Tuesday, November 4, 2025

வரி ஆலோசகர்கள்: “எல்லாவற்றையும் நாமே செய்வது” – ஒரு தவறான நடைமுறை


பல வரி ஆலோசகர்கள் தங்களுக்குக் கீழே உதவியாளர்கள் அல்லது இடைநிலை நிர்வாகிகளை நியமிக்காமல், ஒவ்வொரு வேலைகளையும் தாங்களே செய்வது வழக்கம். தொடக்கத்தில் இது பொறுப்புணர்வாகத் தோன்றலாம். ஆனால் நீண்டகாலத்தில் இது தொழிலுக்கும் மனநலத்திற்கும் பெரும் பாதிப்பை உண்டாக்குகிறது.


பாதகங்கள்


1. அளவுக்கு மீறிய வேலைச்சுமை - அனைத்து பணிகளையும் ஒரே நபர் கவனித்தால், சோர்வு மற்றும் மன அழுத்தம் கூடும்.

  “No one can do everything alone; even the best need a team.” – Peter Drucker


2. திறன் குறைதல் : நுணுக்கமான தீர்மானங்கள் எடுக்க வேண்டிய நேரத்தில் கவனம் சிதறும். முக்கிய முடிவுகள் தாமதமாகும்.


3. தொழில்வளர்ச்சிக்கு தடையாகும் : புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க முடியாது. சேவை தரம் குறையும், நம்பிக்கை பாதிக்கப்படும்.


“நான் தனியாக 50 வாடிக்கையாளர்களை வைத்திருந்தேன்; ஒரு சிறிய குழு அமைத்ததும் 500 ஆனார்கள். வரி அறிவு மட்டும் போதாது; வாடிக்கையாளர் நம்பிக்கையைப் பெருக்க வேண்டுமானால் குழு நம்பிக்கையை முதலில் பெருக்க வேண்டும்.” — சி.ஏ. டி.என். பாண்டியன் (முன்னாள் ICAI தலைவர், சென்னை)



4. புதுமை (Innovative) சிந்தனை தடைபடுகிறது  : அன்றாட பணி அழுத்தத்தில் புதிய யோசனைகள், தொழில்நுட்ப மேம்பாடுகள் ஆகியவை பின்னுக்கு தள்ளப்படுகின்றன.


“தனி நபர் பயிற்சி தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்ளத் தடை செய்கிறது. குழு அமைத்து பணியை ஒப்படைத்தால் மட்டுமே புதுமைக்கு நேரம் கிடைக்கும்.” — சி.ஏ. சரண்ஜோத் சிங் நந்தா (ICAI தலைவர்)


5. திடீர் அவசரங்களில் குழப்பம் : ஒரு நாள் நோய்வாய்ப்பட்டாலோ, வெளியூர் போக வேண்டியிருந்தாலோ – அலுவலகம் ஸ்தம்பித்துவிடும் அபாயம் உண்டு.


சரியான வழிகள்


1. சிறிய அளவில் ஆரம்பியுங்கள் : - முதலில் ஒரு பணி உதவியாளர் போதும். அவரை பயிற்சி அளித்து சிறிய பொறுப்புகளை ஒப்படையுங்கள்.


2. நம்பிக்கையை உருவாக்குங்கள் : முழு கட்டுப்பாட்டை இழக்கிறோம் என்ற பயத்தை விட்டு விடுங்கள்.


“Delegation is not losing control; it’s gaining time for higher goals.” – John C. Maxwell


3. செயல்முறைகளை எழுதித் தெளிவுபடுத்துங்கள் : ஒவ்வொரு பணிக்கும் நடைமுறை வழிகாட்டுதலை தயாரியுங்கள். இது புதிய நபர்களை விரைவாக இணைக்க உதவும்.

“எழுதப்படாத விதி மறந்துவிடும்; எழுதப்பட்ட விதி வளரும்.” —Michael Gerber


4. நேரத்தை மதியுங்கள் : நேரமே உங்கள் முக்கிய மூலதனம். அதைச் சேமிக்க கற்றுக்கொள்ளுங்கள்.


5. நல்ல ஊதியம் மற்றும் நல்ல மரியாதை கொடுங்கள் :  நிறுவன வளர்ச்சிக்கு உறுதியான மனிதர்கள் தேவை. அவர்களை மதிப்பது நம் கடமை.


மனிதர்களை மதிப்பவன் மட்டுமே மகத்தான நிறுவனத்தை உருவாக்க முடியும்.” — சைமன் சினெக் (Simon Sinek)



இறுதியாக….



வரி ஆலோசகரின் தொழில் அறிவே அவரை நிபுணராக ஆக்குகிறது. ஆனால் வளர்ச்சியடைய, அந்த அறிவைச் சுற்றி ஒரு வலுவான குழுவை அமைக்க வேண்டும். “நிறுவனம் வளர்வது மனிதர்களை வளர்த்தால் மட்டுமே.” - 


“நிபுணரின் உச்சம் – அவரைச் சுற்றி நிபுணர்களைக் கொண்ட குழு உருவாக்குவதே.”


- இரா. முனியசாமி.
ஜி.எஸ்.டிவருமானவரிபி.எப்.எஸ்.ஆலோசகர்,

9551291721 

No comments:

Post a Comment