வணக்கம். கடந்த சனிக்கிழமையன்று (18/11/2023) நடைபெற்ற இணைய வழி ஜூம் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. GSTPS உறுப்பினர்களும், பிற மாவட்டங்களில் இருந்தும் திரளாக கலந்துகொண்டனர்.
ஜி.எஸ்.டி சார்ந்த தலைப்புகளில் மட்டும் நமது கூட்டங்கள் தொடராமல், அவ்வப்பொழுது பிற துறைகள் சார்ந்தும் இடையிடையே நடத்திவருகிறோம். அதன் தொடர்ச்சியில் ”சிறிய, நடுத்தர நிறுவனங்களில் தணிக்கை” என்ற தலைப்பில்... நமது உறுப்பினர் CMA செல்வராஜ் அவர்கள் பிபிடிகளை கொண்டு அருமையான உரை நிகழ்த்தினார்.
உதாரணமாய்...
வங்கியில் கடன் வழங்கும் பொழுது... வட்டி சதவிகிதம் ஒன்றை நம்மிடம் தெரிவிக்கிறார்கள். ஆனால் நடைமுறையில் ஒரு நிறுவனத்தில் அதை விட அதிக சதவிகிதம் பிடித்திருந்தார்கள். இதை சோதிக்கும் பொழுது தான் அறிகிறோம். கேட்கிறோம். பிறகு சில லட்சங்களைத் திருப்பி தருகிறார்கள்.
கொள்முதலில்..
ஒருவரிடம் மட்டுமே கொள்முதல் செய்வது என்பது ஒரு சமயத்தில் பெரிய சிக்கலில் கொண்டு போய்விடும். அதனால் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் இன்னொரு நிறுவனத்திடமிருந்தும் நாம் வாங்கவேண்டும்.
விலையை அவ்வப்பொழுது சந்தையில் உள்ள விலையோடு உரசி பார்க்கவேண்டும். அதில் நிறைய மிச்சம் பிடிக்கமுடியும்.
விற்பனை, கொள்முதல், வங்கி, மின்சார கட்டணம் என... ஒவ்வொரு தலைப்பு வாரியாக நடைமுறையில் என்னென்ன அம்சங்களில் கவனம் செலுத்த தவறுகிறோம். அதனால் நிறுவனத்திற்கு என்னென்ன இழப்புகள் நேருகின்றன. அதை எப்படி சரி செய்வது என்பதையும் பாடத்திட்டம் போன்று நடத்தாமல்... ஒவ்வொன்றிலும் தனது முப்பது ஆண்டுகள் அனுபவத்துடன் இணைத்து விளக்கி சொன்னது அருமையாக இருந்தது.
அவருடைய உரை சரளமாக இரண்டு மணி நேரம் நீண்டாலும்... உரையின் துவக்கம் வரை இறுதிவரை அத்தனை உற்சாகத்துடன் பேசி முடித்தார். மற்றவர்களுடைய அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள் என தெரிவித்தார்.
நமது தலைவர் செந்தமிழ் செல்வன் அவர்கள், வில்லியப்பன் அவர்கள், பாலாஜி அவர்களும் தங்களுடைய அனுபவங்களையும் உற்சாகமாய் பகிர்ந்துகொண்டார்கள்.
பொதுவாக நிறுவனம், உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்களை வருமானத்தை பெருக்குபவர்களாகவும், மற்றவர்களை செலவு வைப்பவர்களாகவும் பார்க்கும் ஒரு குறைபாடான கண்ணோட்டம் உண்டு.
அவர்களது நிறுவனத்தில் தணிக்கை கண்ணோட்டத்தில் நாம் ஆலோசனைகளைத் தந்து அவர்கள் பலன்களை பெறும் பொழுது நம் மீதும் மதிப்பும் கூடும். நமக்கு தரக்கூடிய கட்டணத்தையும் இழுத்தடித்து தராமல், சந்தோசமாக தருபவர்களாக மாற்ற முடியும். கூடுதலாகவும் நமக்கு பண பலன்களை பெற்றுத்தரும். ஆகையால் இப்படி ஆலோசனைகளை தெரிவியுங்கள். வருமானத்திற்கான வழிமுறையாக பயன்படுத்திக்கொள்ளுங்கள் என சொல்லி உற்சாகமூட்டினார்.
பாலாஜி அவர்கள் ஒன்றை முக்கியமாய் குறிப்பிட்டார். நாம் ஒவ்வொன்றாக ஆய்ந்து.. மிச்சம் பிடிக்க நுட்பமாய் ஆலோசனைகள் தந்தாலும்.. அதை நடைமுறையில் அமுல்படுத்துவதில்லை என்றார்.
அப்படி அமுல்படுத்துவது என்பது கூடுதல் உழைப்பு கோருவதாய், அலட்சியமாய் கைவிடுவதாய், அல்லது தவறிழைப்பதற்கு தடையாய் அமைவதால் இதை தொடர்ந்து கடைப்பிடிப்பதில்லை.
பெரிய நிறுவனங்கள் ஒரு முறையான சிஸ்டத்தை உருவாக்கி, அது கொஞ்சம் செலவு பிடிப்பதாய் இருந்தாலும் கடைப்பிடிக்க வைத்துவிடுகிறார்கள்.
இது சிறு, நடுத்தர நிறுவனங்களில் அறியாமை காரணமாக செய்வதில்லை. நாம் அவர்களுக்கு தெரிவிப்பதன் மூலம் பலனடைய செய்யலாம்.
இந்த உரை பதிவு செய்யப்பட்டது. விரைவில் யூடுயூப்பில் பதிவேற்றம் செய்கிறோம்.
ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் மீண்டும் மீண்டும் இந்த உரையை கேட்பது நமக்கு நிறைய கற்றுத்தரும். கலந்து கொள்ள இயலாதவர்கள் நிச்சயம் உரையை கேளுங்கள்.
பிபிடிகளை இங்கு பகிர்கிறோம். நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்.
நன்றி.
- GSTPS
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

-1.jpg)
-2.jpg)
-3.jpg)
-4.jpg)
-5.jpg)
-6.jpg)
-7.jpg)
-8.jpg)
-9.jpg)
-10.jpg)
-11.jpg)
-12.jpg)
-13.jpg)
-14.jpg)
-15.jpg)
-16.jpg)
-17.jpg)
-18.jpg)
No comments:
Post a Comment