வணக்கம். கடந்த சனிக்கிழமையன்று (28/04/2024) GSTPS உறுப்பினர்களுக்கான நேரடிக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் துவங்கியது. உறுப்பினர் கைலாசமூர்த்தி அவர்கள் ஒரு குட்டிக்கதை சொல்லி, அனைவரையும் வரவேற்று பேசினார்.
முதல் உரையாக அடிப்படையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற அடிப்படையில் துவங்கப்பட்ட
வகுப்பின் தொடர்ச்சியாக 4வது வகுப்பாக, நமது
தலைவர் செந்தமிழ்ச்செல்வன் “CGST act – Sec 32 (81) to Sec 2 (120) வரை ஒவ்வொரு அம்சத்தையும்
உதாரணத்துடன் பிபிடி வழியே விளக்கினார். உறுப்பினர்கள் இடையிடையே கேட்ட சந்தேகங்களுக்கும்
விளக்கமளித்தார்.
இடைவேளையில், இரண்டு சுவையான இனிப்பும், ஒரு சூடான சமோசாவும்,
ஒரு நல்ல காபியும் தந்ததில் கொஞ்சம் ஆசுவாசப்படுத்த முடிந்தது.
பிறகு, சம்பளக்காரர்கள் குறித்த டிடிஎஸ் (TDS) குறித்த
அம்சங்களை, ஒவ்வொன்றாக பிபிடி வழியே நமது இணைச்செயலர் செண்பகம் அவர்கள் தெளிவாக விளக்கினார்.
இடையிடையே உறுப்பினர்கள் கேட்ட எல்லா சந்தேகங்களுக்கும் பதிலளித்தார்.
நேரடிக் கூட்டத்தின் பொழுது, இடையிடையே கேள்விகள் கேட்பதும், தொழில் ரீதியான ஆற்றலும், அனுபவமும் பலருக்கும்
இருப்பதால், பலருடைய கருத்துக்களையும், விவாதிப்பதால் பலருக்கும் நல்ல தெளிவு கிடைக்கிறது. நேரடிக்கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் இருக்கும் பல
உறுப்பினர்களுக்கும் இது ஒரு பெரிய இழப்பு தான்.
இறுதியாக வந்து கலந்துகொண்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் செயற்குழு உறுப்பினர் சிவக்குமார் அவர்கள் நன்றி தெரிவித்தார்.
வாட்டும் வெயில், பயணம் என எத்தனை சிரமம் இருந்தாலும், கற்றுக்கொள்ளும் ஆர்வத்துடன்
எப்பொழுதும் போல வழக்கமாய் வருகை தரும் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டது மகிழ்ச்சி.
இரு தலைப்புகளிலும் உள்ள பிபிடியை தனித்தனி தலைப்புகளில்
வெளியிடுகிறோம்.
நன்றி.
- GSTPS
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987




.jpeg)



.jpeg)
No comments:
Post a Comment