Wednesday, November 27, 2024

GSTPS : November 2024 - GST updates - S. Senthamil Selvan, GSTPS, President

நமது GSTPS நேரடிக்கூட்டம் நேற்று (23/11/2024) இந்துஸ்தான் சேம்பரில் சிறப்பாக நடைபெற்றது. திரளாக நமது உறுப்பினர்களும் கலந்துகொண்டார்கள்.

ஜி.எஸ்.டி துவங்கிய காலம் தொட்டு, இன்றைக்கு வரைக்கும் ஜி.எஸ்.டியில் புதுப்புது மாற்றங்களை செய்துகொண்டிருக்கிறார்கள்.  நாம் தொழிலை நேர்த்தியாக செய்யவேண்டுமென்றால், ஜி.எஸ்.டி, வருமான வரி குறித்த புதுப் புது அறிவிப்புகளை நாம் அறிந்துகொள்வது மட்டுமல்ல! தெளிவாக கற்றுக்கொள்வது அவசியம். 

இப்படி மாற்றங்கள் நிறைய வருவதால், நமது தலைவர் செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் மாதந்தோறும் GST update குறித்து விளக்குவது என ஒரு நல்ல முடிவை எடுத்துள்ளார். அதன் தொடர்ச்சியில் நவம்பரில் வந்த அறிவிப்புகளையும் பிபிடி வழியாக விளக்கினார்.  ஒவ்வொன்றாக விளக்கி சொல்லும் பொழுது  உறுப்பினர்கள் அதில் சந்தேகங்களை கேட்டார்கள்.   தலைவர் பதிலளித்தார். மற்றவர்களும் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்கள்.

அவர் பகிர்ந்துகொண்ட பிபிடியை இங்கு பகிர்கிறோம்.  உறுப்பினர்களும், பொது வெளியைச் சேர்ந்தவர்களும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

நன்றி.

GSTPS

தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety

Sunday, November 24, 2024

GSTPS : 36வது நேரடிக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது

நமது GSTPS நேரடிக்கூட்டம் நேற்று (23/11/2024) இந்துஸ்தான் சேம்பரில் சிறப்பாக நடைபெற்றது. திரளாக நமது உறுப்பினர்களும் கலந்துகொண்டார்கள்.

கூட்டம் துவங்கியது. முதல் உரையாக NRI – TDS குறித்து பிபிடி வழியாக விரிவாகவும், நடைமுறை அனுபவங்களுடனும் சிறப்பாக விளக்கினார் CA சந்திரமெளலி அவர்கள்.  உறுப்பினர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கும் பதிலளித்தார்.  இப்பொழுது மட்டுமல்ல இது சம்பந்தமாக எப்பொழுதும் சந்தேகம் கேட்டாலும் பதிலளிக்க தயாராய் இருப்பதாய் தெரிவித்தார்.  அவர் எடுக்கவேண்டிய இரண்டாவது தலைப்புக்கு ஒரு மணி நேரம் தேவைப்படுவதால், அடுத்து அதற்கென ஒரு கூட்டத்தில் விளக்குவதாக கூறினார். 

இடைவேளையில் சுவையான போண்டாவும், பஜ்ஜியும், ஒரு இனிப்பு கேக்கும் சூடான காபியும் தந்தார்கள்.  பொதுவாக நமது உறுப்பினர்கள் தங்கள் வீட்டு மகிழ்ச்சியான நிகழ்வுகளை இனிப்புகளோடு நம்மோடு பகிர்ந்துகொள்ளும் நல்ல வழக்கம் இருக்கிறது.  அதனடிப்படையில் ஒருவர் தன்னுடைய திருமணநாளை ஒட்டி, இனிப்பை பகிர்ந்துகொண்டார். (பெயரை குறிப்பிடவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.)  அவருக்கு நம் சார்பாக வாழ்த்துகளை பகிர்ந்துகொள்வோம்.

ஜி.எஸ்.டி துவங்கிய காலம் தொட்டு, இன்றைக்கு வரைக்கும் ஜி.எஸ்.டியில் புதுப்புது மாற்றங்களை செய்துகொண்டிருக்கிறார்கள்.  நாம் தொழிலை நேர்த்தியாக செய்யவேண்டுமென்றால், ஜி.எஸ்.டி, வருமான வரி குறித்த புதுப் புது அறிவிப்புகளை நாம் அறிந்துகொள்வது மட்டுமல்ல! தெளிவாக கற்றுக்கொள்வது அவசியம். 

இப்படி மாற்றங்கள் நிறைய வருவதால், நமது தலைவர் செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் மாதந்தோறும் GST update குறித்து விளக்குவது என ஒரு நல்ல முடிவை எடுத்துள்ளார். அதன் தொடர்ச்சியில் நவம்பரில் வந்த அறிவிப்புகளையும் பிபிடி வழியாக விளக்கினார்.  ஒவ்வொன்றாக விளக்கி சொல்லும் பொழுது  உறுப்பினர்கள் அதில் சந்தேகங்களை கேட்டார்கள்.   தலைவர் பதிலளித்தார். மற்றவர்களும் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்கள்.

Rent – RCM குறித்தும் கேள்விகள் வந்தன. இந்த மாதம் நமது உறுப்பினர்களுக்கு நிறைய வேலையையும், கேள்விகளையும், சந்தேகங்களையும் உருவாக்கியுள்ளது.   Rent – RCM கொண்டு வந்ததற்கான காரணம் என்பது கூட விவாதிக்கப்பட்டது. பதிலும் அளிக்கப்பட்டது.   ”ஒவ்வொரு உறுப்பினரும் தங்களுக்கு எழும் சந்தேகங்களையும் நமது வாட்சப் குழுவில் பகிர்ந்துகொள்ளுங்கள்.”  அப்படி கேள்விகள் கேட்பதன் மூலம், அவற்றை எல்லாம் பதிலளிக்க ஒரு கூட்டம் ஏற்பாடு செய்கிறோம் என தெரிவித்தார்.

எப்பொழுதும் நேரடிக் கூட்டத்தில், உறுப்பினர்கள் தொழில் வாழ்வில் எழும் சில சந்தேகங்களை கேட்டு, தெளிவு பெறுவது வழக்கம்.  அதனடிப்படையில், Dr. வில்லியப்பன் அவர்களும், சாதிக்பாட்சா அவர்களும் மற்றவர்களும் எழுப்பினார்கள். அதற்கும் பலரும் பதிலளித்தார்கள்.

நமது சொசைட்டியில் சமீபத்தில் இணைந்த இரண்டு புதிய உறுப்பினர்கள் திரு. அண்ணாமலை, திரு. முருகன்,  இருவரும் கலந்துகொண்டு, சுய அறிமுகம் செய்துகொண்டார்கள்.  

வளசரவாக்கத்தில் வரும் திரு. முகமது அவர்களுக்கு உறுப்பினருக்கான சான்றிதழும், ஐடி கார்டும், அழகான குடையும் வழங்கப்பட்டது. 

நமது இணைய வழிக்கூட்டங்களில்  கலந்துகொண்டவர்களில் பிபிடி கேட்கிறவர்கள், கூட்டச் செய்திகளைப் பகிர்ந்துகொள்ள கோருபவர்கள் என 120 பேருக்கு கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக   நமது கூட்ட செய்திகளைப் பகிர்ந்து வருகிறோம்.  நேரடிக் கூட்டம் உறுப்பினர்களுக்கு மட்டும் என்றாலும்,  உறுப்பினராக ஆர்வம் உள்ளவர்களும் கலந்துகொள்ளலாம், உறுப்பினர்கள் தங்கள் தொழில்முறை நண்பர்களையும் அழைத்து வாருங்கள் என தெரிவித்த அடிப்படையில் புதிதாக இருவர் கலந்துகொண்டார்கள்.   விரைவில் உறுப்பினர்களாகிறோம் எனவும் தெரிவித்தார்கள்.

பொருளாளர் செல்வராஜ் அவர்கள் பேசிய, கலந்துகொண்ட அத்தனை பேருக்கும் வந்திருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.   60களில் கலைவாணர் என்.எஸ்.கே சம்பளம் குறித்தும், வாழ்க்கைப் பாடுகள் குறித்தும் ஒரு பாடல் பாடியிருப்பார். 20 நாளுக்கு பிறகு திண்டாட்டம் என்பார். ஜி.எஸ்.டி கன்சல்டண்டுகளுக்கு அந்த பாடல் பொருந்துகிறது.   3பி தாக்கல் செய்யும் 20 தேதி வரை திண்டாட்டம் தான் என சுவையாக சொல்லி சென்றார்.

நாம் கூட்டம் நடத்தும் அரங்கம் 2 மணி துவங்கி 5.30 மணி வரை தான் அனுமதி.  நிர்வாகிகள் கூட்டம் 2 மணி என அறிவித்தாலும், சிலர் வந்துவிடுகிறார்கள். பலர் 2.30 2.45 என வந்து சேருவதால், கூட்டம் துவங்க தாமதமாகிவிடுகிறது.   ஆனால் உறுப்பினர்கள் நிறைய விவாதிக்கவேண்டும் என ஆவலோடு வருகிறார்கள்.  உறுப்பினர் சாதிக்பாட்சா (60 +60) 120 கிமீ பயணம் செய்து வருகிறார். அதனால், 6 மணி வரை கூட்டம் நடத்துகிறோம்.  தலைவருக்கு அந்த அரங்கத்தை நடத்துகிற நிறுவனம் நீண்ட கால பழக்கம் என்பதால் பொறுத்துப்போகிறார்கள். ஆகையால் 2 மணி கூட்டத்திற்கு 2 மணிக்கே வந்துவிடுவது நல்லது. அப்பொழுது தான் நமக்கு எல்லாவற்றையும் விவாதிப்பதற்கு போதுமான நேரம் கிடைக்கும். 

அதே போல உறுப்பினர்கள் எழும் சந்தேகங்களை குழுவில் கேளுங்கள். தட்டச்சு செய்ய முடியவில்லை என்றால், கேள்வியை ஆடியோவாக பதிவு செய்யுங்கள். நிர்வாகிகளும், அனுபவம் உள்ள உறுப்பினர்களும் பதிலளிப்பார்கள்.

GSTPS

தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety

Wednesday, November 20, 2024

GSTPS : Our 36th Direct Meeting - Announcement

நமது GSTPS மூலம் தொடர்ந்து, பொதுவெளியில் இணைய (ஜூம்) வழியிலும், உறுப்பினர்களுக்காக நேரடிக்கூட்டங்களையும் நடத்தி வருகிறோம்.

அதன் தொடர்ச்சியில், இந்த வாரம் 36 வது நேரடிக் கூட்டமாக வருகிற சனிக்கிழமையன்று (23/11/2024) மதியம் 2 மணியளவில் ஜூம் வழிக் கூட்டத்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.

முதல் தலைப்பு :    "நவம்பர் 2024 - GST Updates" 

பேச்சாளர் :    திரு. S. செந்தமிழ்ச்செல்வன், 

                         தலைவர், GSTPS

இரண்டாவது தலைப்பு :    "TDS Payments  to NRI  and Corporate Guarantee under transferpricing" 

பேச்சாளர் :    CA திரு. S. சந்திரமெளலி, 

                         உறுப்பினர், GSTPS

அன்புள்ள GSTPS உறுப்பினர்களுக்கு,

வணக்கம். மாதம் மூன்று கூட்டங்கள்  இணைய (Zoom) வழியாகவும், நான்காவது வாரத்தில் உறுப்பினர்களுக்காக மட்டும் ஒரு நேரடிக் கூட்டம் நடத்துகிறோம்.

அதன் தொடர்ச்சியில் வருகிற சனிக்கிழமையன்று 36வது நேரடிக் கூட்டம் இந்துஸ்தான் சேம்பர் ஆப் காமர்ஸ்-ல் நடத்துகிறோம்.

நமது தலைவர் செந்தமிழ்ச்செல்வன் அவர்களும், உறுப்பினர் CA சந்திரமெளலி அவர்களும் ஜிஎஸ்.டி, வருமான வரி துறை சார்ந்த விசயங்களை நமக்கு பயிற்றுவிக்க இருக்கிறார்கள்.

இந்த நேரடிக் கூட்டத்தை நடத்துவதால் சொசைட்டிக்கு ஒரு கணிசமான செலவு ஏற்பாட்டாலும் உறுப்பினர்களின் நலனுக்காக தான் நடத்துகிறோம்.

நமது சொசைட்டி தொடர்ந்து துறை சார்ந்த அப்டேட்டுகளை தொடர்ந்து கொடுத்துவருகிறோம். கற்க கசடற என்பது போல, புதிய புதிய அறிவிப்புகள் வந்துகொண்டே இருந்தாலும், தொழில் வாழ்க்கையில் நிறைய சந்தேகங்களையும், கேள்விகளையும் எதிர்கொள்கிறோம். 

நேரடிக் கூட்டத்தில் கலந்துகொள்வதன் மூலம் அப்படிப்பட்ட சந்தேகங்களை, கேள்விகளை கேட்பதன் மூலம் பலரும் அதன் விவாதத்தில் கலந்துகொள்வதன் மூலம் ஒரு தீர்வுக்கு நம்மால் வரமுடிகிறது. 

நேரடிக் கூட்டத்தின் பலனை உணர்ந்தவர்கள் அலுவலக வேலைகளில் எத்தனை நெருக்கடி இருந்தாலும், அவசியம் கலந்துகொள்கிறார்கள்.  

சனிக்கிழமைகளிலும் வேலை செய்கிற உறுப்பினர்கள் ஒரு அரைநாள் விடுப்பு எடுத்து கலந்துகொள்வதின் மூலம் உங்கள் தொழில் அறிவை நன்றாக மேம்படுத்திக்கொள்ளமுடியும்.

இப்படி கலந்துகொள்வதன் மூலம் நமது உறுப்பினர்கள்  ஒருவருக்கொருவர் அறிமுகமாகி கொள்கிறார்கள். பரஸ்பரம் உதவிகள் கேட்டும், செய்தும் நெருக்கமாகிறார்கள்.

இந்த கூட்டம் உறுப்பினர்களுக்காக தான் நடத்துகிறோம். உறுப்பினராகும் ஆர்வம் உள்ள உங்களுடைய  தொழில்முறை நண்பர்களையும் அழைத்து வாருங்கள்.

நேரில் சந்திக்கலாம்.

நன்றி.

GSTPS

தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety

Monday, November 18, 2024

GSTPS : "Amnesty Scheme 128A and Section 22 & 23" - S. Selvaraj, Treasurer, GSTPS

கடந்த சனிக்கிழமை (16/11/2024) ஜூம் வழிக்கூட்டம்  சிறப்பாக நடைபெற்றது. ”Amnesty Scheme 128A and Section 22 & 23” குறித்து GSTPS பொருளாளர் செல்வராஜ் பிபிடி வழியாக விரிவாக விளக்கினார்.  பங்கேற்பாளர்கள் கேட்ட கேள்விகளுக்கும் தெளிவாக பதிலளித்தார்.

நமது உறுப்பினர்களும், தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்தும் திரளாக கலந்துகொண்டனர்.

பேச்சாளர் பயன்படுத்திய பிபிடியை இங்கு பகிர்கிறோம். பயன்படுத்திக்கொள்ளுங்கள்.  உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

நன்றி.

- GSTPS