Monday, November 27, 2023

GSTPS : Direct GST Education Program - Step 1 - Study Circle - S. Senthamil Selvan, GSTPS

 



வணக்கம்நவம்பர் மாதத்தின் நேரடிக் கூட்டம் சனிக்கிழமையன்று  (25/11/23) மதியம் இந்துஸ்தான் சேம்பரில் சிறப்பாக நடைபெற்றது.   நமது உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

நமது படிப்பு வட்டம் குறித்த ஒரு அறிமுக, துவக்க  உரையை தலைவர் செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் துவங்கினார்.

நாம் ஒவ்வொரு துறை வாரியாக நமது சொசைட்டி துவங்கிய  காலத்தில் இருந்து.. கடந்த ஆண்டே நிறைவு செய்துவிட்டோம்அதற்குபிறகு ஜி.எஸ்டி குறித்தான மேம்படுத்தல்களை (update) மட்டும்நமது  துறை சார்ந்த பிற அம்சங்களையும் வரிசையாக பார்த்து வந்தோம்.

நமது உறுப்பினர்களுக்கும்நமது உற்சாகமான செயல்பாடுகளின்  அடுத்தக் கட்ட நடவடிக்கையாக வணிகவியல் மாணவர்களுக்கும்  ஜி.எஸ்.டி குறித்த அடிப்படை அம்சங்களை பாடத்திட்டம் போல  வரிசையா பயிற்றுவிக்க வேண்டும் என்பது எங்களது இலக்காக இருந்தது.

அதை அமுல்படுத்தும் முதல் கட்டமாக தான் இப்பொழுது நமது  உறுப்பினர்களுக்கு இந்த பாடத்திட்டத்தை தலைவர் துவங்கியிருக்கிறார்.

செக்சன் 1, செக்சன் 2 ல் 120 உப பிரிவுகள் உள்ளன.120ல் உள்ள  முக்கியமான அம்சங்களை மட்டும் விளக்கினால் போதுமானதாஇல்லையெனில் எல்லாவற்றையும் விளக்கிடாலாமாஎன்பதை  உறுப்பினர்களிடம் கருத்து கேட்டார்.  வரிசையாக போய்விடலாம்  என ஒப்புதல்தெரிவித்தார்கள்அதன்படிஒவ்வொரு மாதமும் 120ல்  40 ஆக பிரித்துக் கொண்டு மூன்று மாதங்கள் எடுப்பது என  முடிவானது.

துவக்க உரையில்தலைவர் விளக்கிய அம்சங்களில் உறுப்பினர்கள் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் தெளிவாகவும்விரிவாகவும்   பதில் தந்தார்.

அவர் விளக்கிய பிபிடிகளை இங்கு பகிர்கிறோம்.  நீங்களும் படியுங்கள். உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்.


நன்றி.


- GSTPS




































தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/groups/792542932366102

No comments:

Post a Comment