நேற்று
நமது நேரடிக் கூட்டம் திரளான உறுப்பினர்களுடன் சிறப்பாக நிறைவேறியது. புத்தாண்டை
ஒட்டி டைரியும், மாத காலண்டர்களும் உறுப்பினர்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
தமிழ்த்தாய்
வாழ்த்துடன் இனிதே துவங்கியது. 55வது
ஜி.எஸ்.டி கவுன்சில் பரிந்துரைகளை
செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் பிபிடி வழியாக விளக்கினார். உரையை துவங்கும் பொழுதே இப்பொழுது
அறிவிக்கப்பட்டது எல்லாமே பரிந்துரைகள் தான். கடந்த காலங்களில் சில பரிந்துரைகள் நடைமுறைக்கு வரவேயில்லை. என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இடையிடையே
நமது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும்
பதிலளித்தார். உறுப்பினர்கள் தங்களுடைய அனுபவங்களையும்
இடையிடையே பகிர்ந்துகொண்டனர்.
இடைவேளையில்
ஒரு பேரீச்சம் பழம், இன்னும் கலவையான பொருட்களுடன் ஆரோக்கியமான லட்டும், ப்ரெட் பஜ்ஜியும்,
போண்டாவும், சுவையான காபியும் வழங்கப்பட்டது.
சந்திரசேகர் கருப்பட்டி பால் (அவர் காபி, டீ அருந்துவதில்லை. கவனம் கொள்ளுங்கள்.)
அடுத்தமுறை வழங்கும்படி வேண்டி விரும்பி கேட்டுக்கொண்டார். செயலரும் அவருடைய விருப்பத்தை நிறைவேற்றுவதாக ஏற்றுக்கொண்டார்.
புதிய உறுப்பினர்கள்,
முதல்முறை நேரடிக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் என்ற அடிப்படையில் வழக்கறிஞர் சக்கரவர்த்தி
அவர்கள், அறிவழகன் அவர்கள், தீபன் சக்கரவர்த்தி அவர்கள், கண்ணதாசன் அவர்கள் தங்களைப்
பற்றிய அறிமுகம் செய்துகொண்டனர். சொசைட்டியின்
மூலம் நிறைய அப்டேட்டுகளையும், தொழில் வாய்ப்புகளையும் பெற்றதாக தெரிவித்தனர்.
புத்தாண்டை ஒட்டி சொசைட்டியின் பரிசாக ஒரு அழகான டைரியும், ஒரு உறுப்பினருக்கு தலா இரண்டு காலண்டர்களும் தர இந்த ஆண்டும் முடிவு செய்துள்ளார்கள். முதல் டைரியை மூத்த தணிக்கையாளர் ஓம் பிரகாஷ் தலைவரிடமிருந்து பெற்றுக்கொண்டார். முதல் காலண்டரை வழக்கறிஞர் சக்கரவர்த்தி வெளியிட கருப்பையா அவர்கள் பெற்றுக்கொண்டார். கலந்துகொண்ட அத்தனை பேருக்கும் விநியோகிக்கப்பட்டன.
தலைவர் செந்தமிழ்ச்செல்வன்
அவர்கள் எழுதிய “ஜி.எஸ்.டி குறித்து அதிகம் தெரிந்துகொள்ளுங்கள்” புத்தகம் பற்றிய புதிய
தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். ஏற்கனவே தெரிவித்தது
போல, 05/012025 அன்று புத்தக திருவிழாவில் அச்சு செய்து தரும் மணிமேகலை பிரசுரத்தார்,
புத்தகத்தை வெளியிடுகிறார்கள். நமது GSTPS நேரடிக்கூட்டத்தில் 11/01/2025 அன்று புத்தகத்தை
அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதில் மா.பா. பாண்டியராஜன் அவர்கள், தணிக்கையாளர்
இராஜேந்திரகுமார் அவர்களும் (He is a Chartered Accountant in practice in india
for about 3 decades. He is elected
*member of institute of chartered accountants of india, New Delhi) கோவை பெருமாள் அவர்களும் , உறுப்பினர் முனியசாமி
அவர்களும் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.
Dr. வில்லியப்பன்
அவர்கள் கடந்த முறை ஒரு உறுப்பினர் கூலி வேலை
(Job work) சம்பந்தமாக நடைமுறையில் இருந்து வந்த சிக்கலை தீர்க்கும் வகையில் அதற்கு
ஒரு அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.
உறுப்பினர் விக்கி அவர்கள் மின்னிதழ்களில் அதிக உறுப்பினர்கள் பங்கேற்பதாக ஒரு ஆலோசனையை முன்வைத்தார்.
மின்னிதழில் வினாடி வினா பகுதியை ஆங்கிலத்தில் உறுப்பினர் நீலகண்டன் அவர்கள் வெளியிடுகிறார். தமிழிலும் வெளியிட்டால் இன்னும் பல உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என்ற ஆலோசனையை உறுப்பினர் சந்திரசேகர் அவர்கள் முன்வைத்தார்.
உறுப்பினர்
முனியசாமி, குழுக்களில் உறுப்பினர்கள் கேள்வி கேட்கும் பொழுது, அதற்கு கவனமாக பதிலளிக்க
ஒரு பொறுப்பாளரை நியமிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
சனிக்கிழமைகளில்
நடைபெறும் இணைய வழிக்கூட்டத்தை நமது யூடியூப் சானலில் அப்லோட் செய்வதில் உள்ள நடைமுறை
பிரச்ச்சனைகள் விவாதிக்கப்பட்டன. அது அவசியம் அதை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள்
எனவும் விவாதிக்கப்பட்டன.
உறுப்பினர்
ஜெயக்குமார் தன்னுடைய வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட ஒரு சிக்கலை சொல்லி, தலைவர் வழியாக
மதுரை மூத்த வரி ஆலோசகர் இராமச்சந்திரன் முருகேசன் வழியாக அந்த சிக்கல் தீர்க்கப்பட்டது.
அதற்கு நன்றி தெரிவித்தார். (அவர் சமீபத்தில்
உடல் நலமின்றி இறந்துபோனார். அவருக்கு குழுவில் அஞ்சலிகளை பகிர்ந்துகொண்டோம் என்பது
பலருக்கும் நினைவிருக்கும்.)
உரையாற்றிய
தலைவர் அவர்களுக்கும், திரளாக கலந்துகொண்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்
பொருளாளர் செல்வராஜ் அவர்கள்.
நேரடிக்கூட்டத்திற்கு
உறுப்பினர்கள் தங்களுக்கு தெரிந்த சக உறுப்பினர்களுக்கு நினைவுப்படுத்தி அழைத்தால்,
வந்துவிடுகிறார்கள். இன்று நிறைய பேர் கலந்துகொண்டதற்கு
அது தான் காரணம். மற்றவர்களும் அதை செய்யுங்கள் என கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
நன்றி.
- GSTPS
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
No comments:
Post a Comment