நமது GSTPS நேரடிக்கூட்டம் நேற்று (23/11/2024) இந்துஸ்தான் சேம்பரில் சிறப்பாக நடைபெற்றது. திரளாக நமது உறுப்பினர்களும் கலந்துகொண்டார்கள்.
கூட்டம் துவங்கியது. முதல் உரையாக NRI – TDS குறித்து பிபிடி வழியாக விரிவாகவும், நடைமுறை அனுபவங்களுடனும் சிறப்பாக விளக்கினார் CA சந்திரமெளலி அவர்கள். உறுப்பினர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கும் பதிலளித்தார். இப்பொழுது மட்டுமல்ல இது சம்பந்தமாக எப்பொழுதும் சந்தேகம் கேட்டாலும் பதிலளிக்க தயாராய் இருப்பதாய் தெரிவித்தார். அவர் எடுக்கவேண்டிய இரண்டாவது தலைப்புக்கு ஒரு மணி நேரம் தேவைப்படுவதால், அடுத்து அதற்கென ஒரு கூட்டத்தில் விளக்குவதாக கூறினார்.
இடைவேளையில் சுவையான போண்டாவும், பஜ்ஜியும், ஒரு இனிப்பு கேக்கும் சூடான காபியும் தந்தார்கள். பொதுவாக நமது உறுப்பினர்கள் தங்கள் வீட்டு மகிழ்ச்சியான நிகழ்வுகளை இனிப்புகளோடு நம்மோடு பகிர்ந்துகொள்ளும் நல்ல வழக்கம் இருக்கிறது. அதனடிப்படையில் ஒருவர் தன்னுடைய திருமணநாளை ஒட்டி, இனிப்பை பகிர்ந்துகொண்டார். (பெயரை குறிப்பிடவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.) அவருக்கு நம் சார்பாக வாழ்த்துகளை பகிர்ந்துகொள்வோம்.
ஜி.எஸ்.டி துவங்கிய காலம் தொட்டு, இன்றைக்கு வரைக்கும் ஜி.எஸ்.டியில் புதுப்புது மாற்றங்களை செய்துகொண்டிருக்கிறார்கள். நாம் தொழிலை நேர்த்தியாக செய்யவேண்டுமென்றால், ஜி.எஸ்.டி, வருமான வரி குறித்த புதுப் புது அறிவிப்புகளை நாம் அறிந்துகொள்வது மட்டுமல்ல! தெளிவாக கற்றுக்கொள்வது அவசியம்.
Rent – RCM குறித்தும் கேள்விகள் வந்தன. இந்த மாதம் நமது உறுப்பினர்களுக்கு நிறைய வேலையையும், கேள்விகளையும், சந்தேகங்களையும் உருவாக்கியுள்ளது. Rent – RCM கொண்டு வந்ததற்கான காரணம் என்பது கூட விவாதிக்கப்பட்டது. பதிலும் அளிக்கப்பட்டது. ”ஒவ்வொரு உறுப்பினரும் தங்களுக்கு எழும் சந்தேகங்களையும் நமது வாட்சப் குழுவில் பகிர்ந்துகொள்ளுங்கள்.” அப்படி கேள்விகள் கேட்பதன் மூலம், அவற்றை எல்லாம் பதிலளிக்க ஒரு கூட்டம் ஏற்பாடு செய்கிறோம் என தெரிவித்தார்.
எப்பொழுதும் நேரடிக் கூட்டத்தில், உறுப்பினர்கள் தொழில் வாழ்வில் எழும் சில சந்தேகங்களை கேட்டு, தெளிவு பெறுவது வழக்கம். அதனடிப்படையில், Dr. வில்லியப்பன் அவர்களும், சாதிக்பாட்சா அவர்களும் மற்றவர்களும் எழுப்பினார்கள். அதற்கும் பலரும் பதிலளித்தார்கள்.
நமது சொசைட்டியில் சமீபத்தில் இணைந்த இரண்டு புதிய உறுப்பினர்கள் திரு. அண்ணாமலை, திரு. முருகன், இருவரும் கலந்துகொண்டு, சுய அறிமுகம் செய்துகொண்டார்கள்.
வளசரவாக்கத்தில் வரும் திரு. முகமது அவர்களுக்கு உறுப்பினருக்கான சான்றிதழும், ஐடி கார்டும், அழகான குடையும் வழங்கப்பட்டது.
நமது இணைய வழிக்கூட்டங்களில் கலந்துகொண்டவர்களில் பிபிடி கேட்கிறவர்கள், கூட்டச் செய்திகளைப் பகிர்ந்துகொள்ள கோருபவர்கள் என 120 பேருக்கு கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக நமது கூட்ட செய்திகளைப் பகிர்ந்து வருகிறோம். நேரடிக் கூட்டம் உறுப்பினர்களுக்கு மட்டும் என்றாலும், உறுப்பினராக ஆர்வம் உள்ளவர்களும் கலந்துகொள்ளலாம், உறுப்பினர்கள் தங்கள் தொழில்முறை நண்பர்களையும் அழைத்து வாருங்கள் என தெரிவித்த அடிப்படையில் புதிதாக இருவர் கலந்துகொண்டார்கள். விரைவில் உறுப்பினர்களாகிறோம் எனவும் தெரிவித்தார்கள்.
பொருளாளர் செல்வராஜ் அவர்கள் பேசிய, கலந்துகொண்ட அத்தனை பேருக்கும் வந்திருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். 60களில் கலைவாணர் என்.எஸ்.கே சம்பளம் குறித்தும், வாழ்க்கைப் பாடுகள் குறித்தும் ஒரு பாடல் பாடியிருப்பார். 20 நாளுக்கு பிறகு திண்டாட்டம் என்பார். ஜி.எஸ்.டி கன்சல்டண்டுகளுக்கு அந்த பாடல் பொருந்துகிறது. 3பி தாக்கல் செய்யும் 20 தேதி வரை திண்டாட்டம் தான் என சுவையாக சொல்லி சென்றார்.
நாம் கூட்டம் நடத்தும் அரங்கம் 2 மணி துவங்கி 5.30 மணி வரை தான் அனுமதி. நிர்வாகிகள் கூட்டம் 2 மணி என அறிவித்தாலும், சிலர் வந்துவிடுகிறார்கள். பலர் 2.30 2.45 என வந்து சேருவதால், கூட்டம் துவங்க தாமதமாகிவிடுகிறது. ஆனால் உறுப்பினர்கள் நிறைய விவாதிக்கவேண்டும் என ஆவலோடு வருகிறார்கள். உறுப்பினர் சாதிக்பாட்சா (60 +60) 120 கிமீ பயணம் செய்து வருகிறார். அதனால், 6 மணி வரை கூட்டம் நடத்துகிறோம். தலைவருக்கு அந்த அரங்கத்தை நடத்துகிற நிறுவனம் நீண்ட கால பழக்கம் என்பதால் பொறுத்துப்போகிறார்கள். ஆகையால் 2 மணி கூட்டத்திற்கு 2 மணிக்கே வந்துவிடுவது நல்லது. அப்பொழுது தான் நமக்கு எல்லாவற்றையும் விவாதிப்பதற்கு போதுமான நேரம் கிடைக்கும்.
அதே போல உறுப்பினர்கள் எழும் சந்தேகங்களை குழுவில் கேளுங்கள். தட்டச்சு செய்ய முடியவில்லை என்றால், கேள்வியை ஆடியோவாக பதிவு செய்யுங்கள். நிர்வாகிகளும், அனுபவம் உள்ள உறுப்பினர்களும் பதிலளிப்பார்கள்.
- GSTPS
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
No comments:
Post a Comment