வணக்கம். கடந்த சனிக்கிழமை (02/03/2024) நாம் நடத்திய ஜூம் கூட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு 100 பங்கேற்பாளர்களுக்கு அனுமதி வாங்கியிருக்கிறோம். இந்தமுறை 100 பேரை தாண்டிவிட்டோம். நம் அனுபவத்தில் இது இரண்டாவது கூட்டம் என கூட்டத்திலேயே குறிப்பிட்டார்கள்.
இந்தமுறை தலைப்பு ஈர்த்ததா? திரு. பூரண செல்வகுமார் அவர்களின் உரை ஈர்த்தாரா? தெரியவில்லை. இரண்டும் ஈர்த்திருக்கிறது.
முன்பெல்லாம் ஸ்டார் படங்களை துவக்க நாளில் சீட்டே இல்லையென்றாலும், தரையில் உட்கார்ந்து வழக்கம் உண்டு. சிலர் நின்று கொண்டு பார்ப்பார்கள் அது போல, ஜூம் கூட்டத்தில் காத்திருந்து, யாராவது ஒருவர், இருவர் வெளியே வந்தால், உடனே மற்றவர்கள் உள்ளே வந்தார்கள்.
நமது GSTPS உறுப்பினர்களுக்கு இடம் கிடைக்காமல் போய்விடக்கூடாது என்று தான் முன்னெச்சரிக்கையாக குழுவில் தெரிவித்தோம். ஆனால், அதையும் கவனிக்காமல் தாமதமாக வந்து இடம் கிடைக்காமல் போய்விட்டது.
மதுரையை சேர்ந்த திரு. பூரண செல்வகுமார் இந்த முறை “GST Common Reversal” குறித்து மிகச் சரளமாக, தெளிவுடன், விரிவாக பேசினார். இந்த வேகத்தை இதற்கு முன் சிலரிடம் பார்த்திருக்கிறோம். அதில் ஒருவர் திரு. சம்சுதீன் அவர்கள். கொடுத்த தலைப்பு என்று மட்டும் பேசாமல் கூடுதலாக சில அம்சங்களையும் இணைத்து பேசினார்,. வேறு சில நடைமுறை சிக்கல்கள் குறித்து கேட்டதற்கும் தயக்கமில்லாமல் பதிலளித்தார்.
கூட்டம் சிறப்பாக
நிறைவேறியது. பேச்சாளர் கொடுத்த பிபிடிகளை இங்கு பகிர்ந்துகொள்கிறோம். தேவைப்படுகிறவர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
நன்றி.
- GSTPS
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety
No comments:
Post a Comment