வணக்கம். நேற்று சனிக்கிழமையன்று (16/12/2023) GSTPS சார்பாக வழக்கமாக நடத்தப்படும் ஜூம் கூட்டம் “Effective usage of MS word” என்ற தலைப்பில், நமது GSTPS உறுப்பினர் CMA செல்வராஜ் கே. அவர்கள் தெளிவாகவும், விரிவாகவும் பேசினார்.
நமது GSTPS உறுப்பினர்களும், மற்ற மாவட்டங்களில் இருந்தும் திரளாக கலந்துகொண்டார்கள்.
நாம் துவக்க காலங்களில், MS word மென்பொருளுக்கு முன்பாக ஆரம்ப கால மென் பொருளை கொண்டு, கடிதங்கள் தட்டச்சு செய்து வழக்கம். அதில் எந்த அலங்கார வேலைகளும் செய்ய முடியாது. ஆனால் கால் நூற்றாண்டு கடந்த பின்னும் தேவையான, பல அலங்கார வேலைகளும் செய்யக்கூடிய MS வேர்டையும் அதே போல அநியாயமாக பயன்படுத்தி வருகிறோம் என இன்றைக்கு செல்வராஜ் அவர்கள் வகுப்பு எடுத்த பிறகு தான் நமக்கு பளிச்சென புரிகிறது.
MS வேர்டில்
உள்ள பல அம்சங்களை நடைமுறை உதாரணங்களுடன் தெளிவாகவும், இரண்டு மணி நேரம் விரிவாகவும்
விளக்கினார்.
இதுநாள் வரை எக்சலில் அட்டவணைப் போட்டு தான் வேர்டில் பலரும் இணைத்திருப்போம். வேர்டிலேயே அழகாக அட்டவணை போடலாம். கணக்கு போடலாம் என்பது புதிதாக இருந்தது.
பல அம்சங்களையும் விளக்கிய பிறகு, இதெல்லாம் கொஞ்சம் தான். இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கிறது. மேலும் இது தியரி போல தான். இதையெல்லாம் நீங்கள் செய்தால் தொழில்நுட்ப ரீதியாக சந்தேகங்கள் வரும். ஆகையால், சக நண்பர்களுடன் ஒரு அரை நாள் வகுப்பு திட்டமிட்டு வருகிறோம். அந்த கூட்டத்தில் நமது உறுப்பினர்களும் கலந்துகொள்ளுங்கள். அதில் உங்கள் லேப்டாப்பை உடன் எடுத்து வாருங்கள். இன்னும் ஆழமாக சொல்லித்தருகிறோம் என உற்சாகமாக பேசி முடித்தார்.
மேலும், அவர் உரையில் குறிப்பிட்டது போல, நாம் வரி ஆலோசகர்களாக இருக்கிறோம். எல்லோருக்கும் இருப்பது போல நமக்கும் 24 மணி நேரம் தான் இருக்கிறது. டிஜிட்டல் உலகில் வாழ்ந்து வருகிறோம். ஆனால், இன்னும் வேலைகளை முறைப்படுத்திக்கொண்டு செய்வதிலும், நமது வாடிக்கையாளர்களுக்கு தகவல் அனுப்புவதிலும், தொழில்நுட்ப ரீதியாக பின்தங்கி இருப்பது நமது தொழில் வாய்ப்புகளை மேலும் வலுப்படுத்தாமல் நாமே இழப்பது போல தான். ஆகையால் நாம் தொடர்ந்து கற்றுக்கொண்டு முன்னேறுவோம் என்றார்.
கலந்துகொண்ட பலரும் புதிதாய் நிறைய கற்றுக்கொண்டதாய் இன்பாக்சில் தெரிவித்தனர். கூட்டம் இனிதே நிறைவேற்றது.
- GSTPS
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety
No comments:
Post a Comment