இன்றைய இணைய வழிக் (Zoom) கூட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. 65 பேர் வரை கலந்துகொண்டனர். தணிக்கையாளர் திரு. பால் தங்கம் குறித்த படிப்பு மற்றும் அறிமுகம் மிக நீண்டதாக இருந்தது. ஒரு ரேஞ்சாக பேசப்போகிறார் என பங்கேற்பாளர்கள் நினைக்கும் பொழுது, ஆனால், அத்தனை எளிமையாகவும், விரிவாகவும்... கேள்விகளுக்கும் அருமையாக பதிலும் அளித்தார்.
ஒரு நோட்டிஸ் வந்தால்… திரும்ப திரும்ப பலமுறை படியுங்கள்.
பதில் தரும் பொழுது எளிய ஆங்கிலத்தை பயன்படுத்துங்கள். நீண்ட வாக்கியங்களை பயன்படுத்தாதீர்கள்.
சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு என்ன புரியப்போகிறது என்ற அலட்சிய மனப்பான்மையுடன் பதிலை தயார் செய்யாதீர்கள். அணுகாதீர்கள். பின்னாடி, அதுவே நமக்கு பலவீனமாகிவிடும்.
தனிப்பட்ட விசாரணைக்கு அனுமதி கேளுங்கள். அதிகாரியே தரவேண்டும். அதற்கும் சட்டத்தில் இடம் இருக்கிறது.
எல்லா ஆதாரங்களையும், ஆவணங்களையும் முழுமையாக சமர்ப்பியுங்கள். லாரி வைத்து கொண்டு செல்லும் அளவிற்கு என்றால், பென் டிரைவில் கொடுங்கள்.
நோட்டிசுக்கு பதில் தரும் பொழுது, அலுவலரின் பதவியை குறிப்பிடுங்கள். பெயரை குறிப்பிடாதீர்கள். (சரி தான். அடிக்கடி அதிகாரிகள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள்.)
அதிகாரியுடன் பதிலை காண்பித்து, அவர் சரி என்ற பிறகு தளத்தில் தாக்கல் செய்யலாம் என தாமதப்படுத்தாதீர்கள். உரிய தேதிக்குள் தாக்கல் செய்யவில்லை சென்றால், நமக்கு தான் சிக்கல்.
எந்த ஆவணம் கொடுத்தாலும், எத்தனை அன்பாக, அணுசரணையாக பழகும் அதிகாரி என்றாலும், ஒப்புகை (acknowledgement) பெற்றுக்கொள்ளுங்கள்.
இன்னும் பல அம்சங்களை பட்டியலிட்டு அருமையாக விளக்கினார். இன்றைய கூட்டம் நிறைய கற்றுக்கொள்ளும் விதமாக இருந்தது.
நன்றி.
- GSTPS
குறிப்பு : கூட்டத்தைப் பதிவு செய்து எங்களது தளத்தில் வெளியிட்டுள்ளோம். பாருங்கள்.
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
No comments:
Post a Comment