2023 ஒரு
வசந்த காலத்தில் நமது தளத்தை உற்சாகமாக துவங்கினோம். சராசரியாக வாரம் மூன்று அளவில், மூன்று வருடங்களில்
500 வது பதிவை நெருங்கியுள்ளோம்.
நமது கூட்ட
அறிவிப்புகள், பேச்சாளர்கள் பகிர்ந்து கொள்ளும் பிபிடிகள், நமது சொசைட்டியின் செயல்பாடுகளின்
தடங்களை பதிவு செய்யும் தளமாக, நல்ல நினைவுகளை பாதுகாக்கும் தளமாக இருக்கிறது.
சிரமமில்லாமல்
தலைப்பு வாரியாக எளிதாக தேடமுடியும். தமிழிலும்,
ஆங்கிலத்திலும் நாம் பராமரிக்கிறோம். வேறு மொழி வேண்டுமென்றாலும் நாம் மாற்றிக்கொள்ள
முடியும்.
தளம் நமது
செயல்பாடுகளை பலரிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறது. புதியவர்களை உறுப்பினர்களாக மாற்றித்
தந்திருக்கிறது.
இப்பொழுது
இந்தியா மட்டுமில்லாமல், பிற நாடுகளிலும் பார்க்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தி.
தளம் என்பது
பலரின் கூட்டு முயற்சி தான். சொசைட்டிக்கான தளம் ஆரம்பிக்கலாம் என சொன்ன பொழுது,
GSTPS தலைவர் திரு. செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் உற்சாகப்படுத்தினார். தளத்தில் நமது உறுப்பினர்களும் கட்டுரை எழுதியுள்ளார்கள்.
இப்பொழுதும்
நமது உறுப்பினர்கள் கட்டுரை எழுத தெரிந்தவர்கள் எழுதித் தாருங்கள். பகிரலாம்.
ஒத்துழைப்பு
தந்த அனைவருக்கும் நன்றி.
- இரா.
முனியசாமி,
வரி ஆலோசகர்,
உறுப்பினர்,
GSTPS

No comments:
Post a Comment