அனைவருக்கும் வணக்கம்.
“Effective usage of MS word” - தலைப்பைப் பார்த்ததும், word ல் என்ன சிறப்பு இருக்கப் போகிறது? நாம் தாம் தொடர்ந்து பல ஆண்டுகளாக பயன்படுத்துகிறோமே என என்னைப் போலவே பலருக்கும் தோணலாம்.
பத்து நாட்களுக்கு முன்பு CMA செல்வராஜ் அவர்கள் ஒரு சிறப்பு பேச்சாளரை ஏற்பாடு செய்து ஒரு இணைய வழிக்கூட்டத்தை ஏற்பாடு செய்தார். அந்த கூட்டத்தில் நமது GSTPS தலைவர் செந்தமிழ்ச்செல்வன் அவர்களும், நானும் கலந்துகொண்டோம்.
அந்த பேச்சாளர் MS word குறித்தும், Excel குறித்தும் ஒரு மணி நேரம் ஒரு பறவைப் பார்வையில் விளக்கும் பொழுது தான் ஒன்று புரிந்தது. மனித மூளையின் சிந்திக்கும் திறன், அதன் ஆற்றல் எல்லாம் மகத்தானது. ஆனால் மனித சமூகம் அதை 10% க்குள் தான் பயன்படுத்துகிறோம். இதில் விஞ்ஞானிகள் 20% தான் பயன்படுத்துகிறார்கள் என ஒரு கட்டுரையில் முன்பு படித்தது நினைவுக்கு வருகிறது.
அது போல தான், MS word, Excel பயன்பாடுகளில் நாம் அதன் ஆற்றலை 10% பயன்படுத்தினாலே பெரிய விசயம். மீதி 90% பயன்பாடு நமக்கு தெரியவில்லை. ஆகவே அதன் பயன்படுத்தாமல், நேரத்தை நிறைய செலவழித்துக்கொண்டு இருக்கிறோம்.
உதாரணமாய் அன்றைக்கு அவர் வைத்திருந்த லேப் டாப்பில் ஒரு கீயை கிளிக் செய்துவிட்டு, அவர் சொல்ல சொல்ல திரையில் எழுத்துப் பிழையில்லாமல் தட்டச்சு செய்து கொண்டே போனது. இதுப்பற்றி முன்பே கேள்விப்பட்டிருந்தாலும், அதை அவர் நடைமுறைப்படுத்தி காட்டிய பொழுது ஆச்சர்யமாய் இருந்தது.
ஆகையால் MS word யில் உள்ள பல அம்சங்களை கற்றுக்கொள்ளும் பொழுது நாம் செய்யும் வேலையை இன்னும் எளிதாக்கலாம். விரைவாக செய்யலாம். நம்முடைய ஆற்றலை பெருக்கிக்கொள்ளலாம்.
குறிப்பாக CMA செல்வராஜ் அவர்கள் நல்ல ஆசிரியர். எந்த தலைப்பு என்றாலும், தெளிவாக, விரிவாக விளக்க கூடியவர். கேள்விகள் கேட்பதை உற்சாகப்படுத்தக்கூடியவர். அதை கடந்த கூட்டங்களில் பார்த்து இருக்கிறோம். ஆகையால் தவறாமல் அனைவரும் கலந்துகொள்ளுங்கள்.
வாய்ப்புள்ளவர்கள் கலந்துகொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்.
நன்றி.
ஜூம் ஐடி : 6625536356
பாஸ்வேர்ட் : 16122023
- GSTPS
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
No comments:
Post a Comment