Wednesday, December 13, 2023

ஜிஎஸ்டியில் வழங்கல் (Supply) என்றால் என்ன ? - S. Senthamilselvan, President of GSTPS

ஜிஎஸ்டியில் வழங்கல் (Supply) என்றால்  என்ன ?

பிரிவு 7, 2(52), 2(102)

 


சு  செந்தமிழ்ச்  செல்வன்

ஜிஎஸ்டி தொழிலாற்றுநர் &பயிற்சியாளர்

 

ஜிஎஸ்டி  சட்டத்தில்  விற்பனைக்கு  என்ன  பெயர்  ?

 

ஜிஎஸ்டி  சட்டத்தில் விற்பனை அல்லது  சேவைக்கு  வழங்கல் (Supply) என்ற  சொல்லே பயன்படுத்தப்படுகிறது. ஆகவே எல்லா  வகையிலும் வழங்கப்படும் அல்லது  ஏற்றுக்                         கொள்ளப்படும் பொருள்களின் வழங்கல் அல்லது  சேவை செய்தல் என்று  கூறப்படுகிறது

 

ஜிஎஸ்டியின் கீழ் வழங்கல் என்றால் என்ன?

 


ஜிஎஸ்டியின் கீழ் வழங்கல் என்பது வரி விதிக்கக்கூடிய நிகழ்வாக வரையறுக்கப்படுகிறது, இதில் பின்வருவன அடங்கும்:

 

1)பொருட்கள் மற்றும் சேவைகளின் விற்பனை அல்லது உரிமை பரிமாற்றம்.

 

2)உரிமையை மாற்றாமல் சொத்துக்கள் மற்றும் பொருட்களை குத்தகை மற்றும் பரிமாற்றம். 

3)பணத்துடன் அல்லது இல்லாமல் பொருட்கள் மற்றும் சேவைகளின் பரிமாற்றம் அல்லது பண்டமாற்று.

 

4)சில சலுகைகள் அல்லது உரிமையாளரின் சொத்தைப் பயன்படுத்துவதற்கான உரிமம் அல்லது காலமுறைக் கொடுப்பனவுகள்.

 

5)வழங்கல் என்பது வணிக முயற்சிகளை மேம்படுத்துவதற்கு அல்லது தொண்டு பங்களிப்புகளை வழங்குவதற்கான ஒரு கருவியாகும். வழங்கல் வரையறையில் தனிப்பட்ட அல்லது வணிக மதிப்புக்கான பொருட்கள் மற்றும் சேவைகளை இறக்குமதி செய்வதும் அடங்கும். 

 

வழங்கலில்     அடங்கும் நடவடிக்கைகள் எது  ?

 

         விற்பனை- Sale

         இடமாற்றம்- Transfer

         பண்டமாற்று- Barter

         பரிமாற்றம்- Exchange

         உரிமம் -License

         வாடகை- Rental

         குத்தகை- Lease

         அகற்றல்- (Disposal of  business assets )

         சேவையை வெளிநாட்டிலிருந்து  பெறுதல் (இறக்குமதி). இதற்கு பண மதிப்பு இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை

ஜிஎஸ்டி சட்டத்தின் அட்டவணை I இல் குறிப்பிடப்பட்டுள்ள சில நடவடிக்கைகள் வழங்கலாகவும் கருதப்படும்

 

விற்பனை என்பது எதைக்  குறிக்கும் ?


ஒரு பொருளை மற்ற ஒருவருக்கு  விற்பனை செய்தல். அதன் உரிமையை  மாற்றிக் கொடுத்தல். பொருள்கள் என்பது பணம் மற்றும்  காப்புறுதி  ஆவணங்கள் (Securities) அல்லாத  பிற  அசையும் சொத்துக்கள் அனைத்தையும் குறிக்கும்.

 

சிஜிஎஸ்டி   சட்டம் பிரிவு  2(52) படி பயிர்கள் வழங்கலில்  அடங்குமா ?

 

ஆம். வழங்குவதற்கு முன் பிரிக்கப் படுவதற்கு ஒத்துக் கொள்ளப்பட்ட நிலத்துடன் இணைந்துள்ள அல்லது  அதன் பகுதியாக அமைந்துள்ள வளரும்  பயிர்கள், புல்  மத்துரும் பொருள்கள் நடவடிக்கைக்கு உரிய கேட்பு உரிமை  இதில் அடங்கும். 

 

பரிமாற்றம் (Transfer ) என்றால்  என்ன ?

 

பரிமாற்றம் என்பது பொருள்களை விற்பனை செய்வதற்காக ஒரு நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திலிருந்து  கிளை அலுவலகத்திற்கு மாற்றம்  செய்தல். கிளை அலுவலகத்திலிருந்து தலைமை அலுவலகத்திற்கு மாற்றம்  செய்தல்.

 

பழங்காலத்தில் இருந்த  பண்டமாற்று (Barter ) முறைப் பற்றி  விளக்க  முடியுமா ?

 

பண்டமாற்று (Barter) என்பது ஒரு பொருள்  வழங்கலுக்கு பணம் கொடுப்பதற்கு பதிலாக அதன் மதிப்பில் வேறு பொருளை கொடுத்தல். இது பழங்காலத்தில்  பயன்படுத்தப்பட்ட முறை.


உரிமம்  (License ) என்றால்  என்ன ?

ஒரு   குறிப்பிட்ட  பொருளை, செயலை பயன்படுத்த  உரிமம்  (License) வழங்குதல்

 

குத்தகை (Lease ) என்பது  எதை  குறிக்கும்  ?

 

அசையும் அல்லது ’அசையாத’ பொருள்கள் அல்லது கட்டிடம் போன்றவற்றை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பயன்படுத்த அனுமதித்தால் குத்தகை (Lease) எனப்படும்

 

வாடகையைப் (RENT) பற்றி  விளக்க  முடியுமா ?

 

ஒரு சொத்தை  முழுவதுமாக அல்லது பகுதியாக மற்றொருவருக்கு வணிகம் செய்ய/பயன் படுத்த வாடகைக்கு விடுதல் ( Commercial Rent )

 

நிலத்தை குத்தகைக்கு விடுதல், வாடகைக்கு கொடுத்தல், இதில்  நிலம்  அல்லது கட்டிடத்தை வணிகம் செய்ய கொடுத்தல், குடியிருப்பு இடத்தை வணிகம் செய்ய முழுமையாகவோ, ஒரு பகுதியாகவோ அனுமதிக்கும் அனைத்தும் இதில் அடங்கும்

 

வணிக சொத்துக்களை பரிமாற்றம் (Transfer) செய்தல்  வழங்கலாக  கருதப்  படுமா ?

 

ஒரு வணிகத்தின் சொத்துக்களை, அதன் உரிமையாளர் வேறு ஒருவருக்கு கொடுத்தால்  அது வழங்கலாகவே கருதப்படும். அந்த சொத்து மாற்றம் செய்தப் பின் வணிகத்தில் இருக்காது என்ற நிலையில் அதற்கான தொகை பெறப்பட்டாலும் அல்லது பெறப்படவிட்டாலும்  வழங்காலவே கருதப்படும் .

 

ஜிஎஸ்டியின் கீழ் வழங்கலுக்கான  குணாதிசயங்கள்   என்ன?

 

Ø  வழங்கல் பொருட்கள் அல்லது சேவைகளாக இருக்க வேண்டும்.

Ø  வழங்கல் வரி விதிக்கப்பட வேண்டும்.

Ø  வரி விதிக்கக்கூடிய நபரால் வழங்கப்பட வேண்டும்.

Ø  வரி விதிக்கக்கூடிய எல்லைக்குள் வழங்கல் செய்யப்பட வேண்டும்.

Ø  பணம் அல்லது வெகுமதிக்கு  ஈடாக வழங்கல் செய்யப்பட வேண்டும்.

Ø  வணிகத்தின் போக்கில் அல்லது வணிகத்தை வளர்க்கும் ஆர்வத்தில் வழங்கல் செய்யப்பட வேண்டும்.

Ø  இந்த ஒவ்வொரு குணாதிசயங்களும் ஜிஎஸ்டி சட்டத்தில் எவ்வாறு வரையறுக்கப்பட்டுள்ளன என்பதைப் பார்ப்போம்.

 

ஜிஎஸ்டியின் கீழ் வழங்குவதற்கான கூறுகள் எவை  ?

 

2017 இன் CGST சட்டம் சில பண்புக்கூறுகள் அடிப்படை விநியோக கூறுகளைக் குறிப்பிடுகின்றன. இடம், மதிப்பு மற்றும் நேரம் ஆகியவை இதில் அடங்கும்.

 

வழங்கலின்  வகைகள் என்ன?


 

வழங்கல் இரண்டு முக்கிய வகைகளை உள்ளடக்கியது

 

1) வரி விதிக்கக்கூடிய மற்றும்

2)வரி விதிக்கப்படாதது.

 

 

வரி விதிக்கப்படக்கூடிய பொருட்கள்  என்றால் என்ன?

 

சிஜிஎஸ்டி சட்டத்தின்படி, வரிவிதிப்புக்கு  உட்பட்ட  வழங்கல் என்பது :

 

இந்த சட்டத்தின் கீழ் வரி விதிக்கப்படக்கூடிய பொருட்கள் அல்லது சேவைகளின் வழங்கல் அல்லது இரண்டும் சேர்ந்தது. வரிவிதிப்பு வழங்கல் என்பது ஜிஎஸ்டி  விதிக்கப்படும் ஒரு வழங்கல்  என்று பொருள். . இருப்பினும், வரி செலுத்துவோர் பணம் செலுத்தும் போது வரி செலுத்துதலில் பணத்தைத் திரும்பப் பெறலாம்

 

வரிவிலக்கு வழங்கல் என்பது என்றால் என்ன?:

 

எந்தவொரு பொருட்களின் அல்லது சேவைகளின் வழங்கல்  மீது  வரிவிகிதம்  இல்லாதது  அல்லது பிரிவு 11 இன் கீழ்  ஒருங்கிணைந்த (IGST) பொருட்கள் மற்றும் சேவை வரிச் சட்டத்தின் 6 வது பிரிவின் கீழ் வரியிலிருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்ட மற்றும் வரி விதிக்கப்படாத வழங்கலை  உள்ளடக்கியது. அதேசமயம், “வரி விலக்கு வழங்கல்” என்ற சொல், ஜிஎஸ்டி விகிதம்  எதுவும்  இல்லாதது அல்லது சட்டத்தின் 11 வது பிரிவின் கீழ் முற்றிலும் வரி  விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களைக் குறிக்கிறது.

 

ஒரு வழங்கலில் வரி விதிக்கப்படக்கூடிய வழங்கல் மற்றும் வரி விதிக்கப்படாத வழங்கல்  ஆகிய  இரண்டும்  இணைந்தும்  வழங்கினால் என்ன   செய்ய   வேண்டும் ?.

 

எடுத்துக் காட்டாக  உணவு விடுதிகளில்  தின்பண்டங்களுடன் பரிமாறப்படும்  மதுபானம் . இதில்   வரி விதிக்கப்படாத வழங்கலும்,  வரிவிதிப்புகக்கு உட்பட்ட  வழங்கலும்  ஒன்றாக   இணைத்து   வழங்கப்படுகிறது. இது சாதாரண வணிகத்தின் போக்கில் இயற்கையாக தொகுக்கப்பட்ட வழங்கல், எனினும்  இது ஒரு வரி  விலக்கு  அளிக்கப்பட்ட  வழங்கலாக தான்  கருத வேண்டும், ஏனெனில்  முதன்மை   வழங்கலான மதுபானம்  ஜிஎஸ்டி வரிக்கு  உட்பட்டதல்ல.

.

வரி விதிக்கக்கூடிய பொருட்களை எத்தனை  வகை  ?

 

1)வழக்கமான வரி விதிக்கக்கூடிய பொருட்கள்: நேர்மறை வரித் தொகையாக இருந்தால், எந்தவொரு பொருள் அல்லது சேவையின் வழங்கல்  வழக்கமானதாக இருக்கும்.

 

2)Nil-rated supplies: எந்த வரியும் விதிக்கப்படாத பொருட்கள்.

3) ஜிஎஸ்டியின் கீழ் ஜீரோ-ரேட்டட் சப்ளை: சிறப்புப் பொருளாதார மண்டலம் (SEZ) அல்லது பிற வணிக நிறுவனங்களுக்கு சில பொருட்களை ஏற்றுமதி செய்வது வரி விதிக்கப்படாது, ஆனால் தேசிய எல்லைகளுக்குள் விற்கும்போது வரி விதிக்கப்படும்.

 

வரி விதிக்கப்படாத பொருட்கள்  என்றால் என்ன  ?

 

இந்த பொருட்கள் மற்றும் சேவைகளின் வழங்கலில் எந்த வரியும் விதிக்கப்படாது. இவற்றில் அடங்கும்:

 

விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் : சில பொருட்கள் மற்றும் சேவைகளின் வழங்கல் வரி விதிக்கப்பட்ட வகைக்குள் வந்தாலும் GST செலுத்தப்படாது.

 

ஜிஎஸ்டி அல்லாத சப்ளைகள் : சில பொருட்கள் மற்றும் சேவைகளின் வழங்கல் , ஜிஎஸ்டியின் கீழ் வரி விதிக்கப்படாத வழங்கல்கள்

 

- தமிழ் தொழில் உலகம்-செப்டம்பர் 2022 இதழில் வெளிவந்தது.

1 comment:

  1. அருமையான விளக்கம். நன்றி

    ReplyDelete