Sunday, December 3, 2023

GSTPS - Explanations of TDS Sections under Income tax act - G. Sivakumar, EC Member - Meeting Experience


அனைவருக்கும் வணக்கம். 
 கடந்த சனிக்கிழமையன்று (02/12/2023) நடைபெற்ற GSTPS ஜூம் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. "Explanations of TDS Sections under Income tax act " என்ற தலைப்பில் செயற்குழு உறுப்பினர் சிவக்குமார் அருமையாக விளக்கி பேசினார்.

 

கூட்டத்தில் பங்கேற்ற GSTPS உறுப்பினர்களும், மற்றவர்களும் துவக்கத்திலிருந்து இறுதி வரை கேட்ட அனைத்து சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் தெளிவாக பதிலளித்தார். செயலர் பாலாஜி அவர்களும் பதில் சொல்வதில் அவருக்கு துணை நின்றார்.

 


TDS யார் பிடிக்கவேண்டும்? அதற்கான தகுதி என்ன?

 

எந்தெந்த தலைப்புகளில் எவ்வளவு TDS பிடிக்கவேண்டும்?

 

தனிநபர், நிறுவனம் என்றால் எவ்வளவு பிடிக்கவேண்டும்?

 

இப்படி பல தலைப்புகளில் விரிவாக விளக்கினார்.

 

கேள்விகளும், சந்தேகங்களும் வந்தன.

 

இரண்டு பான் கார்டு வைத்திருந்தால் என்ன ஆகும்? என்ன செய்யவேண்டும்?

 

தவறாக ஒரு பான் கணக்கில் கட்டினால், இன்னொருவருக்கு மாற்ற முடியுமா?

 

ஒரு காலாண்டு ரிட்டர்னில் தாக்கல் செய்தில் தவறு செய்தால், அதை திருத்துவதற்கு எவ்வளவு மெனக்கெடவேண்டும்?

 

தாமதக்கட்டணம் எவ்வளவு? வட்டியை தாமதமாக கட்டினால், அதற்கும் வட்டி உண்டு.

 

ஒருவருக்கு ஒன்றரை கோடி பணமாக கொடுத்தால், எவ்வளவு மகிழ்ச்சியடைவார் அதுவே அவருடைய கணக்கில் தவறுதலாக டிடிஎஸ்-யாக கட்டிவிட்டால், எவ்வளவு மன உளைச்சலுக்குள்ளாவர் என்பதை சொல்லும் பொழுது சிரித்துக்கொண்டே கேட்க முடிந்தது.

 

பான் இல்லாதவர்களுக்கும், பான் அட்டை ஆதார் அட்டை இணைக்காதவர்களுக்கும் TDS அதிகம் பிடிக்கவேண்டும். அதை எப்படி சரிப்பார்ப்பது என்றால் இந்த  வருமான வரித்தளமே அதற்கான ஒரு ஏற்பாட்டை செய்து தந்திருக்கிறது. இந்தத் தளத்தைப் பாருங்கள் என பரிந்துரைத்தார்.

 

https://report.insight.gov.in/reporting-webapp/portal/homePage

 

இதுவரை நாம் நடத்திய கூட்டங்களில் இத்தனை கேள்விகள், சந்தேகங்கள் வந்திருக்குமா என தெரியவில்லை என கோவையிலிருந்து கலந்துகொண்ட பெருமாள் அவர்கள் சுவையாக சுட்டிக்காட்டினார்.

 

வேறு ஒருவரை ஏற்பாடு செய்து, மூன்று நாட்களுக்கு முன்பு அவருக்கு வந்த சொந்த நெருக்கடியால் பேசமுடியாத நிலை என்றாகிவிட, உடனே நிர்வாகிகளுடன் விவாதித்து இந்த தலைப்பில் பேசலாம் என சொன்ன பொழுது, செயற்குழு உறுப்பினர் சிவக்குமார் மறுக்காமல் ஏற்றுக்கொண்டார். கூட்டத்தையும் சிறப்பாக நடத்தினார். எல்லா கேள்விகளுக்கும் தெளிவாக பதிலளித்தார் என தலைவர் செந்தமிழ்ச்செல்வன் அவரைப் பாராட்டினார்.

 

கேள்விகள் சராமரியாக வந்த பொழுது அத்தனை கேள்விகளையும் சளைக்காமல் பதிலளித்தார். அதில் இருந்து அவருக்கு இந்த விசயத்தில் எத்தனை தெளிவு இருந்தது என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.

 

இந்த கூட்டத்தை பதிவு செய்துள்ளோம். விரைவில் எங்கள் யூடியூப்பில் வலையேற்றுகிறோம்.

 


நமது GSTPS உறுப்பினர்களும், பிற மாவட்டங்களில் இருந்தும் திரளாக கலந்து கொண்டார்கள். அப்படி கலந்துகொண்டவர்களில்  10 பேர்வரை கூட்டத்தின்  பிபிடிகளை பகிருங்கள் என கேட்டுக்கொண்டனர். அவர்களுக்கு உடனே அனுப்பி வைத்துவிட்டோம். 


கூட்டத்தின் பிபிடிகளை தனி பதிவாக தளத்திலும் உடனே பகிர்கிறோம்.

 

நன்றி.

 

GSTPS


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/groups/792542932366102

No comments:

Post a Comment