முன்பு பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் தாங்கள்
எப்பொழுது பி.எப். இ.எஸ்.ஐ. க்கு தகுதி பெறுகிறோமோ, அப்பொழுது பி.எப்., இ.எஸ்.ஐ.
பதிவு பெற்றால் போதும் என்கிற நிலை இருந்தது. ஆனால் நிறுவனங்கள் தங்கள் தகுதி
பெறுகிற பொழுது, எண் பெறுவதில் சுணக்கம் இருந்தது.
23 பிப்ரவரி 2020 – தேதியிலிருந்து யார் பிரைவேட் லிமிடெட் பதிவு செய்கிறார்களோ அவர்களுக்கு, ஒரு பேக்கேஜாகவே இ.எஸ்.ஐ., பி.எப். எண்களையும் தர துவங்கிவிட்டார்கள்.
நிறுவனத்தை
பதிவு செய்து தருபவர்களில் சிலர் இந்த செய்தியை நிறுவன பொறுப்பாளர்களிடம் முறையாக தெரிவிப்பது இல்லை.
இப்படி
பதிவு செய்த நிறுவனம் எப்பொழுது தகுதி பெறுகிறதோ, ஒரு நிறுவனத்தில் பத்து பேர் எப்பொழுது
வேலை செய்கிறார்களோ, அப்பொழுது இ.எஸ்.ஐ. பதிவு எண்ணுக்குரிய கடவுச்சொல் (Password)
பெற்று, பணியாளர்களை பதிவு செய்து மாதாந்திர ரிட்டன் தாக்கல் செய்ய
துவங்கிவிடவேண்டும்.
ஒருவேளை
பத்துக்கு குறைவாகவே பணியாளர்கள் இருக்கிறார்கள்.
எங்களுக்கு தேவை என நினைத்தால்,
தானாக முன்வந்து பதிவு செய்யும் திட்டத்தில் (Voluntary basis) இ.எஸ்.ஐ யை
செயல்படுத்தி (Activate) விட முடியும்.
முன்பு இந்த திட்டம் அமுலில் இல்லை. புதிய தொழிலாளர் நலச் சட்டம் அமுலுக்கு
வந்த பிறகு இந்த வசதியை இப்பொழுது கொண்டு வந்திருக்கிறார்கள் என்பது கவனிக்கதக்க
அம்சம்.
EPF க்கு
என்ன விதி என்றால், நிறுவனம் துவங்கி எந்த நாளில் 20 பணியாளர்கள் வேலை
செய்கிறார்களே… அன்றைய தேதியில் இருந்து, பி.எப். பை பதிவு செய்ய
துவங்கிவிடவேண்டும்.
ஒருவேளை
இருபதுக்கும் குறைவாக பணியாளர்கள் இருக்கிறார்கள் என்றால், நிறுவனம் தங்களுக்கு
தேவை என கருதினால், தானாக முன்வந்து செயல்படுத்திவிடலாம்.
ஒருவேளை
நிறுவனம் தகுதி பெற்றும் அதை இயக்காமல்
கடந்து சென்றால்…. உதாரணத்திற்கு இரண்டு ஆண்டுகள் கழித்து அதை
செயல்படுத்தினால், கடந்த இரண்டு
ஆண்டுகளுக்கு நாம் தொழிலாளர்களுக்காக செலுத்தியிருக்கவேண்டிய தொகையை மொத்தமாக
செலுத்தவேண்டிய கட்டாயம் வரும். மேலும்
வட்டி, அபராதம் எல்லாம் கூடுதலாக வந்து சேரும்.
கட்டுமான
நிறுவனம் என்றால், முதல் வேலை செய்ய துவங்கிவிடும் பொழுதே, அவர்கள் இ.எஸ்.ஐக்கு
தகுதி பெற்றுவிடுவார்கள். ஏனெனில் கட்டிட தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ, பி.எப்.
உண்டு.
ஆகையால்,
இதில் கவனமாக இருங்கள். இல்லையெனில் எதிர்காலத்தில் நிறுவனம் பெரிய
சிக்கலுக்குள்ளாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இரா. முனியசாமி,
ஜி.எஸ்.டி,
வருமானவரி,
இபிஎப்,
இ.எஸ்.ஐ,
எல்.ஐ.சி ஆலோசகர்,
GSTPS உறுப்பினர்,
9551291721

No comments:
Post a Comment