கடந்த சனிக்கிழமையன்று இந்துஸ்தான் சேம்பரில் (23/12/2023) GSTPS சொசைட்டியின் நேரடிக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
நாம் நடத்தும் நேரடி கூட்டங்களில் இந்த கூட்டம் 25வது என்பது சிறப்பானது.
இந்தக் கூட்டத்தில் ஜி.எஸ்.டி செக்சன் 2ல் உப பிரிவு 120 பிரிவுகளில் முதல் 40 ஐ GSTPS தலைவர் செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் விரிவாக விளக்கினார்.
கடந்த மாதம் முதல் வகுப்பு எடுத்ததில் இருந்து உறுப்பினர்களிடம் சில கேள்விகளை கேட்டார். ஒரு நல்ல ஆசியருக்கு இருக்கும் வழக்கமான பழக்கமிது. ஆசிரியர் விளக்குவார் கேட்டுவிட்டு போய்விடலாம் என நினைக்கும் மாணவர்களை கொஞ்சம் உலுக்கி, சுறுசுறுப்பாக வைத்திருக்கும் கேள்வி அது. நமக்கு நன்றாகவே தெரிந்தாலும், ஆசிரியர் கேட்கும் பொழுது சொல்ல வார்த்தைகள் கோர்வையாக வராது. அப்படித்தான் நேற்றும் நடந்தது.
இரண்டாம் வகுப்பை துவங்கினார். ஒவ்வொன்றிற்கும் ஒரு உதாரணம் கொடுத்து, உறுப்பினர்களிடம் கேள்வி எழுப்பி, பதில் சொல்ல வைத்து விளக்கி முடித்தார். சந்தேகங்களுக்கும் பதிலளித்தார்.
எப்பொழுதும் அடிப்படை அம்சங்கள் கற்றுக்கொள்வது மிகவும் அவசியம். அடிப்படை இல்லாமல், மேலே மேலே கட்டிடம் எழுப்பிக்கொண்டு போவது, ”பேஸ்மட்டம் வீக், கட்டடம் ஸ்டிராங்க்” என வடிவேல் நகைச்சுவை போல ஆகிவிடும். அதனடிப்படையில் தான் சொசைட்டி முடிவு செய்து வகுப்புகளை நடத்துகிறது.
- GSTPS
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety/
No comments:
Post a Comment