இப்பொழுது தான் துவங்கியது போல இருக்கிறது. அதற்குள் 100 பதிவுகளை தொட்டுவிட்டோம். கடந்த ஜூனில் நமது சொசைட்டியின் நான்காவது ஆண்டு விழாவை கோரல் ரிசார்ட்டில் நாம் உற்சாகமாக கொண்டாடி கொண்டிருந்த வேளையில், தளத்தை அறிமுகப்படுத்தி துவங்கி வைத்தோம்.
வாராந்திர கூட்டங்கள் குறித்த அறிவிப்பு, கூட்ட அனுபவங்களையும், பேச்சாளர்கள் தயாரித்து விளக்கும் பிபிடிகளையும், நமது சொசைட்டியின் தலைவர் செந்தமிழ்ச்செல்வன் பிற அமைப்புகளில் கலந்துகொண்டு பேசும் பொழுது, அதற்கான பிபிடிகளையும், கூட்டம் குறித்து யூடியூப்பில் பகிர்ந்த பிறகு அதற்கான சுட்டிகளையும் தளத்தில் பகிர்கிறோம்.
இப்படி மாதம் குறைந்தபட்சம் சராசரியாக எட்டு பதிவுகளை இடுகிறோம். ஜூன் 2023 துவங்கி, இந்த ஆண்டு மார்ச் 2024 வரை என 100 பதிவுகளை உற்சாகமாக பகிர்ந்திருக்கிறோம்.
நமது தொழில் வாடிக்கையாளர்கள், தொழில்முறை நண்பர்கள் ஏதேனும் ஒரு தலைப்பில் சந்தேகம் கேட்டால், சுருக்கமாக பதில் சொல்வதோடு, தளத்தில் அது தொடர்பான பதிவு இருந்தால், அவர்களுக்கு அந்தச் சுட்டியை அனுப்பி வைத்து படிக்க சொல்லலாம்.
இப்படி இந்தத் தளத்தை நமது உறுப்பினர்களும், பொது வெளியில் உள்ளவர்களும் தங்களது தொழில் தேவைக்கு அடிக்கடி பயன்படுத்தும் பொழுது தான் அதனுடைய உண்மையான வெற்றி இருக்கிறது. ஆகையால் இந்த தளத்தை தங்களுடைய தொழில்முறை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தொழிலில் சுய முனைப்புடன் இருப்பவர்கள் இப்படி ஒரு தளம் இருப்பது தெரிந்தால், ஆர்வத்துடன் தொடர்ந்து பயன்படுத்திக்கொள்வார்கள். நம்மோடு இணைந்து பயணிக்கவும் அவர்கள் நிச்சயம் விரும்புவார்கள்.
இந்த தளம் உங்களுக்கு எப்படி பயன்படுகிறது? இன்னும் ஆரோக்கியமாக என்னென்ன செய்யலாம் என ஆலோசனைகள் தந்தால் நல்லது. ஆவலுடன் காத்திருக்கிறோம்.
- *GSTPS*
https://gstprofessionalssociety.blogspot.com/