Thursday, September 10, 2026

ESIC : பத்துப் பேர் இல்லாவிட்டாலும் — பாதுகாப்பு சாத்தியம்


ஒரு தொழில் தொடங்குகிறார்கள். முதலில் முதலாளி, அடுத்து ஒரு கணக்காளர், இரண்டு தொழிலாளர்கள்... இப்படித்தான் பல சிறிய நிறுவனங்கள் ஆரம்பமாகின்றன.

 

இப்போதைக்கு ஆறு பேர்தான் இருக்கிறார்கள். கொஞ்சம் தொழில் வளரட்டும். பத்து பேர் ஆன பிறகு பார்த்துக்கொள்ளலாம்...” என்று நினைப்பார்கள். அந்தபத்து பேர்என்ற எண்ணிக்கைதான் இத்தனை காலமும் ஒரு தடையாக இருந்தது. .எஸ்..யில் பதிவு செய்ய பத்து தொழிலாளர்கள் இருக்க வேண்டும்.

 

அதனால் ஐந்து, ஆறு, ஏழு பேருடன் இயங்கும் சிறிய நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு, முதலாளிகள் விரும்பினாலும் .எஸ்.. மருத்துவப் பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடியாத நிலை இருந்தது.

 

இப்போது ஒரு புதிய வாய்ப்பு வந்திருக்கிறது. Code on Social Security, 2020 – Section 1(7) இதற்கு வழி காட்டுகிறது. பத்துக்கும் குறைவான தொழிலாளர்கள் இருந்தாலும், முதலாளியும் பெரும்பான்மையான தொழிலாளர்களும் விரும்பினால், .எஸ்.. திட்டத்தில் Voluntary Basis-ல் சேர முடியும்.

 

அதாவது, “பத்து பேர் இல்லையே... நம்மால் முடியாது!” என்று இனிமேல் நினைக்க வேண்டிய அவசியம் இல்லை. சிறிய நிறுவனம் என்றால் பாதுகாப்பும் சிறியதாக இருக்க வேண்டும் என்று எந்தச் சட்டமும் சொல்லவில்லை.

 

நேற்று .எஸ்.. சென்னை தலைமை அலுவலகத்தில் விசாரித்தபோதும், இந்த மாற்றம் தொடர்பாக உறுதிப்படுத்தல் கிடைத்தது.

 

இதில் எனக்குப் பிடித்த விஷயம் என்ன தெரியுமா? ஒரு நிறுவனம் வளர்ந்து பத்து பேரை வேலைக்கு எடுத்த பிறகுதான், “இவர்களுக்கு மருத்துவப் பாதுகாப்பு வேண்டும்என்று நினைக்க வேண்டியதில்லை.\

 

ஆறு பேர் இருந்தாலும் பாதுகாக்கலாம்.
ஏழு பேர் இருந்தாலும் பாதுகாக்கலாம்.
எட்டு பேர் இருந்தாலும் பாதுகாக்கலாம்.

 

சிறிய நிறுவனமாக இருந்தாலும், அங்கே வேலை செய்பவர்களின் குடும்பம் சிறிய குடும்பம் அல்ல! அவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டால், மருத்துவச் செலவு வருகிறது. வேலைக்குச் செல்ல முடியவில்லை என்றால் வருமானம் பாதிக்கிறது. குடும்பத்திலும் அதன் தாக்கம் இருக்கும். அதனால்தான் இந்த வாய்ப்பு முக்கியமானது.

 

முதலாளிகளே...

 

உங்கள் நிறுவனத்தில் பத்துப் பேர் இல்லை என்பதற்காக, “.எஸ்.. நமக்குக் கிடையாதுஎன்று ஒதுக்கிவிட வேண்டாம். உங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு .எஸ்.. பாதுகாப்பை  விருப்பத்தின் அடிப்படையில் ஏற்படுத்த முடியுமா என்பதைப் பரிசீலியுங்கள்.

 

ஒரு பதிவு என்பது வெறும் ஒரு பதிவு அல்ல. அதற்குப் பின்னால் ஒரு தொழிலாளி இருக்கிறார். அவருக்குப் பின்னால் ஒரு குடும்பம் இருக்கிறது. அந்தக் குடும்பத்திற்குப் பின்னால் ஒரு நிம்மதி இருக்கிறது.

 

பத்து பேர் நிறைவதற்காகக் காத்திருக்க வேண்டியதில்லை.
பாதுகாப்பைத் தொடங்குவதற்கான கதவு இப்போது திறந்திருக்கிறது.

 

இந்தத் தகவல் தெரிந்தால் பயனடையக்கூடிய சிறு நிறுவன முதலாளிகளிடம் இதைப் பகிருங்கள். ஒரு சிறிய தகவல் பகிர்வு, ஒரு குடும்பத்திற்கு பெரிய பாதுகாப்பாக மாறலாம்.

 

-          இரா. முனியசாமி,

-          வரி ஆலோசகர்,

G        GSTPS உறுப்பினர்,

-          9551291721 

No comments:

Post a Comment