Monday, August 24, 2026

PF பணத்தை பெறுவதில் (Claim) முக்கிய மாற்றங்கள் - 2026

 


புதிய Employees’ Provident Funds Scheme, 2026-ல் தொழிலாளர்களுக்கு மிகவும் முக்கியமான மாற்றங்களில் ஒன்று PF Claim / Withdrawal தொடர்பான விதிமுறைகள் ஆகும். குறிப்பாக, Partial Withdrawal, Final Settlement, Minimum Balance மற்றும் Claim filing ஆகியவற்றில் மாற்றங்கள் வந்துள்ளன.

 

1 ஜூலை 2026 முதல் புதிய Employees’ Provident Funds Scheme, 2026 நடைமுறைக்கு வந்துள்ளது. இதில் தொழிலாளர்கள் PF தொகையை Claim செய்வது தொடர்பாக சில முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

 

1. PF பணத்தை முழுமையாக எடுத்துவிட முடியாது

வேலை செய்து கொண்டிருக்கும் காலத்தில்  பகுதி அளவில் எடுக்கும் பொழுது (Partial Withdrawal), பி.எப். கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகை கட்டாயமாக மீதம் இருக்க வேண்டும்.

இந்த குறைந்தபட்ச தொகை (Minimum Balance), பணியாளர் மற்றும் நிறுவனம் செலுத்திய மொத்த தொகை மற்றும் அதற்கான வட்டி ஆகியவற்றின் அடிப்படையில் 25% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதாவது, மொத்த PF தொகை – 25% Minimum Balance = தகுதியான Withdrawal தொகை என்ற அடிப்படையில் கணக்கிடப்படும்.

 

2. பகுதியாக எடுக்கும் (Partial Withdrawal) விதிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன

 

மருத்துவச் செலவு, கல்வி, திருமணம், வீடு போன்ற பல்வேறு காரணங்களுக்காக இருந்த பழைய பல்வேறு விதிகள் எளிமைப்படுத்தப்பட்டு, புதிய Scheme-ல் விரிவான வகைப்படுத்தல் கொண்டு வரப்பட்டுள்ளது.  சில வகையான பணம் பெறுவதற்கு 12 மாத காலம் வேலை செய்திருக்கவேண்டும் போன்ற தகுதி நிபந்தனைகள் உள்ளன.

 

3. வேலை இழந்தால் PF தொகையைப் பெறுவதிலும் மாற்றம்

 

வேலை இழந்த உடனேயே முழு பி.எப் தொகையையும் மொத்தமாக (Final Settlement) ஆக எடுத்துக்கொள்ளும் பழைய நடைமுறைக்கு பதிலாக, புதிய திட்டத்தில் நீண்ட காத்திருப்பு காலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

பொதுவாக, வேலை முடிவடைந்த பிறகு 12 மாதங்கள் வேலை இல்லாத நிலையில் இருந்த பின்னரே முழுமையாக (Final Settlement) பெறுவதற்கான தகுதி ஏற்படும்.

 

4.  பணம் பெறுவதற்கு இணைய வழியில் (Claim Online) தாக்கல் செய்யலாம்

 

பணியாளர்கள் வேலையை விட்டு வெளியேறும் போது,  பி.எப். உறுப்பினர் தளத்தில் தாக்கல் செய்யலாம். தொழில்நுட்ப காரணங்களால் இணைய வழியில் சமர்ப்பிக்க முடியாத நிலையில், சில சூழ்நிலைகளில் நேரடியாக விண்ணப்பத்தை (Physical Claim) நிறுவனத்தின் (Employer) மூலம் சமர்ப்பிக்கவும் திட்டம் அனுமதிக்கிறது.

 

5. பணியாளர் கவனிக்க வேண்டியது

PF Claim செய்வதற்கு முன்பு, Aadhaar → UAN → Bank Account → KYC → Nomination ஆகிய விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்வது மிகவும் அவசியம்.

 

இறுதியாக... புதிய பி.எப் விதிகளின் நோக்கம், தேவையான நேரத்தில் பணியாளர்களுக்கு பி.எப் தொகையைப் பெறும் வசதியை எளிமைப்படுத்துவதுடன், ஓய்வுக்கால சேமிப்பில் ஒரு பகுதி தொடர்ந்து பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்வதாகும்.


- இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, வருமானவரி, இபிஎப், .எஸ்.ஐ, எல்.ஐ.சி ஆலோசகர்,

GSTPS உறுப்பினர்,

9551291721

No comments:

Post a Comment