நமது GSTPS மூலம் தொடர்ந்து, பொதுவெளியில் இணைய (ஜூம்) வழியிலும், உறுப்பினர்களுக்காக நேரடிக்கூட்டங்களையும் நடத்தி வருகிறோம்.
அதன் தொடர்ச்சியில், இந்த வாரம் 36 வது நேரடிக் கூட்டமாக வருகிற சனிக்கிழமையன்று (23/11/2024) மதியம் 2 மணியளவில் ஜூம் வழிக் கூட்டத்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.
முதல் தலைப்பு : "நவம்பர் 2024 - GST Updates"
பேச்சாளர் : திரு. S. செந்தமிழ்ச்செல்வன்,
தலைவர், GSTPS
இரண்டாவது தலைப்பு : "TDS Payments to NRI and Corporate Guarantee under transferpricing"
பேச்சாளர் : CA திரு. S. சந்திரமெளலி,
உறுப்பினர், GSTPS
அன்புள்ள GSTPS உறுப்பினர்களுக்கு,
வணக்கம். மாதம் மூன்று கூட்டங்கள் இணைய (Zoom) வழியாகவும், நான்காவது வாரத்தில் உறுப்பினர்களுக்காக மட்டும் ஒரு நேரடிக் கூட்டம் நடத்துகிறோம்.
அதன் தொடர்ச்சியில் வருகிற சனிக்கிழமையன்று 36வது நேரடிக் கூட்டம் இந்துஸ்தான் சேம்பர் ஆப் காமர்ஸ்-ல் நடத்துகிறோம்.
நமது தலைவர் செந்தமிழ்ச்செல்வன் அவர்களும், உறுப்பினர் CA சந்திரமெளலி அவர்களும் ஜிஎஸ்.டி, வருமான வரி துறை சார்ந்த விசயங்களை நமக்கு பயிற்றுவிக்க இருக்கிறார்கள்.
இந்த நேரடிக் கூட்டத்தை நடத்துவதால் சொசைட்டிக்கு ஒரு கணிசமான செலவு ஏற்பாட்டாலும் உறுப்பினர்களின் நலனுக்காக தான் நடத்துகிறோம்.
நமது சொசைட்டி தொடர்ந்து துறை சார்ந்த அப்டேட்டுகளை தொடர்ந்து கொடுத்துவருகிறோம். கற்க கசடற என்பது போல, புதிய புதிய அறிவிப்புகள் வந்துகொண்டே இருந்தாலும், தொழில் வாழ்க்கையில் நிறைய சந்தேகங்களையும், கேள்விகளையும் எதிர்கொள்கிறோம்.
நேரடிக் கூட்டத்தில் கலந்துகொள்வதன் மூலம் அப்படிப்பட்ட சந்தேகங்களை, கேள்விகளை கேட்பதன் மூலம் பலரும் அதன் விவாதத்தில் கலந்துகொள்வதன் மூலம் ஒரு தீர்வுக்கு நம்மால் வரமுடிகிறது.
நேரடிக் கூட்டத்தின் பலனை உணர்ந்தவர்கள் அலுவலக வேலைகளில் எத்தனை நெருக்கடி இருந்தாலும், அவசியம் கலந்துகொள்கிறார்கள்.
சனிக்கிழமைகளிலும் வேலை செய்கிற உறுப்பினர்கள் ஒரு அரைநாள் விடுப்பு எடுத்து கலந்துகொள்வதின் மூலம் உங்கள் தொழில் அறிவை நன்றாக மேம்படுத்திக்கொள்ளமுடியும்.
இப்படி கலந்துகொள்வதன் மூலம் நமது உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி கொள்கிறார்கள். பரஸ்பரம் உதவிகள் கேட்டும், செய்தும் நெருக்கமாகிறார்கள்.
இந்த கூட்டம் உறுப்பினர்களுக்காக தான் நடத்துகிறோம். உறுப்பினராகும் ஆர்வம் உள்ள உங்களுடைய தொழில்முறை நண்பர்களையும் அழைத்து வாருங்கள்.
நேரில் சந்திக்கலாம்.
நன்றி.
- GSTPS
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
No comments:
Post a Comment