Tuesday, December 19, 2023

GSTPS : GST Study Circle – 2nd Class - Meeting


அனைவருக்கும் வணக்கம்.  GSTPS துவங்கிய காலத்தில் இருந்து… துறை வரியாக ஒவ்வொரு தலைப்பையும் வகுப்பாக எடுத்துக்கொண்டிருந்தோம்.  கடந்த சில ஆண்டுகளில் அநேகமாக அனைத்து துறைகளையும் விளக்கிவிட்டோம்.

 

இதற்கு பிறகு, ஜி.எஸ்.டி சட்டத்தில் உள்ள அம்சங்களை வரிசை வரியாக வகுப்புகள் எடுக்கலாம்.  ஜி.எஸ்.டி சட்டத்தின் அடிப்படை அம்சங்களை வரிசையாக உறுப்பினர்களுக்கு பயிற்றுவிப்பது அவசியம் என முடிவெடுத்தோம்.

 

கடந்த மாதம் அதன்படி, ஜி.எஸ்.டி செக்சன் 1ல்  உள்ள அம்சங்களை விரிவாக வகுப்பு எடுத்தோம். அடுத்து  செக்சன் 2ல் உப பிரிவுகள் 120 அம்சங்கள் இருக்கின்றன.  அதில் இந்த மாதம் 40 உபபிரிவுகளை விரிவாக விளக்க இருக்கிறோம்.  நமது GSTPS தலைவர் செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் விளக்க இருக்கிறார்.

 


பொதுவாக மாதத்தின் முதல் மூன்று சனிக்கிழமைகளில்  முதல் மூன்று ஜூம் கூட்டங்களில் உறுப்பினர் அல்லாதவர்களையும் அனுமதிக்கிறோம். நேரடிக்கூட்டங்களில் உறுப்பினர்கள் மட்டும் கலந்துகொள்வது என முடிவெடுத்திருந்தோம்.  ஆனால், இப்பொழுது படிப்பு வட்டம் துவங்கி இருப்பதால், உறுப்பினர் அல்லாதவர்களும் கலந்துகொள்ள அனுமதிக்கும்படி சிலர் கேட்டுக்கொண்டதால், ரூ. 250 கட்டணம் செலுத்தி பங்கு கொள்ளலாம் என முடிவு செய்திருக்கிறோம்.  ஆகையால் கலந்துகொள்ளுங்கள்.


நாள் : 23/12/2023 -  சனிக்கிழமை 

இடம் :  இந்துஸ்தான் சேம்பர் ஆப் காமர்ஸ்,  

149, Greams Dugar, 5th Floor,  

Greams Rd, Thousand Lights West, 

Thousand Lights, Chennai, Tamil Nadu 600006 

நேரம் :   மதியம் 2.30 முதல் 5.30 வரை.


நன்றி

 

-         -  GSTPS


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856


தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety/

 

No comments:

Post a Comment