வணக்கம்.
நவம்பர் மாதத்தின் நேரடிக் கூட்டம் சனிக்கிழமையன்று (25/11/23)
மதியம் இந்துஸ்தான் சேம்பரில் சிறப்பாக நடைபெற்றது. நமது உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
தமிழ்த்தாய்
வாழ்த்துடன் கூட்டம் இனிதே துவங்கியது. கலந்துகொண்ட அனைவரையும் செயலர் பாலாஜி வரவேற்று பேசினார்.
நமது
படிப்பு வட்டம் குறித்த ஒரு அறிமுக உரையை தலைவர் துவங்கினார்.
நாம்
ஒவ்வொரு துறை வாரியாக நமது சொசைட்டி துவங்கிய காலத்தில் இருந்து.. கடந்த ஆண்டே நிறைவு செய்துவிட்டோம். அதற்கு பிறகு ஜி.எஸ்டி குறித்தான
மேம்படுத்தல்களை
(update) மட்டும், நமது துறை சார்ந்த பிற அம்சங்களையும் வரிசையாக பார்த்து வந்தோம்.
நமது
உறுப்பினர்களுக்கும்,
நமது உற்சாகமான செயல்பாடுகளின் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக வணிகவியல் மாணவர்களுக்கும் ஜி.எஸ்.டி
குறித்த அடிப்படை அம்சங்களை பாடத்திட்டம் போல வரிசையாக பயிற்றுவிக்க வேண்டும் என்பது எங்களது இலக்காக இருந்தது.
அதை
அமுல்படுத்தும் முதல் கட்டமாக தான் இப்பொழுது நமது உறுப்பினர்களுக்கு இந்த பாடத்திட்டத்தை தலைவர் துவங்கியிருக்கிறார்.
செக்சன்
1, செக்சன் 2 ல் 120 உப பிரிவுகள் உள்ளன.
120ல் உள்ள முக்கியமான அம்சங்களை மட்டும் விளக்கினால் போதுமானதா? இல்லையெனில் எல்லாவற்றையும் விளக்கிடாலாமா? என்பதை உறுப்பினர்களிடம் கருத்து கேட்டார். வரிசையாக
போய்விடலாம் என ஒப்புதல் தெரிவித்தார்கள். அதன்படி, ஒவ்வொரு மாதமும் 120ல் 40, 40ஆக பிரித்துக் கொண்டு
மூன்று மாதங்கள் எடுப்பது என முடிவானது.
துவக்க
உரையில், தலைவர் விளக்கிய அம்சங்களில் உறுப்பினர்கள் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் தெளிவாகவும், விரிவாகவும் பதில் தந்தார்.
இடைவேளையில்
தேநீரும், சிற்றுண்டியும் பரிமாறப்பட்டது.
பொதுவாக
நமது உறுப்பினர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை, வீட்டு விசேசங்களை நம்மோடு பகிர்ந்துகொள்ள தேநீர், சிற்றுண்டி செலவுகளை ஏற்கும் நல்ல
பண்பு உள்ளது. அதன் தொடர்ச்சியில் இன்று சாதிக் பாட்சா அவர்கள் செலவை ஏற்றுக்கொண்டார். நமது உறுப்பினர்களில் தொலை தூரத்தில் இருந்து வர மூன்று மணி நேரம், போக மூன்று மணி நேர என
பைக்கில் பயணித்து வருபவர் அவர் மட்டும் தான். அதனாலேயே ஒன்றிரண்டு கூட்டங்களில் கலந்து கொள்ள இயலாமலும் இருந்துள்ளார். இப்பொழுது
துவங்கப்பட்டுள்ள வகுப்புக்கு தொடர்ந்து அவசியம் கலந்துகொள்வார்.
தேநீர்
இடைவேளைக்கு பிறகு, சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள
DRC 01 C குறித்தும்,
அதன் முந்தைய அம்சங்களான DRC குறித்தும்
பிபிடிகளை கொண்டும் நமது துணைத்தலைவர் பாலாஜி
அருணாச்சலம் அவர்கள் விரிவாக
விளக்கினார். கடந்த ஜூம் கூட்டத்தில் பெருமாள் அவர்கள் கூட DRC 01 C குறித்து பேசலாம் என சொன்னது நினைவுக்கு
வருகிறது. உறுப்பினர்கள்
கேட்ட பல கேள்விகளுக்கும் தெளிவாக பதிலளித்தார்.
பிறகு,
சமீபத்தில் நம் பயணத்தில் இணைந்தவர்களான நீலகண்டன், முகமது, ரோஷன் அவர்களுக்கு ஐடி கார்டு வழங்கப்பட்டது. சேகர்பாபு, முகமது, ரோஷன் அவர்கள் மூவரும் சுய அறிமுகம் செய்துகொண்டார்கள். இதில்
முகமது அவர்கள் நாம் நடத்தும் மின்னிதழைப் பார்த்து ஆர்வமாகி இணைந்தேன் என சொன்னது முக்கியமானது.
பலருடைய
கூட்டுழைப்பில் உற்சாகமாக கொண்டு வரும் மின்னிதழ் இன்னும் பல புதியவர்களை நிச்சயம் ஈர்க்கும்.
இறுதியில்
பொருளாளர் செல்வராஜ் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
இன்றைய
கூட்டத்தில் சண்முகப்பிரியா அவர்கள் தன் இரண்டு மாத கைக்குழந்தையையுடனும், தனது தாயாருடனும் செங்குன்றத்தையும் தாண்டிய தூரத்தில் இருந்து வந்து கலந்து கொண்டது நெகிழ்ச்சியானது. கூட்டத்தை எவ்வளவு முக்கியமாக கருதுகிறார் என புரிந்துகொள்ள முடிகிறது.
நன்றி.
- GSTPS
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
பேஸ்புக் : https://www.facebook.com/groups/792542932366102