நமது GSTPS நேரடிக்கூட்டம் நேற்று (26/10/2024) இந்துஸ்தான் சேம்பரில் சிறப்பாக நடைபெற்றது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் துவங்கியது. வந்திருந்த உறுப்பினர்களை துணைத்தலைவர் பாலாஜி அருணாச்சலம் அவர்கள் வரவேற்று கூட்டத்தைத் துவங்கிவைத்தார்.,
ஜி.எஸ்.டி துவங்கிய காலம் தொட்டு, இன்றைக்கு வரைக்கும் ஜி.எஸ்.டியில் புதுப்புது மாற்றங்களை செய்துகொண்டிருக்கிறார்கள். நாம் தொழிலை நேர்த்தியாக செய்யவேண்டுமென்றால், ஜி.எஸ்.டி, வருமான வரி குறித்த புதுப் புது அறிவிப்புகளை நாம் அறிந்துகொள்வது மட்டுமல்ல! தெளிவாக வும் கற்றுக்கொள்வது அவசியம்.
நேற்று கடந்த இரண்டு மாதங்களில் ஜி.எஸ்.டியில் வந்த மாற்றங்களை பிபிடி வழியாக நமது தலைவர் செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் சொல்லும் பொழுது, தான் இத்தனை முக்கிய மாற்றங்கள் செய்துவிட்டார்களா என தெரியவருகிறது. அவர் விளக்க துவங்கும் பொழுது, ”இந்த மாற்றங்களை எல்லாம் வாட்சப் குழுவில் உடனுக்குடன் பகிர்ந்து வந்திருக்கிறேன். ஆனால் எத்தனைப் பேர் படித்தீர்கள் என தெரியவில்லை” (தினமும் ஒரு மணி நேரம் படிக்கும் பழக்கத்தை உருவாக்கினால் மட்டுமே அது சாத்தியம். அதை பலரும் செய்ய தவறுகிறோம்.) இருப்பினும் உறுப்பினர்களுக்கு தெளிவுப்படுத்தவேண்டும் என இந்த கூட்டத்தை நடத்துகிறோம் என்றார்.
ஒவ்வொன்றையும் விளக்கும் பொழுது, கலந்துகொண்ட உறுப்பினர்கள் கேட்கும் சந்தேகங்கள், விளக்கங்கள் தான் எத்தனை எத்தனை! ஆனால் ஒரு சுற்று விவாதித்து முடிக்கும் பொழுது நமக்கு ஒரு தெளிவு கிடைப்பது தான் இதில் முக்கியமான அம்சம்.
உதாரணமாக : சொந்த இடம் வைத்து தொழில் செய்பவர்களுக்கு ஜி.எஸ்.டி வராது. ஆனால், வாடகைக்கு இருக்கும் அத்தனைப் பேருக்கும் அக்டோபர் 10 தேதியிலிருந்து வரி உண்டு என சொல்லிவிட்டார்கள். நாம் தரும் வாடகைக்கு, வாடகைக்கு விட்டவர் பதிவு செய்தவர் என்றால், அவர் ஜி.எஸ்.டியோடு வசூல் செய்துவிடுவார். அப்படி பதிவு செய்தவர்களாய் இருந்தால், பதிவு பெற்ற நாம் தலைகீழ் கட்டணம் அடிப்படையில் (RCM அடிப்படையில் நாம் செலுத்தவேண்டும். அவர்கள் 1ந் தேதியில் இருந்து மாற்றம் கொடுத்திருக்கலாம். இடையில் இப்பொழுது பத்தாம் தேதி என சொல்லியிருக்கிறார்கள். ஆகையால், ஒரு மாத வாடகையை சரியாக கணக்கிட்டு, RCM எடுக்கமுடியாது. 21 நாட்கள் கணக்கு வரும். இதனை கவனிக்காமல் செய்தால், நிறுவனம் சிறு இழப்பை எதிர்காலத்தில் சந்திக்க வேண்டிவந்துவிடும்.
எப்பொழுதும் நேரடிக் கூட்டத்தில், உறுப்பினர்கள் தொழில் வாழ்வில் எழும் சில சந்தேகங்களை கேட்டு, தெளிவு பெறுவது வழக்கம். அதனடிப்படையில், Dr. வில்லியப்பன் அவர்கள் ஒரு விசயத்தை முன்வைத்தார்.
சில நிறுவனங்கள் குறிப்பாக உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்கள், தங்களுக்கு கூலிக்காக வேலை (Job work) செய்து தரும் சிறு நிறுவனங்களை சமீப காலமாக… தங்களது எந்திரத்தை தங்கள் தொழிற்சாலையில் கொண்டு வந்து வைத்து, அந்த இயந்திரத்தை இயக்குவதற்கு அவர்களுடைய ஆளையே வைத்து வேலை செய்ய வைக்கிறார்கள். அதற்கான கட்டணம் என்பது பீஸ் ரேட்டாகவும் தீர்மானித்துக்கொள்கிறார்கள். ஜி.எஸ்.டி சட்டப்படி இதை எப்படி நிர்வகிப்பது? என்பது சவாலாக இருக்கிறது என்றார். பிறகு ஒரு சுற்று விவாதித்து, மீண்டும் இதுப் பற்றி பேசுவோம் என முடிவானது.
தலைவர் நமது குழுவில் நேற்று பகிர்ந்து கொண்ட பிபிடியை இன்று பகிர்ந்துள்ளார். கலந்து கொள்ள இயலாத உறுப்பினர்கள் அனைவரும் அதை சேமித்து கவனமாக படித்துக்கொள்ளவேண்டும். சந்தேகம் இருந்தால் குழுவில் கேளுங்கள். கற்க ”கசடற என்பது முக்கியம்.
விருதுநகரில் இருந்து வந்திருந்து நமது உறுப்பினர் அந்தோணி ராஜ் நேற்று கலந்துகொண்டு, சுய அறிமுகம் செய்துகொண்டார்.
உறுப்பினர்கள் திரு. முரளி, திரு. சுகுமாறன், திரு. அந்தோணி ராஜ் திரு. சிவசண்முகம் அவர்களுக்கு உறுப்பினருக்கான சான்றிதழும், ஐடி கார்டும் வழங்கப்பட்டது. இதுவரை புகைப்படம், மற்ற விவரங்கள் அனுப்பாதவர்கள் நிர்வாகிகளுக்கு அனுப்புங்கள். வாங்காதவர்கள் அடுத்த நேரடிக் கூட்டத்தில் வந்து பெற்றுகொள்ளுங்கள்.
இடைவேளையில் நமது தலைவரின் துணைவியாரின் தோழியின் மூலமாக சுவையான தேங்காய் கொழுக்கட்டையும், பீட்ரூட் இனிப்பு, காரமான சீவல் தந்து, தேநீரும் தந்தார்கள். சிறப்பு கொழுக்கட்டை பலருக்கும் பிடித்துப்போய்விட்டது. அடுத்தடுத்து இப்படி சுவையான இனிப்புகள் கொண்டுவரவேண்டும் என உறுப்பினர்கள் சார்பாக சந்திரசேகர் அவர்கள் சிறப்பாக பாராட்டுத் தெரிவித்தார்.
நவம்பர் 2 தேதி சனிக்கிழமை தீபாவளி விடுமுறை நாட்களை ஒட்டி வருகிறது. அன்று ஜூம் கூட்டம் நடத்தலாமா? என உறுப்பினர்களிடம் நிர்வாகிகள் கேட்டதற்கு, வெளியூரில் இருப்போம். விடுமுறையில் இருப்போம் எனவும் சிலர் வேண்டாம் என தெரிவித்தார்கள். ஆகையால், 9 ந் தேதி அவசியம் நடத்துங்கள் எனவும் கேட்டுகொண்டனர்.
பொருளாளர் செல்வராஜ் அவர்கள் வந்திருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
- GSTPS
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
No comments:
Post a Comment