EPF – பணியாளருக்கு UAN தொடர்ந்து செலுத்தவேண்டுமா?
ஒரு
நிறுவனத்தில் பணியாற்றிய ஒரு
பணியாளருக்கு, அவரது
யு.ஏ.என். (UAN) அடையாள எண்
உருவாக்கப்பட்டு, பி.எஃப். சந்தா முறையாகச் செலுத்தப்பட்டது.
பின்னர் அவர்
இரண்டாவது நிறுவனத்தில் சேர்ந்தபோது, "பி.எஃப்.
பிடிக்கவேண்டுமா, வேண்டாமா?" என்று அந்நிறுவனம் கேட்டது. அதற்கு
அவர்
"வேண்டாம்" என எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தார். ஆனால்
இது
சட்டப்படி முறையானதல்ல.
ஏன்? — UAN ஒருமுறை உருவாக்கப்பட்டு, பி.எஃப். சந்தா செலுத்தத் தொடங்கிவிட்டால், அந்தத்
தொழிலாளரின் Basic + DA ரூ.15,000 என்ற உச்சவரம்பை தாண்டினாலும் கூட,
பங்களிப்பை நிறுத்தும் உரிமை
அவருக்கு இல்லை
. தொடர்ந்து செலுத்தப்படவேண்டும்.
அதே
தவறை
மூன்றாவது நிறுவனத்திலும் செய்யப்பார்த்தார். ஆனால்
அந்த
நிறுவனம் உறுதியாக மறுத்தது: "பி.எஃப்.
பிடித்தே ஆகவேண்டும்" என்று தெளிவாகத் தெரிவித்தது. அது
சரியான
நடவடிக்கை.
இதற்கிடையில், இரண்டாவது நிறுவனத்தில் பங்களிப்பு நின்றுபோனது குறித்து, பி.எஃப். அமைப்பு ஏன் நிறுத்தினீர்கள்? இப்போது வங்கி
கணக்கு விவரங்களை கேட்டு விசாரணை செய்து வருகிறது.
ஆகையால் UAN தொடங்கியபின் பி.எஃப். பிடிப்பை நிறுத்துவது சட்டவிரோதம். நிறுவனங்கள் இதில்
சமரசம்
செய்துகொள்வது கூடுதல் சுமையை தரும். ஆகையால் சட்ட
விதிகளை அறிந்து, அமுல்படுத்துவதில் விழிப்புடன் இருக்கவேண்டும்.
நிறுவனத்திற்கான
ESI பதிவு எண் (Code
No.) பெறுவது எப்படி?
பல நிறுவனங்கள் தங்களது தொழில் துவங்கும் ஆரம்ப கட்டத்தில், பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை (Private
Limited Company) பதிவு செய்வதற்காக தணிக்கையாளர் அல்லது பதிவு சேவை வழங்கும் நிறுவனங்களை அணுகுகின்றன. இந்த பதிவு செயல்முறையின் போது, வருங்கால வைப்பு நிதி (EPF) மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் (ESI) ஆகிய
பதிவுகளும் MCA தளம் (MCA
Portal) வழியாக தானாகவே மேற்கொள்ளப்பட்டு, தொடர்புடைய அடையாள எண்கள் (Code Number) வழங்கப்படுகின்றன.
பதிவு செய்யப்பட்ட உடனேயே தேவையுள்ள நிறுவனங்கள், அந்த பி.எப் மற்றும் இ.எப் எண்களை பயன்படுத்தி செயல்பாடுகளை துவக்குகின்றன. ஆனால் சில நிறுவனங்கள் உற்பத்தி அல்லது சேவை செயல்பாடுகளை தாமதமாக துவங்குவதால், பின்னர் பணியாளர் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழலில் மட்டுமே இந்த எண்களின் தேவையை உணருகின்றன.
சட்டப் பின்னணி (Legal Applicability): Employees’
State Insurance Act (ESI Act) படி, 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்கள் இருந்தால் ESI பதிவு கட்டாயமாகும்.
இந்த நிலைமையில், ஆரம்பத்தில் பதிவு செய்த தணிக்கையாளர் அல்லது சேவை வழங்குநர்களுடன் தொடர்பு இல்லாத சூழல் ஏற்படுகிறது. மேலும் சில நேரங்களில்: பதிவு செய்யும்போது அவர்களுடைய மொபைல் எண் / மின்னஞ்சல் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
நிறுவனத்திற்கு உரிய Login தகவல்கள் கிடைக்காமல் இருக்கலாம்.
ESI Code கண்டறியும் எளிய முறை:
ict.rochennai@esic.gov.in
தயவுசெய்து இந்தக் கடிதத்தைப் படித்துப் பூர்த்தி செய்து, உங்கள் நிறுவனத்தின் கடிதத் தாளில் (letterhead) அச்சிடவும். பின்னர் அதை ஸ்கேன் செய்து, மேலே குறிப்பிடப்பட்டுள்ள இ.எஸ்.ஐ மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
To
The Director,
Employees’ State Insurance Corporation (ESIC),
143, Sterling Road,
Nungambakkam, Chennai - 600034
Subject : Request for ESIC Code
Number and Certificate and Employer Portal Login Credentials
Respected Sir / Madam,
We would like to submit that our company, XXXXXXXXXXXXX (Company Name),
was incorporated as a Private Limited Company through the MCA Portal. At the
time of incorporation, registrations under ESIC were also generated through the
MCA system (auto-allotment). However, at present, we are unable to obtain the
ESIC registration details from the Auditor who handled the incorporation
process.
The details of our company are as follows:
- Name
of the Company : XXXXXX
- PAN
: XXXXXXX
- PF
Code : XXXXXXXXX
- GSTIN
: XXXXXXXXX
In this regard, we kindly request you to provide the
following details pertaining to our establishment:
- ESIC
Code Number
- ESIC C11 Certificate
- ESIC
Employer Portal Login ID / Password
We assure you that any further documents or verification
required from our side will be promptly provided.
We request you to kindly consider our request and provide
the above details at the earliest.
Thanking you,
Yours faithfully,
For
XXXXXXXXXXX
(Name xxxx)
(Authorized Signatory)
Enclosures:
- PAN Copy
- GST Registration Certificate
- Certificate of Incorporation (MCA)
எங்களுடைய அனுபவத்தில் மூன்று நிறுவனங்களுக்கு
இப்படி கடிதம் அனுப்பிய 24 மணி நேரத்திற்குள் (வேலை நாளாக இருந்தால்…) அனுப்பிவிட்டார்கள்.
இறுதியாக, நிறுவன பதிவு செய்யப்பட்ட உடனே EPF மற்றும் ESI தொடர்பான Login விவரங்கள், மொபைல் எண், மின்னஞ்சல் ஆகியவை சரிபார்த்து பாதுகாப்பாக பராமரிப்பது மிக அவசியம்.
பணியாளர்களுக்கான இ.எஸ்.ஐ எண் மறந்துவிட்டதா? கண்டுபிடிப்பதற்கு புதிய வசதி
பல
பணியாளர்களுக்கு ஒரு
பொதுவான சிக்கல் உள்ளது.
வேலை
மாறும்போது புதிய
நிறுவனத்தில் "உங்களது அடையாள
பதிவெண் (IP Number) என்ன?" என்று கேட்டால், "எனக்கு தெரியாது... மறந்துவிட்டது. தொலைந்துவிட்டது..." என்ற பதில்தான் பல
நேரங்களில் வருகிறது.
இதனால் என்ன நடக்கிறது?
பழைய
இ.எஸ்.ஐ எண்ணை
கண்டுபிடிக்க முடியாமல், சில
நேரங்களில் புதிய
பதிவு எண் ஒன்றை பதிந்துவிடுகிறார்கள். சமீபத்தில் ஒரு நிறுவனத்திற்கு ஒரு பணியாளருக்கு
பழைய எண் இருக்கும் பொழுது புதிய எண் ஏன் உருவாக்கினீர்கள் எனகேட்டு நோட்டிசு அனுப்பியிருந்தது. இந்த பிரச்சினைக்கு தீர்வாக, இ.எஸ்.ஐ.. தற்போது ஒரு
வசதியை
அறிமுகப்படுத்தி தந்துள்ளது.
என்ன புதிய வசதி?
ஒரு
பணியாளரின் இ.எஸ்.ஐ பதிவெண் (IP Number) தெரியாவிட்டாலும், கீழ்க்கண்ட விவரங்களில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு
அந்த
எண்ணை
கண்டறியலாம்.
- மொபைல் எண்
- ஆதார் எண்
- PF - UAN எண்
- வங்கி கணக்கு எண்
இது யாருக்கு பயன்படும்?
குறிப்பாக, வேலை
மாறிய
பணியாளர்களுக்கு, பல ஆண்டுகளுக்கு முன்பு
இ.எஸ்.ஐ திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு,
தங்களது இ.எஸ்.ஐ
அட்டையை தொலைத்தவர்களுக்கு,
மறந்துவிட்டவர்களுக்கு. இந்த வசதி
மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஏன் இது முக்கியம்?
ஒரு
பணியாளருக்கு அடையாள
என்பது
நிரந்தர அடையாள
எண்,
வேலை
மாறினாலும் அந்த
எண்
மாறாது.
அதே
எண்ணில்தான் மருத்துவச் சலுகைகள், பணப்
பலன்கள் மற்றும் பிற
ESI உரிமைகள் தொடர்கின்றன. ஆகவே
பழைய
எண்ணை
மீண்டும் கண்டுபிடிப்பதும் அதையே
பயன்படுத்துவதும் மிக முக்கியமானது.
பணியாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
தங்களது, கைபேசி எண், ஆதார் எண், வங்கி கணக்கு
விவரம் ஆகியவை நிறுவனத்தில் சரியாக
பதிவு
செய்யப்பட்டுள்ளதா என்பதை
உறுதி
செய்து
கொள்ள
வேண்டும். இந்த
விவரங்கள் சரியாக
இருந்தால், எதிர்காலத்தில் ESI எண்ணை
மீட்டெடுப்பதற்கு மிகவும் எளிதாக
இருக்கும்.
இறுதியாக, "எண்
மறந்துவிட்டது" என்பது இனி
பெரிய
பிரச்சினையல்ல. சரியான
தகவல்கள் பதிவு
செய்யப்பட்டிருந்தால், உங்களது ESI எண்ணை
மீண்டும் கண்டுபிடிப்பது முன்பைவிட மிகவும் எளிதாகியுள்ளது என்பது முக்கியமான செய்தி.
இ.எஸ்.ஐக்கான
பணியாளர் புகைப்படமும் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படமும்
தொழிலாளர்களை இ.எஸ்.ஐ. தளத்தில் பதிவு செய்யும் பொழுது,
அடையாளப்படுத்துவதற்காக புகைப்படம் கேட்கிறது. குடும்ப உறுப்பினர்களுடைய புகைப்படங்களையும்
தனித்தனியாக கேட்கிறது. தமிழ் பேசும் தொழிலாளர்களிடம்
உடனடியாக கேட்டு வாங்கிவிட முடிகிறது.
ஆனால் சென்னை துவங்கி, கன்னியாகுமரி வரை வட மாநில பணியாளர்கள்
தொழிற்சாலைகளில் கணிசமான எண்ணிக்கையில் வேலை செய்கிறார்கள். பணியாளர்களிடம் இருந்து குடும்ப உறுப்பினர்களின்
அடிப்படை விவரங்களை வாங்குவதற்கே அங்குள்ள
நிர்வாகிகள் கேட்டு கேட்டு சோர்வாகி விடுகிறார்கள் . இதில் அவர்களிடம் குடும்ப உறுப்பினர்களின்
புகைப்படங்களை வாங்குவதற்கு இன்னும் சோர்வடைந்துவிடுகிறார்கள்.
இ.எஸ்.ஐ. வேலைக்கு
சேர்ந்து பத்து நாட்களில் சேர்க்கவேண்டும் என்கிற விதி வேறு. பயமுறுத்திக்கொண்டே இருக்கிறது. தாமதமானால், இ.எஸ்.ஐ. கிளை அலுவலகத்திற்கு, பல்வேறு
ஆவணங்களை கொண்டு போய், விளக்கம் கொடுக்கவேண்டிய கூடுதல் வேலையும் வந்து சேர்கிறது.
இப்போதைக்கு பணியாளர்களைச் சேர்ப்போம். பிறகு குடும்பத்தினரைச் சேர்க்கலாம்
என முடிவெடுத்தால், பிறகு புகைப்படங்களையோ,
விவரங்களையோ சேர்க்கும் பொழுது, ஒவ்வொரு குடும்ப உறுப்பினரையும் சேர்க்கும் பொழுது,
இரண்டிரண்டு சான்றுகள் கேட்கிறது. ஒரு சான்றுக்கே இயல்பாக வழியில்லாத பொழுது, இரண்டு
சான்றுகள் கேட்பது எல்லாம், மிக அதிகம். அதிகாரத்தில்
உள்ளவர்களுக்கு கீழே உள்ள கள நிலைமை தெரியாமல் திருத்தங்களை அறிவிக்கிறார்கள் என்பது
மட்டும் நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது.
இது தொடர்பான சிக்கல்களை தொடர்ந்து இ.எஸ்.ஐக்கு நிறுவனங்கள்
எழுதி அனுப்பவேண்டும். அப்பொழுது தான் இதில் மாற்றங்களை கொண்டுவருவார்கள். நமக்குள்ளேயே புலம்பிக்கொண்டிருந்தால், எந்த நிலைமையும்
மாறப்போவதில்லை. பணியாளர்கள் தான் இதில் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
இன்னும் வளரும்.
- இரா. முனியசாமி,
ஜி.எஸ்.டி, வருமானவரி, இபி.எப், இ.எஸ்.ஐ ஆலோசகர்,
எல்.ஐ.சி. முகவர்,
GSTPS உறுப்பினர்,
95512 91721
தொழில் உலகம் ஆகஸ்டு இதழில் இந்தக் கட்டுரை வெளிவந்தது.






No comments:
Post a Comment