சட்டத்தைப் புரிந்திருக்கும் வாடிக்கையாளர் மட்டுமே நல்ல வரி ஒழுக்கத்தைப் பேண முடியும்.

 

பயிற்றுவிக்கும் ஆலோசகர், தன் தொழிலை வளர்த்துக்கொள்கிறார்;
போதிக்காத ஆலோசகர், தன் பெயரையே இழக்கிறார்.”

 

-          - இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டிவருமானவரிபி.எப்.எஸ்.ஆலோசகர்,

9551291721

No comments:

Post a Comment