அன்புள்ள GSTPS உறுப்பினர்களுக்கும், நண்பர்களுக்கும்,
“ஜி.எஸ்.டி (GST) பற்றி அதிகம் தெரிந்துகொள்ளுங்கள்”- புத்தகம் அறிமுக விழா
வணக்கம்.
தமிழ் தொழில் உலகம், வணிகமணி போன்ற வணிக இதழ்களில் நான் தொடர்ந்து ஜிஎஸ்டி பற்றிய கட்டுரைகள் எழுதி வருவதை தாங்கள் அனைவரும் அறிவீர்கள். இப்பொழுது அந்த கட்டுரைகளை தொகுத்து இன்றைய தேதி வரைக்குமான மாற்றங்களை அப்டேட் செய்து, 567 பக்கங்களில் ”ஜி.எஸ்.டி (GST) பற்றி அதிகம் தெரிந்துகொள்ளுங்கள்” என்ற தலைப்பில புத்தகமாக வெளியிடுகிறேன்.
இந்த புத்தகத்தை அச்சு செய்து தரும் வேலையை மணிமேகலை பிரசுரத்தார் பொறுப்பேற்றிருக்கிறார்கள். அவர்கள் 48வது ஆண்டு புத்தக கண்காட்சியை முன்னிட்டு, பல்வேறு துறை சார்ந்த 48 புத்தகங்களை வெளியிடுகிறார்கள், அதில் இந்த புத்தகமும் ஒன்று.
சென்னையில் வருகிற டிசம்பர் 27 துவங்கி, ஜனவரி 12 தேதி வரை நந்தனம் YMCA வில் புத்தக கண்காட்சி (Book Fair) நடக்க இருக்கிறது. அதில் வருகிற 05/01/2025 ந் தேதியன்று மணிமேகலை பிரசுரத்தார் அன்றைக்கு புத்தக சந்தைக்கென இருக்கும் மேடையில் புத்தகங்களை வெளியிடுகிறார்கள். மதியம் 1 மணி துவங்கி மாலை ஐந்து மணி வரை புத்தகம் வெளியீடு நிகழ்வை திட்டமிட்டுள்ளார்கள். இதில் முதல் பத்து புத்கங்களுக்குள் ”ஜி.எஸ்.டி(GST) பற்றி அதிகம் தெரிந்துகொள்ளுங்கள்” புத்தகத்தை வெளியிடுவதாக தெரிவித்துள்ளனர். ஆகையால், இந்த புத்தகத்தை 2.30 லிருந்து 3.30க்குள் வெளியீடுவார்கள். ஆகையால் வாய்ப்புள்ளவர்கள் கலந்துகொள்ளுங்கள்.
மற்றபடி நமது உறுப்பினர்களுக்காக இந்தப் புத்தகத்தை அறிமுகப்படுத்தும் விழா ஒன்றை நடத்துவதற்கு திட்டமிடும் பொழுது, நமது நேரடிக் கூட்டத்திலேயே வெளியிடலாம் என GSTPS நிர்வாகிகள் தெரிவித்ததன் அடிப்படையில், 11/01/2025 – மதியம் 3 மணியளவில் அன்று நாம் வழக்கமாக கூட்டம் நடத்தும் ”இந்துஸ்தான் சேம்பரில்” நேரடிக் கூட்டத்தோடு புத்தகம் குறித்த அறிமுகத்தை வைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அன்றைய நாளில் புத்தகத்தின் உருவாக்கத்தில் பங்களித்த கோவை பெருமாள் அவர்கள் புத்தகம் பற்றிய தனது கருத்துக்களை பகிர ஒப்புக்கொண்டுள்ளார். இன்னும் சிலரை அழைப்பதற்காக திட்டமிட்டுள்ளேன். அவர்களுடன் பேசி ஒப்புதல் பெற்ற பிறகு ஒரு அழைப்பிதழை விரைவில் வெளியிடுகிறேன்.
ஆகையால், நமது அனைத்து உறுப்பினர்களும் அன்றைய நிகழ்வில் கலந்துகொண்டால் மகிழ்வேன். இந்தப் புத்தகம் வரி ஆலோசகர்களுக்கு மட்டுமில்லாமல், வணிகர்களும் புரிந்துகொள்ளும் விதத்தில் எளிமையாக எழுதப்பட்டுள்ளது. ஆகையால் உங்கள் தொழில்முறை நண்பர்களுக்கும், சட்டம் குறித்து தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கும் வணிகர்களுக்கும் பரிந்துரையுங்கள்.
புத்தகத்தின் விலை ரூ. 600. அறிமுகப்படுத்தும் நிகழ்வில் உறுப்பினர்களுக்காக சலுகை விலையாக ரூ. 500 என தர முடிவு செய்யப்பட்டுள்ளது.
நன்றி.
சு. செந்தமிழ்ச்செல்வன்,
தொழிலாற்றுநர்
தலைவர், GSTPS
24/12/2024
No comments:
Post a Comment