Saturday, November 16, 2024

GSTPS : நமது சொசைட்டிக்கான தளத்தில் வெற்றிகரமாக 150வது பதிவைத் தொட்டிருக்கிறோம்!


கடந்த ஆண்டு 2023 ஜூனில் நமது சொசைட்டிக்கான தளத்தைத் துவங்கினோம்.

 

நமது கூட்டங்கள் குறித்த அறிவிப்புகள், நமது தளங்களில் பேச்சாளர்கள் பயன்படுத்தும் பிபிடிகள்,  நமது மின்னிதழ்கள்,  நமது கூட்டங்கள் குறித்த புகைப்படங்களுடன் அனுபவ பகிர்வு, நமது GSTPS தலைவர் செந்தமிழ்ச்செல்வன்  வணிக இதழ்களில் ஜி.எஸ்.டி குறித்து எழுதும் கட்டுரைகள் என தலைப்பு வாரியாக குறிப்பிட்டு பதிந்து வருகிறோம். இப்படி பதியும் பதிவுகளின் எண்ணிக்கை தான் 150 ஐ தொட்டிருக்கிறோம்.

 

நமது உறுப்பினர்களும், நமது துறை சார்ந்தவர்களும் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள்.   கடந்த ஒன்றரை வருடத்தில்  நமது தளத்திற்கு 11452 பார்வையாளர்கள் வருகை தந்திருக்கிறார்கள்.  சராசரியாக தினம் 20 பேர் என பார்வையிடுகிறார்கள் என புரிந்துகொள்ளலாம்.

 

நமது உறுப்பினர்களுக்கு தொழில்முறையில் என்ன சந்தேகம் என்றாலும், தளத்தைப் பார்த்தால், தெளிவு தரும் என்ற இலக்கை நோக்கி தான் நமது தளத்தைப் பரமாரித்து வருகிறோம்.

 

உறுப்பினர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.  தொழில்முறை நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.

 

நன்றி.

 

-    GSTPS


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety

No comments:

Post a Comment