பயனுள்ள தலைப்புகளின் நமது நேரடிக் கூட்டம் இனிதே நடைபெற்றது!வரவேற்புரைக்கு பின் நமது துணைத்தலைவர் திரு பாலாஜி அருணாசலம் அவர்கள் ”வங்கி கணக்கு முடக்கம் சொத்துக்கள் முடக்கம் பற்றி ஒவ்வொரு பிரிவின் படி விளக்கமளித்தார்! எந்த காலங்களில் எப்படிபட்ட காரணங்களுக்காக, எந்த விதமான முடக்கங்கள் நடக்கும் என்பதை விளக்கமாக எடுத்துரைத்தார்! பின்பு இது போன்ற சூழ்நிலைகளிலிருந்து எப்படி விடுவித்து கொள்வது என்பதனையும் விளக்கினார்! வரி நிலுவை காலங்கடந்து நின்றால் கைது நடவடிக்கையும் உண்டு என்பதனையும் அதற்கான அளவுகோலையும் விவரித்தார்!
பின்பு நடைபெற்ற. உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் பதில் கூறினார்! இடையே தலைவர் திரு S.செந்தமிழ் செல்வன் தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்! திரு வில்லியப்பன் தன் அனுபவதையும் விளக்கினார்.
மாலை 4.30 க்கு இடை வேளையில் தேங்காய் Ball, இட்லிஸ்வீட் மற்றும் சூடான சமோசாவுடன் காபியுடன் வழங்கப்பட்டது!
இரண்டாம் நிகழ்வாக செயலாளர் திரு S.பாலாஜி அவர்கள் GST போர்ட்டலில் உள்ள Dashboard சேவைகள் பற்றி போர்ட்டலை திறந்து ஒரு பிராக்ட்டிக்கலாக விளக்கம் அளித்தார். இடையிடையே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்! அடிக்கடி நாம் போர்டலை பார்த்தாலும் பல தெரியாத தகவல்களை அறிய முடிந்தது.
போர்ட்டலில் ஒரு முக்கியமான சேவையாக வரி கட்டுபவர்கள் வரி நிலுவை தொகையை தவணை முறையில் கட்ட கமிஷனருக்கு கோரிக்கை வைக்கலாம் என்றும் வங்கி கணக்கு முடக்கத்தை இதன் மூலம் நிவர்த்தி செய்யலாம் எனவும் கூறினார்!
இறுதியாக. பொருளாளர் திரு S.செல்வராஜ் அவர்களின் நன்றி நவிலலுடன் கூட்டம் இனிதே முடிவடைந்தது!
- GSTPS
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
No comments:
Post a Comment