இந்த இதழில்….
கடந்த மாதத்தில் நாங்கள் GSTPS சார்பாக நடத்திய இணைய வழிக் (Zoom) கூட்டங்களிலும், உறுப்பினர்களுக்காக நாங்கள் மாதந்தோறும் நடத்தும் ஒரு நேரடிக்கூட்டத்திலும் என்னென்ன சிறப்புத் தலைப்புகளில்பேச்சாளர்கள் பேசினார்கள், என்ன விதத்தில் அது நல்ல விளைவுகளைத் தந்தது என்பதை நமது GSTPS செயலரும், மின்னிதழின் ஆசிரியருமான பாலாஜி அவர்கள் தனது பக்கத்தில் அருமையாக தொகுத்து எழுதியிருக்கிறார்.
மாதம் மாதம் வெளியாகும் புதிய அறிவிப்புகளைத் தொகுத்து தருவது, அதன் முக்கியத்துவங்களை பட்டியலிடுவது, அதில் உள்ள நடைமுறை சிக்கல்களை விவாதிப்பது, அதற்கான நடைமுறை தீர்வுகளை கண்டறிவது என மின்னிதழின் நோக்கங்களை தொகுத்து சொல்லியிருக்கிறோம்.
நமது சொசைட்டியில் என்னென்ன ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுக்கிறோம், உறுப்பினர்கள் என்னென்ன விசயங்களை, அறிவை, அனுபவங்களை பெறுகிறார்கள் என்பதை வரிசைப்படுத்தியிருக்கிறோம்.
ஜி,எஸ்.டியில் என்னென்ன புதிய அறிவிப்புகள் வந்துள்ளது என்பதை குறிப்பிட்டு, அதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளோம்.
அக்டோபரில் நடைபெற்ற வழக்குகளில் அவசியமானதை எடுத்து விளக்கியிருக்கிறோம். அதே போல, வருமான வரியில் முக்கிய மாற்றங்கள், வழக்குகள் என்னென்ன வந்திருக்கின்றன என்பதையும் விளக்கியிருக்கிறோம்..
இதுதவிர,
தொழிலாளர்களுக்கான பிரத்யேக தளத்தில் பலருக்கும் சந்தேகங்கள்இருப்பதை நடைமுறையில் கவனித்திருக்கிறோம். அந்த தளம் குறித்து எழுதினால் பலருக்கும் பலனளிக்குமே என அதைப் பற்றியும் ஒரு கட்டுரையையும் இணைத்திருக்கிறோம்.
இனி இதழ் உங்கள் கைகளில்! படித்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள். இன்னும் சிறப்பாக எப்படி கொண்டுவரலாம் என்கிற ஆலோசனைகளையும் தெரிவியுங்கள்.
நன்றி.
- GSTPS
பின்குறிப்பு : எங்களது கூட்டம் தொடர்பான செய்திகள், மின்னிதழ் போன்ற விவரங்களை பெற விரும்புகிறவர்கள் எங்களுக்கு மின்னஞ்சல் மூலமாக தெரிவியுங்கள். இந்தப் பதிவின் கீழ் உங்களது மின்னஞ்சலை தெரிவியுங்கள்.
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987





















No comments:
Post a Comment