Wednesday, September 30, 2026

ஜிஎஸ்டி போர்ட்டலில் உள்நுழைவது எப்படி ?

 


ஜிஎஸ்டி போர்ட்டல் ([www.gst.gov.in](http://www.gst.gov.in)) என்பது வரி செலுத்துபவர்கள் தங்கள் ஜிஎஸ்டி தொடர்பான அனைத்து சேவைகளையும் ஆன்லைனில் பயன்படுத்த உதவும் அதிகாரப்பூர்வ தளம். 

 

முன் குறிப்பு

 

- ஜிஎஸ்டிஐஎன் இருந்தால்தான் உள்நுழைய முடியும். 

- முதல் முறை உள்நுழைவு செய்ய தற்காலிகபயனர்பெயர்/ கடவுச்சொல் தேவை. 

- ஏற்கனவே உள்ள பயனர்கள் நேரடியாக Login → Username → Password → CAPTCHA மூலம் உள்நுழையலாம். 

- உள்நுழைந்த பிறகு அனைத்து GST சேவைகளையும் டாஷ்போர்டில் பயன்படுத்தலாம். 

- கடவுச்சொல்/பயனர்பெயர் மறந்தால் மீட்டெடுக்கும் வசதி உள்ளது.


இந்த அத்தியாயத்தில், முதல் முறையாக உள்நுழைவது, ஏற்கனவே உள்ள பயனர்கள் உள்நுழைவது மற்றும் உள்நுழைவு சிக்கல்கள் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் விரிவாகப் பார்ப்போம்.


1. உள்நுழைவதற்கு முன் தெரிந்திருக்க வேண்டியவை

 

- செயலில் உள்ள ஜிஎஸ்டிஐஎன் (GSTIN) இருக்க வேண்டும். 

- ஜிஎஸ்டி பதிவின் போது கிடைத்த தற்காலிக பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்(first-time login credentials) தேவை. 

- பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் செயல்பாட்டில் இருக்க வேண்டும். 

- உள்நுழைவு செய்ய [www.gst.gov.in](http://www.gst.gov.in) தளத்தையே பயன்படுத்த வேண்டும்.


2. முதல் முறை உள்நுழைவு செய்ய வேண்டிய படிகள்:

 

1. ஜிஎஸ்டி போர்ட்டல் முகப்பு பக்கத்தில் உள்ள முதல் முறை உள்நுழைவு (First Time Login) என்பதைத் தேர்வு செய்யவும். 

2. ஜிஎஸ்டி பதிவின் போது கிடைத்த தற்காலிக பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் உள்ளிடவும். 

3. உள்நுழைஎன்பதைக் கிளிக் செய்யவும். 

4. அடுத்த பக்கத்தில், எதிர்காலத்தில் பயன்படுத்த விரும்பும் புதிய பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் உருவாக்கவும். 

5. பாதுகாப்பு கேள்விகளை (Security Questions) அமைக்கவும் — இது கடவுச்சொல் மறந்தால் உதவும். 

6. படிவத்தை சமர்ப்பிக்கவும். 

7. இப்போது உள்நுழைவு பக்கத்திற்குத் திரும்பி, புதிய பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் கொண்டு உள்நுழையலாம்.

 

3. ஏற்கனவே உள்ள பயனர்கள் உள்நுழைவது

 

1. ஜிஎஸ்டி போர்ட்டல் முகப்பு பக்கத்தில் மேல் வலது மூலையில் உள்ள உள்நுழை (Login)பொத்தானைத் தேர்வு செய்யவும். 

2. பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும். 

3. திரையில் காட்டப்படும் CAPTCHA குறியீட்டைஉள்ளிடவும். 

4. உள்நுழை என்பதைக் கிளிக் செய்யவும். 

5. அடுத்த பக்கத்தில் தொடரவும் (Continue) என்பதைக் கிளிக் செய்தால், வெற்றிகரமாக டாஷ்போர்டை அணுகலாம்.

 

4. உள்நுழைந்த பிறகு கிடைக்கும் வசதிகள்

 

உள்நுழைந்தவுடன், பயனர் டாஷ்போர்டில் பின்வரும் சேவைகளைப் பயன்படுத்தலாம்:

 

- ரிட்டர்ன் தாக்கல் (GSTR-1, GSTR-3B, etc.) 

- வரி செலுத்துதல் (Challan Payment)

- லெட்ஜர்கள் பார்வை** (Cash, Credit, Liability Ledgers) 

- ரெஜிஸ்ட்ரேஷன் திருத்தம்

- ரிஃபண்ட் விண்ணப்பம்

- அறிவிப்புகள் (Notices) பார்க்க &பதில் அளிக்கலாம்

- ப்ரொஃபைல் மேலாண்மை (Mobile/Email update)

 

5. உள்நுழைவு சிக்கல்கள் ஏற்பட்டால் என்ன செய்யலாம்?

 

(a) கடவுச்சொல் மறந்தால்-- “**Forgot Password**” என்பதைத் தேர்வு செய்யவும்.  - OTP மூலம் புதிய கடவுச்சொல் உருவாக்கவும்

(b) பயனர்பெயர் மறந்தால்--

- “**Forgot Username**” விருப்பத்தைத் தேர்வு செய்யவும். 

- GSTIN மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல்/மின்னஞ்சல் மூலம் பயனர்பெயர் பெறலாம்.

 

(c) OTP வரவில்லை என்றால்-

-மொபைல் நெட்வொர்க் சரிபார்க்கவும் 

- Spam/Promotions மின்னஞ்சல் கோப்புறையைச் சரிபார்க்கவும் 

- 10 நிமிடங்கள் கழித்து மீண்டும் முயற்சிக்கவும்

 

(d) கணக்கு பூட்டப்பட்டால்-

- 5 தவறான முயற்சிகளுக்குப் பிறகு கணக்கு 15 நிமிடங்களுக்கு பூட்டப்படும். 

- பின்னர் மீண்டும் முயற்சிக்கலாம்.

 

- S. செந்தமிழ்ச்செல்வன்,

வரி ஆலோசகர்,

தலைவர்,

GSTPS


No comments:

Post a Comment