வரி ஆலோசகர் வாழ்க்கையில் இரண்டு Deadline-கள் மட்டுமே இல்லை. ஒன்று அரசாங்கம் கொடுப்பது. மற்றொன்று வாடிக்கையாளர் உருவாக்குவது!
"சார்... இன்னைக்கு போட்டுடுங்க..."
"சார்... நாளைக்கு Notice Hearing..."
"சார்... Portal ஓபன் இருக்கு..."
"சார்... இந்த
ஒரு
தடவை
மட்டும்..."
இப்படி
ஓடிக்கொண்டே இருப்போம்.
ஆனால்
வேலை
முடிந்ததும்...
"சார்... Fee கொஞ்சம் பார்த்துக்கோங்க..."
அப்போதுதான் நம்முடைய இதயத்
துடிப்பு GST Portal Server-ஐ விட
அதிகமாக ஆரம்பிக்கும்!
நாம் செய்யும் வேலை Return Filing அல்ல... Risk Filing!
ஒரு
Return தாக்கல் செய்வதற்கு முன்...
- கணக்குகள்
சரியா?
- ITC சரியா?
- Section எது?
- Rule எது?
- Notification வந்திருக்கிறதா?
- Portal மாறியிருக்கிறதா?
- நாளைக்கு
Notice வந்தால் பதில் சொல்ல முடியுமா?
இவ்வளவு யோசித்து தான்
ஒரு
"Submit" பட்டனை
அழுத்துகிறோம்.
வாடிக்கையாளர் பார்ப்பது... "ஒரு Button தானே அழுத்தினீங்க!"
₹2,000
வேலையை ₹1,000-க்கு செய்தால்...
அந்த
நாள்
மட்டும் ₹1,000 குறையாது. உங்கள்
தொழிலின் மதிப்பே குறைய
ஆரம்பிக்கும்.
அடுத்த
வருடம்...
"கடந்த
தடவை
ஆயிரத்துக்குத்தானே செஞ்சீங்க!"
அதற்கு
அடுத்தவர்... "என் நண்பருக்கும் அதே
Rate-ல
செஞ்சிருக்கீங்களாம்!"
பிறகு...
நீங்கள் Rate List வைத்திருக்க மாட்டீர்கள். ஊரே
வைத்திருக்கும்!
ஒருமுறை குறைத்தால்... அது Offer அல்ல... Record!
வாடிக்கையாளரின் நினைவாற்றல் சில
விஷயங்களில் அசாதாரணம்.
Due Date மறந்துவிடுவார்.
Password மறந்துவிடுவார். OTP கூட
மறந்துவிடுவார்.
ஆனால்...
"கடந்த
வருடம்
₹500 குறைச்சீங்களே..." அதை மட்டும் பத்து
வருடம்
ஆனாலும் மறக்க
மாட்டார்!
"சார்... நீங்க நம்ம ஆளுதானே!"
இந்த
ஒரு
வரி...
வரி
ஆலோசகர்களின் வருமானத்தை சாப்பிடும் மிகப்பெரிய வசனம்.
"அண்ணே..." "மாமா..." "மச்சான்..." "நம்ம ஊரு..." "நம்ம சங்கம்..."
"நம்ம
Friend..."
எல்லாமே ஆரம்பத்தில் இனிமையாக இருக்கும்.
வேலை
முடிந்த பிறகு...
Fee பற்றி பேசினால்... "அவ்வளவு Formal ஆகிடாதீங்க..." என்று சொல்லிவிடுவார்கள்.
அன்பு
வேறு.
தொழில்
வேறு.
இரண்டையும் கலக்க
ஆரம்பித்தால்... இறுதியில் கணக்கு
சரியாக
வராது.
Price
மட்டும் பேசும் வாடிக்கையாளர்கள்...
ஒரு
நல்ல
வாடிக்கையாளர் என்ன
கேட்பார்?
"என்ன Procedure?"
"என்ன Risk?"
"என்ன Documents?"
"எவ்வளவு Time ஆகும்?"
ஆனால்
சிலர்...
"Fee எவ்வளவு?"
"குறைவா ஆகுமா?"
"அவங்க இதுக்கு பாதி
தான்
வாங்குறாங்க!"
இந்த
உரையாடலில்... Quality என்ற வார்த்தையே வராது.
அப்படிப்பட்டவர்கள்தான்...
Payment தரும்போதும்... "அடுத்த வாரம்..." "இந்த மாதம்..."
"பாக்கலாம்..." என்று தொடர்ச்சியாக சொல்லக்கூடியவர்கள்.
Notice
Reply என்பது Return Filing-க்கு Bonus அல்ல!
GST Notice.
Income Tax Notice.
Assessment.
Scrutiny.
Appeal.
இவை
எல்லாம்...
"Package-ல Free!" - என்று யாரோ எழுதிவைத்தது போல
சிலர்
நினைப்பார்கள்.
ஒரு
Notice-க்கு
பதில்
எழுதுவது... ஒரு
Form நிரப்புவது அல்ல.
சட்டம்
படிப்பது. ஆதாரம்
சேகரிப்பது. விளக்கம் அமைப்பது. பொறுப்பேற்பது. இவை
அனைத்திற்கும் தனி
மதிப்பு உண்டு.
அதற்கும் தனி
கட்டணம் இருக்க
வேண்டும்.
"முதல்ல
வேலை முடிச்சுடுங்க... Fee அப்புறம்..."
இந்த
வசனத்தை கேட்ட
பிறகு...
பல
Fee-கள்
வரலாற்று ஆய்வுப் பொருளாகிவிட்டன! வேலை
முடிந்தது.
Acknowledgement அனுப்பிவிட்டோம்.
Certificate அனுப்பிவிட்டோம்.
PDF அனுப்பிவிட்டோம்.
அதற்குப் பிறகு...
"சார்... UPI Limit ஆயிடுச்சு..." "சார்... Accountant இல்ல..." "சார்... Monday கண்டிப்பா..." அந்த Monday எந்த Calendar-ல இருக்கிறது என்று
இன்னும் பலருக்கும் தெரியவில்லை!
Advance
வாங்குவது அவமானமல்ல!
மருத்துவர் Advance வாங்குகிறார். ழக்கறிஞர் Advance வாங்குகிறார். Architect வாங்குகிறார்.
அப்படியிருக்க... வரி
ஆலோசகர் மட்டும்... "வேலை முடிந்த பிறகு
பார்த்துக்கலாம்..." என்று ஏன்
சொல்ல
வேண்டும்?
Advance என்பது... அநம்பிக்கை அல்ல.
இரு
தரப்புக்கும் தெளிவான தொழில்முறை ஒப்பந்தம்.
நீங்கள் விற்பது நேரமல்ல... நிம்மதி!
வாடிக்கையாளர் Fee கொடுப்பது... ஒரு
Return-க்காக
அல்ல.
ஒரு
Notice வராமல்
இருக்க.
Penalty தவிர்க்க. Interest குறைய. சட்டப்படி பாதுகாப்பாக இருக்க.
இரவு
நிம்மதியாக தூங்க.
அதற்காகத்தான்.
ஒரு உண்மை...
ஒரு
தவறான
Return... ஒரு
நிறுவனத்திற்கு இலட்சக்கணக்கான இழப்பை
தரலாம்.
ஒரு
சரியான
ஆலோசனை...
அதே
நிறுவனத்திற்கு இலட்சக்கணக்கான சேமிப்பை தரலாம்.
அப்படியிருக்க... அந்த
ஆலோசனைக்கு ஆயிரம்
ரூபாய்
கூட
அதிகம்
என்று
நினைப்பது... நம்
தொழிலின் மதிப்பை புரிந்து கொள்ளாத மனநிலை
மட்டுமே.
இன்னும் ஒரு விஷயம்...
சில
நேரங்களில்... வாடிக்கையாளரைவிட... *நாம்தான் Fee குறைக்க அவசரப்படுகிறோம்.* "போயிடுவாரோ..." "வேலை வேற யாருக்காவது கொடுத்துடுவாரோ..." என்று பயப்படுகிறோம்.
ஆனால்
ஒரு
விஷயம்
நினைவில் இருக்கட்டும். கட்டணத்திற்காக மட்டுமே உங்களைத் தேர்வு
செய்பவர்... அடுத்தவர் இன்னும் குறைவாக சொன்னால் அங்கேயும் போய்விடுவார்.
ஆனால்...
உங்கள்
அறிவை,
நேர்மையை, பொறுப்பை மதிப்பவர்... உங்களை
விட்டு
எளிதில் செல்ல
மாட்டார்.
கடைசியாக...
நல்ல
வரி
ஆலோசகர் என்பவர்... குறைந்த Fee வாங்குபவர் அல்ல.
நம்பிக்கையுடன் Fee வாங்கத் தெரிந்தவர்.
கட்டணம் கேட்பது பேராசை
அல்ல. அது தொழிலுக்கான மரியாதை. முதலில் அந்த
மரியாதையை நாமே
நமக்குக் கொடுக்க வேண்டும்.
அப்போதுதான்... மற்றவர்களும் கொடுப்பார்கள்.
- இரா. முனியசாமி,
ஜி.எஸ்.டி,
வருமானவரி,
இபிஎப்,
இ.எஸ்.ஐ,
எல்.ஐ.சி ஆலோசகர்,
GSTPS உறுப்பினர்,
9551291721

No comments:
Post a Comment