Tuesday, August 25, 2026

54வது நேரடிக் கூட்டம் – அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்துகொண்ட ஒரு சிறப்பான மாலை

 


54வது நேரடிக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.  தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய கூட்டத்தில், திரு. பாலாஜி அவர்கள் அறிமுக உரை வழங்கினார்.


தலைவர் அவர்கள், தொடர்ந்து நடைபெற்று வரும் இணையவழிக் கூட்டங்கள் மற்றும் நேரடிக் கூட்டங்களின் நோக்கம் குறித்து பேசினார். உறுப்பினர்களின் தொழில் அறிவையும் அனுபவத்தையும் வளர்ப்பதற்காக தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், உறுப்பினர்களும் தங்களுக்குத் தெரிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.



அடுத்த மாதம் வருமான வரித்தாக்கல் பணிகள் அதிகமாக இருந்தாலும், உறுப்பினர்களின் விருப்பத்தின் அடிப்படையில் அடுத்த மாதமும் நேரடிக் கூட்டம் நடைபெறும் என்று அறிவித்தார்.


“நாம் எல்லோரும் சேர்ந்து தேர் இழுப்போம்; மகிழ்ச்சியாக தேர் இழுப்போம்” என்ற அவரது அழைப்பு கூட்டத்தின் நோக்கத்தையே அழகாகச் சொன்னது.


அதனைத் தொடர்ந்து, செயலர் திரு. செண்பகம் அவர்கள் ITR 3, ITR 4 குறித்து தளத்தின் வழியாக செய்முறையோடு விரிவான வகுப்பை எடுத்தார். திரு. பாலாஜி அவர்களும் இணைந்து பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.


கேள்வி – பதில் – கலந்துரையாடல் என்று சென்ற அந்த வகுப்பு, நேரடியாக ஒன்றாக அமர்ந்து கற்றுக்கொள்வதன் சிறப்பை உணர்த்தியது.



சொசைட்டியின் ஆண்டு பரிசான சின்ன சுவர் கடிகாரங்களும் சில உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டன. புதிய உறுப்பினர் திரு. இராம்குமார் அவர்களுக்கான கடிகாரத்தை நான் பெற்றுக்கொண்டேன்.


புதிய உறுப்பினரான நங்கநல்லூர் திரு. சிவக்குமார் அவர்கள் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். திரு. அமிர்தா செந்தில் அவர்களையும் இந்தக் கூட்டத்தில் முதன்முறையாக சந்தித்தேன்.


நன்றியுரையை திரு. செல்வராஜ் அவர்கள் வழங்கினார்.


இந்தக் கூட்டம் ஒரு விஷயத்தை மீண்டும் நினைவூட்டியது.



தொழில் சார்ந்த அறிவை வளர்த்துக்கொள்ளவும், அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும், ஒருவருக்கொருவர் துணையாக இருக்கவும் ஒரு நல்ல தளம் இருந்தால், அதைப் பயன்படுத்திக்கொள்வது நம்முடைய வளர்ச்சிக்கே உதவும்.


இத்தகைய பயனுள்ள கூட்டங்களில் தொடர்ந்து கலந்துகொண்டு வருபவர்களுடன், இன்னும் இணையாத நண்பர்களும் இணைந்துகொண்டால் இந்தப் பயணம் இன்னும் சிறப்பாக அமையும்.


நண்பர்களே,

அறிவைப் பகிர்ந்துகொள்வோம்.

அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வோம்.

ஒன்றாக வளர்வோம்.


வாருங்கள்...  இணைந்து தேர் இழுப்போம்!


- இரா. முனியசாமி,

- GSTPS உறுப்பினர்

- 9551291721

No comments:

Post a Comment