இ.எஸ்.ஐயில் பதிவு பெற்ற ஒரு நிறுவனத்தில் ஒரு தொழிலாளி முதன்முறையாக வேலையில் சேரும் பொழுது, இ.எஸ்.ஐ தளத்தில் அவருடைய தனிப்பட்ட விவரங்கள், குடும்ப விவரங்கள், மொபைல் எண், வங்கி கணக்கு எண் என அனைத்தையும் பதிவு செய்து, 10 (xxxxxxxxxx) டிஜிட்டலான ஒரு அடையாள எண்ணை பெற்றுத் தருகிறார்கள்.
தொழிலாளிக்கு தரக்கூடிய
அந்த எண் தற்காலிகமானது அல்ல. நிரந்தமானது.
ஒரு நிறுவனத்தை விட்டு வேறு ஒரு நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தாலும் அதே எண்ணை தருவது தான் சரியானது. இ.எஸ்.ஐ
அதைத்தான் வலியுறுத்துகிறது.
நிறுவனம் தொழிலாளியிடம்
அந்த அடையாள எண்ணை கவனமாக வைத்துக்கொள்ளுங்கள் என நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கும், பதியும் அலுவலர்களுக்கும் உள்ள
இடைவெளி காரணமாக பல சமயங்களில் வலியுறுத்துவதில்லை. தொழிலாளிகளும் கவனமாக குறித்து வைத்துக்கொள்வதில்லை.
ஆகையால் புதிய நிறுவனத்தில்
அந்த இ.எஸ்.ஐ பதிவு எண் கொண்ட தொழிலாளி இணையும் பொழுது, அவருக்குரிய எண்ணை கேட்கும் பொழுது, தன்னிடம் இல்லை
என தெரிவிக்கிறார்கள். பழைய நிறுவனத்திடம்
கேட்டு சொல்லுங்கள் என்றாலும், தொடர்பு கொள்வதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் காரணமாக
பெற்றுத்தர முடிவதில்லை.
இதனால் தொழிலாளிக்கு
தான் இழப்பு ஏற்படுகிறது. இ.எஸ்.ஐயில் ஒரே
எண்ணில் ஒரு தொழிலாளி தொடர்ந்து பதியும் பொழுது நிறைய பலன்கள் கிடைக்கும். ஒவ்வொரு முறையும் புதிய எண்ணை பதியும் பொழுது, இ.எஸ்.ஐக்கு
அவர் புதியவராகிவிடுகிறார். ஆகையால் அதிக பலன்கள் கிடைக்க் மீண்டும் சில மாதங்களாகும்.
அப்படி அந்த தொழிலாளிக்குரிய
பழைய அடையாள எண் தெரியாத பொழுது, இ.எஸ்.ஐக்கு அந்த தொழிலாளியோ/நிறுவனமோ மின்னஞ்சல்
வழியாக முன்பு தொழிலாளிக்குரிய தனிப்பட்ட விவரங்களைப் பதிந்த பொழுது, கொடுக்கப்பட்ட
அதே மொபைல் எண்ணையோ, வங்கி கணக்கு எண்ணையோ தெரிவிக்கும் பொழுது, அவர்கள் சரிப்பார்த்து, பழைய எண்ணை இரண்டு நாட்களில்
மின்னஞ்சலில் தெரியப்படுத்துகிறார்கள்.
அனுப்பவேண்டிய இ.எஸ்.ஐயினுடைய
மின்னஞ்சல் முகவரி
நன்றி.
இரா. முனியசாமி,
GSTPS உறுப்பினர்
குறிப்பு: ”தொழில் உலகம்”
கட்டுரையைப் படித்துவிட்டு மதுரையில் இருந்து ஒரு அழைப்பு. அவருடைய மாமா கோவில்பட்டியில் தீப்பெட்டித் தொழிற்சாலையில்
வேலை செய்து ஓய்வு பெற்று இறந்துவிட்டார்.
இப்பொழுது அவருடைய துணைவியாருக்கு இடுப்பில் அடிபட்டு, நடக்க முடியாமல் இருக்கிறார்.
இ.எஸ்.ஐயில் ஒரு திட்டம்
உண்டு. ஒருவர் ஓய்வு பெற்ற பின்பு, அவருடைய கணவனோ/மனைவியோ வருடத்திற்கு குறிப்பிட்ட
தொகையை செலுத்தினால், வரம்புக்குட்பட்ட அளவில் மருத்துவ வசதிகளைப் பெறமுடியும்.
இப்பொழுது பிரச்சனை என்னவென்றால்,
அந்த மாமாவின் இ.எஸ்.ஐ எண்ணை தொலைத்துவிட்டார்கள். ஆகையால், மருத்துவ வசதியைப் பெறமுடியவில்லை. வேலை செய்த நிறுவனத்திடம் போய் கேட்கலாம் என்றால்,
இப்பொழுது அந்த நிறுவனம் மூடப்பட்டுவிட்டது.
இ.எஸ்.ஐ தலைமை அலுவலகத்தை
தொடர்பு கொண்டால், மேலே சொன்னபடி பதிந்த பொழுது கொடுக்கப்பட்ட மொபைல் எண்ணை, வங்கி
கணக்கு எண்ணை சரியாக தெரிவித்தால் தான் அவருடைய எண்ணைப் பெறமுடியும். விவரங்களை கேட்டிக்கிறேன். கொடுத்தால், அந்த எண்ணை
நம்மால் பெற்றுத்தரமுடியும்.
(There is no ceiling on
expenditure on the treatment of an Insured Person or his family member. Medical care is also provided to retired and permanently
disabled insured persons and their spouses on payment of a token annual premium
of Rs.120/-).
No comments:
Post a Comment