Friday, March 29, 2024

GSTPS : "How to handle GST Notices and how to reply GST Notices" - C. Thirunavukkarasu, Member GSTPS


கடந்த சனிக்கிழமையன்று 23/03/2024 GSTPS சார்பாக உறுப்பினர்களுக்கான நேரடிக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.



மழை போல வந்து குவியும் ஜி.எஸ்.டி நோட்டிஸ்களை எப்படி எதிர்கொண்டோம் என்பதை நமது உறுப்பினர் திருநாவுக்கரசு அவர்கள் தயாராக இருந்தார்.

 

தலைவர் அவரைப் பற்றி அறிமுகப்படுத்தும் பொழுது நாம் சொசைட்டி துவங்கிய பொழுது முதலில் இணைந்த உறுப்பினர் இவர்புகழ்பெற்ற நிறுவனமான XXXX  இந்திய அளவில் ஜி.எஸ்.டி. விசயங்களை கவனித்து வருகிறார்அவருடைய அனுபவத்தை நம் உறுப்பினர்களிடம் பகிரலாமே என கடந்த மாதம் கேட்கும் பொழுது, கொஞ்சம் கூட தயக்கம் இல்லாமல் பேச ஏற்றுக்கொண்டார் என தெரிவித்தார்.

 

திருநாவுக்கரவு அவர்கள் தன்னுடைய உரையை துவங்கும் பொழுது, “நமது சொசைட்டியில் இணையும் பொழுது, கொஞ்சம் மங்கலாக தான் இருந்தது. ஜி.எஸ்.டி குறித்தும், வருமான வரி குறித்தும் பல்வேறு அம்சங்கள், வழக்குகள், தீர்ப்புகள், அப்டேட்கள் எல்லாவற்றையும் தவறாமல் படிக்கும் பொழுது, விவாதிக்கும் பொழுது நிறைய கற்றுக்கொண்டேன்எங்களது நிறுவனத்துக்கு ஒரு புகழ்பெற்ற நிறுவனம் தான் சட்ட ரீதியான விசயங்களை எங்களுக்கு வழிகாட்டுகிறது. அவர்கள் சில விசயங்கள் சொல்லும் பொழுதுஇதில் இப்படி ஒரு பிரச்சனை வருமே சார் என சில சமயங்களில் நான் சொல்லும் பொழுது, ஆச்சர்யப்படுவார்கள்அதற்கு பிறகு ஆர்வத்துடன் நம்மிடம் கலந்துபேசவும் ஆரம்பித்தார்கள்.” என  பேசத் துவங்கினார்.

 

XXXXX  நிறுவனம் என்னென்ன தொழில்கள் செய்கிறது? எவ்வளவு விற்பனை? என்னென்ன அம்சங்களை ஜி.எஸ்.டியில் எதிர்கொள்கிறார்கள்? நிர்வாக ரீதியில் எப்படி இயங்குகிறார்கள்? எப்படி ஊழியர்களை பயிற்றுவிக்கிறோம் என பறவைப் பார்வையில் மிகத் தெளிவாக பேசினார்.

 

ஜி.எஸ்.டி நோட்டிசுகள் என்னென்ன தலைப்புகளில் வருகின்றனஎப்படி புரிந்துகொள்கிறோம்ஜார்கண்டில், உபியில் இந்தியில்  நோட்டிசை தருகிறார்கள்ஒவ்வொரு வார்த்தையும் முக்கியம் என்ற அடிப்படையில் இந்தி பிரச்சார சபாவில் கொடுத்து மொழிபெயர்க்கிறோம்ஒரு பக்கத்திற்கு ரூ. 1500 வாங்குகிறார்கள் என்ற பொழுது ஆச்சர்யமாய் இருந்தது.

 

ஜி.எஸ்.டி நோட்டிசுகள் எதையும் விட்டுவிடக்கூடாது என எங்கங்கோ அதிகாரிகளின் மின்னஞ்சல், மொபைல் எண் தரப்பட்டதோ, அங்கெல்லாம் முறையாக நிறுவனத்தின் மின்னஞ்சல்கள், மொபைல் எண்களை கொடுத்தோம்முடிந்த மட்டிலும் ஒரு நோட்டிசுக்கு உரிய நேரத்தில் பதில் அளிக்கிறோம்இல்லாத, தர முடியாத தவறான கமிட்மெண்ட்களை அதிகாரிகளிடம் நாம் கொடுப்பதில்லை.   

 

எப்படி பதிலளிக்கிறோம்? அதில் கற்றுக்கொண்ட பாடங்கள் என்னென்னஒவ்வொரு மாநில அதிகாரிகளையும் எப்படி அணுகுகிறோம்?  (.பியில் ஒரு சுவரில் கொஞ்சம் நேரம் சாய்ந்திருந்தால், அதற்கு பணம் கொடு!” என்கிற சொலவடை உண்டு) என ஒவ்வொரு அம்சத்தையும் விரிவாக விளக்கும் பொழுது ஆச்சர்யமாய் இருந்தது. கற்றுக்கொள்ளும் விதத்திலும் இருந்தது. அவ்வப்பொழுது எழுப்பிய கேள்விகளுக்கும் தெளிவாக பதிலளித்தார். அவர் தான் விளக்கிய பிபிடியை தளத்தில் பகிர்கிறோம்அதை வைத்துக்கொண்டு எவ்வளவு புரிந்துகொள்ளமுடியும் என தெரியவில்லை. கூட்டத்தில் கலந்துகொள்ளாதது பலருக்கும் இழப்பு தான்.

 

அறுபத்து மூன்று நாயன்மார்களில் அப்பர் என அழைக்கப்படுகிற திருநாவுக்கரசரும் ஒருவர்தன் நாவுக்கு அதாவது பேச்சில் அரசராக இருந்திருக்கிறார் என்பதால், திருநாவுக்கரசு என அழைத்திருக்கிறார்கள்அதே போல தனது பெயருக்கு ஏற்றார் போல இரண்டு மணி நேரம் எங்கும் தங்கு தடையின்றி சரளமாக விளக்கினார்துவக்கத்தில் என்ன டெம்போவில் பேசினாரோ, அதே டெம்போவில் இறுதிவரை அதே உற்சாகத்துடன் பேசினார்எப்படி இவ்வளவு நாள் எப்படி இவரைப் பயன்படுத்தாமல் போனோம் என்று தான் ஆச்சர்யம் இருந்தது.

 

நன்றி.

 

-           GSTPS
























No comments:

Post a Comment