பின்னர், அந்த நிறுவனத்தின் பணியாளர் ஒருவர்
இ.எஸ்.ஐ. தொடர்பான தேவைக்காக அந்தக்
கிளையை
அணுகியபோது, நிறுவனத்தின் அஞ்சல் குறியீடு வேறுபடுவதால், அம்பத்தூர் கிளை பொருத்தமானது இல்லை. அம்பத்தூர் தொழிற்பேட்டை கிளை அலுவலகமே பொருத்தமானது என்றும், கிளை
மாற்றத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்கள்.
அதன்படி, இ.எஸ்.ஐ. நிர்வாகத் தளத்திலேயே சமர்ப்பிக்கும் வசதி
இருந்தது. 08.08.2026
அன்று கிளை மாற்றத்திற்கான விண்ணப்பத்தை
சமர்ப்பித்தோம். ஆனால், 25.08.2026 வரையிலும் அந்த
விண்ணப்பம் ஒப்புதல் தராமல் நிலுவையில் இருந்தது.
இதுகுறித்து இ.எஸ்.ஐ. தலைமை
அலுவலகத்தைத் தொடர்புகொண்டு கேட்டபோது, தளத்தில் விண்ணப்பித்தால் மட்டும் போதாது; தனியாக மின்னஞ்சல் மூலமும் கோரிக்கை அனுப்ப வேண்டும் என்று
தெரிவித்தார்கள்.
இங்குதான் ஒரு
நடைமுறைச் சிக்கல் எழுகிறது.
கிளை
மாற்றத்திற்கான வசதி
ஏற்கனவே இ.எஸ்.ஐ. நிர்வாகத் தளத்தில் வழங்கப்பட்டிருக்கும்போது, அதே
கோரிக்கைக்காக மீண்டும் தனியாக
மின்னஞ்சல் அனுப்ப
வேண்டிய நடைமுறை ஏன்
தேவைப்படுகிறது என்பது
புரியவில்லை. மேலும்,
Shram Suvidha தளத்துடன் இ.எஸ்.ஐ. தொடர்புடைய தகவல்களை அஞ்சல் கோடு வாரியான தகவல்களை
ஒருங்கிணைத்துவிட்டால், இதுபோன்ற தேவையற்ற அலைச்சல்களையும் காலதாமதங்களையும் தவிர்க்க முடியும்.
ஆகையால் இ.எஸ்.ஐ (Registration) பதிவு செய்யும் பொழுது கவனமாக
இருங்கள். இ.எஸ்.ஐ.
பதிவு
செய்யும்போது தேர்வு
செய்யப்பட்ட கிளை
அலுவலகம், நிறுவனத்தின் உண்மையான முகவரி
மற்றும் அஞ்சல்
குறியீட்டிற்கு ஏற்ப
இல்லாத
நிலை
ஏற்பட்டால், பின்னர் கிளை மாற்றத்திற்கான விண்ணப்பம் தேவைப்படலாம்.
மேலும்,
இணையதளத்தில் விண்ணப்பம் செய்துவிட்டோம் என்று
மட்டும் நம்பாமல், விண்ணப்பத்தின் நிலை மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலகத்தின் கூடுதல் நடைமுறைகள் குறித்து உறுதி செய்து கொள்வது பாதுகாப்பானது.
இத்தகைய நடைமுறைகள் குறித்து இ.எஸ்.ஐ. நிர்வாகம் தெளிவான வழிகாட்டுதலை வழங்கி, இணையதள விண்ணப்பம் மூலமாகவே முழுமையான செயல்முறையை முடிக்கக்கூடிய வகையில் ஏற்பாடு செய்தால், நிறுவனங்களுக்கும் வரி ஆலோசகர்களுக்கும் தேவையற்ற சிரமங்கள் பெருமளவு குறையும்.
இரா. முனியசாமி,
ஜி.எஸ்.டி,
வருமானவரி,
இபிஎப்,
இ.எஸ்.ஐ,
எல்.ஐ.சி ஆலோசகர்,
GSTPS உறுப்பினர்,
9551291721

No comments:
Post a Comment