தொழிலாளிக்கான பிரத்யேகமான பி.எப் தளத்தின் முகவரி
https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/
இதற்கு
முந்தைய நான்கு அத்தியாயங்களை நமது GSTPS தளத்தில் கீழ்க்கண்ட முகவரியில் சென்று படிக்கலாம்.
https://gstprofessionalssociety.blogspot.com/2023/10/gstps-how-to-use-employee-pf-site.html
https://gstprofessionalssociety.blogspot.com/2023/11/epf-2.html
https://gstprofessionalssociety.blogspot.com/2023/12/epf-3.html
https://gstprofessionalssociety.blogspot.com/2024/01/epf-4.html
https://gstprofessionalssociety.blogspot.com/2024/02/epf-5.html
கடந்த
அத்தியாயத்தில் நாம் Claim form 10C வரை விரிவாக பார்த்தோம்.
Online Services
1. Claim form 31, 19, 10C & 10D
2. One member – One EPF account
(Transfer Request)
3. Track Claim Status
4. Download Annexure K
இந்த
அத்தியாயத்தில் Claim
Form 10D குறித்து விரிவாக பார்க்கலாம்.
10D
விண்ணப்பம் என்பது ஒரு தொழிலாளி தனது பணி ஓய்வு காலமான 58 வயதுக்கு பிறகு மாதாந்திர
ஓய்வு நிதி பெற விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பம்
இது.
மாதாந்திர ஓய்வு நிதி பெறுவதற்கான முதல் தகுதி, ஒரு தொழிலாளி ஒரு நிறுவனத்திலோ அல்லது சில நிறுவனங்களில் வேலை செய்தோ மொத்த பணிக்காலம் 9.5 ஆண்டுகளுக்கு அதிகமாக இருக்கவேண்டும்.
அதற்கு குறைவான பணிக்காலமாய் இருந்தால், ஓய்வு நிதிக்கு விண்ணப்பிக்க முடியாது. அதுநாள் வரைக்கும் எவ்வளவு நிதியை ஓய்வு நிதியில் செலுத்தியிருந்தோமோ, அதை விண்ணப்பித்து மொத்தமாக பெற்றுக்கொள்ளலாம். (அதற்கான விண்ணப்பம் 10C. முந்தைய அத்தியாயத்தை பாருங்கள்).
அடுத்து, விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கு முன்பாக, தொழிலாளிக்கான வாரிசு/வாரிசுகள் (Nominee) குறித்த விவரங்களை பதியவேண்டும். எதற்காக என்றால், ஒரு தொழிலாளி இறந்த பிறகு, அவர் வாரிசாக நியமித்த நபர்களுக்கு ஓய்வுநிதி கொடுப்பதற்காக இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
பி.எப்.
உறுப்பினருக்கான தளத்தில் நுழைந்து, Manage என்ற பகுதிக்குள் நுழைந்தால், E Nomination என்பது
தெரியும். அதை கிளிக் செய்தால், அடுத்து வரும் படத்தில் உள்ள விவரங்களைப் பூர்த்தி
செய்யவேண்டும்.
வாரிசாக நியமிப்பவரின் ஆதார் எண், பெயர், பிறந்த தேதி, முகவரி, என்ன உறவு முறை, அவருடைய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையும் இணைத்து சமர்ப்பிக்கவேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான தேவையான அம்சங்கள்.
1. தொழிலாளியின் ஆதார் இணைக்கப்பட்டிருக்கவேண்டும்.
அது நிறுவனத்தினரால், டிஜிட்டல் கீ கொண்டு அங்கீகரிக்கப்பட்டு இருக்கவேண்டும்.
(ஒரு தொழிலாளிக்கு ஆதார் இல்லையென்றால் என்ன செய்வது? ஆதார் இல்லாமல் இப்பொழுது யாரும் இருக்கமுடியாது. என முடிவெடுத்து, அப்படி இருந்தால், பி.எப் திட்டத்தில் இணைய முடியாத நிலையை கடந்த சில வருடங்களாக உருவாக்கிவிட்டது.)
2. தொழிலாளியின் வங்கி கணக்கு இணைக்கப்பட்டிருக்கவேண்டும். அதுவும் நிறுவனத்தினரால், டிஜிட்டல் கீ கொண்டு அங்கீகரிக்கப்பட்டு இருக்கவேண்டும்.
(அப்பா/கணவர்/மனைவி என இணைப்பு (Joint Account) கணக்காக நிச்சயம் இருக்க கூடாது. தொழிலாளிக்கு என தனியாக இருக்கவேண்டும். ஆதாரில் உள்ள பெயர், முதல் எழுத்து எல்லாம் வங்கி கணக்கோடு சரியாக ஒத்துப்போகவேண்டும் என்பது முன்நிபந்தனை. அப்படி ஏதாவது வித்தியாசம் இருந்தால் அதனை உரிய முறையில் விண்ணப்பிடித்து சரி செய்துகொள்ளவேண்டும்.
3. நிறுவனத்தில் இருந்து விலகிய தேதியை
குறிப்பிட்டு இருக்கவேண்டும். இதை நிறுவனமும்
செய்யலாம். தொழிலாளியும் செய்யலாம். தொழிலாளியே
செய்யும் பொழுது சரியான தேதியை குறிப்பிடவேண்டும். தவறாக குறிப்பிடும் பட்சத்தில் அதை
சரி செய்வதற்காக அலைய வேண்டியிருக்கும்.
4. ஒரு தொழிலாளி ஒரு நிறுவனத்தில் வேலை
செய்தால் எளிதாக முடிந்துவிடும். ஆனால் அவரே இரண்டு, மூன்று நிறுவனங்களில் வேலை செய்தவராய்
இருந்தால், கடைசியாய் வேலை செய்த கணக்கிற்கு
முந்தைய கணக்குகளை முறையாக (Transfer) விண்ணப்பித்து ஒரு கணக்காக மாற்றவேண்டும் என்பது
மிக அவசியம்.
5. தொழிலாளியின் பான் கணக்கு இணைக்கப்பட்டிருக்கவேண்டும். அதுவும் நிறுவனத்தினரால், டிஜிட்டல் கீ கொண்டு அங்கீகரிக்கப்பட்டு இருக்கவேண்டும்.
மேற்கண்ட
விவரங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில், தொழிலாளி
ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தை
திறந்த பிறகு, அதில் வங்கி விவரத்தை சரி செய்வதற்கு ஒரு ஏற்பாட்டை செய்திருக்கிறார்கள். அதை நிரப்பவேண்டும்.
இறுதியில் தொழிலாளியினுடைய ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வரும் (One time Password). அதை இட்டு நிரப்பும் பொழுது, விண்ணப்பம் பூர்த்தியடையும்.
மேற்சொன்ன எல்லா அம்சங்களும் சரியாக பொருந்தும் பட்சத்தில், விண்ணப்பம் ஏற்கப்படும். ஏதேனும் குறைபாடு இருந்தால், பி.எப் கேள்விகள் கேட்டு கடிதம் அனுப்பும். அதை சரி செய்யும் பட்சத்தில், விண்ணப்பம் ஏற்கப்பட்டு, நீங்கள் கொடுத்த வங்கிக் கணக்கிற்கு ஓய்வூதியம் வந்துவிடும்.
ஒரு மாதத்திற்குள் ஓய்வு நிதி வங்கிக்கு வந்து சேரவில்லை என்றால், கீழ்க்கண்ட பி.எப் தளத்தில் உங்கள் அடிப்படை விவரங்கள், உங்கள் கோரிக்கையை பதிவு செய்தோம் என்றால், ஒரு வாரத்திற்குள் என்ன குறைபாடு என்கிற பதில் வந்துவிடும். என்ன செய்யவேண்டும் என்பதையும் தெளிவாக கூறிவிடும். அதை சரி செய்யும் பட்சத்தில் ஓய்வு நிதி பெற்றுவிடலாம்.
https://epfigms.gov.in/grievance/grievancemaster
ஓய்வூதியம்
பெறுகிற தொழிலாளி உயிரோடு இருக்கிறாரா, அவர் தான் ஓய்வூதியம் தொடர்ந்து பெற்றுக்கொண்டிருக்கிறாரா என்பதை உறுதி செய்ய ஆண்டுக்கு
ஒருமுறை குறிப்பாக நவம்பர் 30க்குள் வாழ்வு சான்றிதழை (Life Certificate) தர கோருகிறது.
இதைப் பற்றி விரிவாக அடுத்த அத்தியாயத்தில்
பார்க்கலாம்.
இன்னும்
வளரும்.
இரா. முனியசாமி,
GSTPS உறுப்பினர்
9551291721
- GSTPS
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety
No comments:
Post a Comment