நமது தளம் துவங்கி விரைவில் இரண்டு வருடங்களை தொட இருக்கிறோம்.
தளத்தில்
நமது கூட்டங்கள் குறித்த தகவல்கள், பேச்சாளர்கள் தரும் பிபிடிகள், நமது மின்னிதழ்கள்,
நேரடிக் கூட்ட அனுபவம், புகைப்படங்கள், தலைவர் செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் எழுதும்
ஜி.எஸ்.டி கட்டுரைகள், பி.எப் கட்டுரைகள் என தொடர்ந்து பகிர்ந்து வருகிறோம்.
தளத்தில்
தேடுவதற்கு தலைப்பு வாரியாக பிரித்து பகிர்ந்திருக்கிறோம். பிற மொழிகளில் கூட மாற்றிக்
கூட படிக்கலாம். அதற்கான வசதி தளத்திலேயே இருக்கிறது.
நம்முடைய
பதிவுகளில் ஒரு பதிவு 400 பேர் வரை சென்றடைந்திருக்கிறது.
சராசரியாக கணக்கிட்டால் ஒரு நாளைக்கு சராசரியாக 20 பேர் வந்து படிக்கிறார்கள் என்பது
உற்சாகம் தரும் செய்தி.
நம்முடைய
உறுப்பினரோ, வரி ஆலோசகரோ தனக்கு ஏதாவது சந்தேகம் என்றால், நம்முடைய தளத்திற்கு தேடி
வந்தால், அவருக்கு பதிலும் கிடைக்குமென்றால்
… அது தான் பெரிய வெற்றி.
தொடர்ந்து
எல்லோருடைய ஒத்துழைப்பிலும், நமது தளம் தனது பாதையில் உற்சாகமாக முன்னேறி செல்லுகிறது.
வாழ்த்துகள்.
நன்றி.
- GSTPS
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
No comments:
Post a Comment